என் மலர்
கன்னி
இந்தவார ராசிபலன்
22.7.2024 முதல் 28.7.2024 வரை
அனைத்து இடையூறுகளும் விலகி, காரிய சித்தி உண்டாகும் வாரம். ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சூரியன் சுக்ரன் சேர்க்கை இருப்பதால் இது கன்னி ராசிக்கு ஏற்றத்தை, சுபத்துவத்தை மிகைப்படுத்தும் அமைப்பாகும். அரசாங்க உதவி கண்டிப்பாக கிடைக்கும். பெண்களுக்கு உயர் ரக ஆடை ஆபரண சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும்.வீடு கட்ட கடன் உதவி கிடைக்கும். திருமண முயற்சியில் திருப்பம் உண்டாகும். குழந்தைகளால் ஏற்பட்ட கவலை குறையும். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
புதிய எதிர்பாலின நட்பால் ஏற்பட்ட சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். வீண்பழிகள் அகலும். வரவை விட செலவு அதிகமாகும். மாணவர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஆதரவு, அனுசரனை கூடும்.சிலரின் வாழ்க்கைத் துணை விரும்பத்தகாத இடமாற்றங்களை சந்திக்க நேரிடும். வைத்தியம் பலன் தரும். 27.7.2024 அன்று பகல் 12.59-மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அடுத்தவர் பிரச்சனையில் தலையிடாதீர்கள். பெண்களுக்கு தேவையற்ற மனக்கவலையால் முக்கிய வேலைகளில் மனம் லயிக்காது. ஆடி வெள்ளிக்கிழமை புற்று வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






