என் மலர்
கன்னி
இந்த வார ராசிப்பலன்
நிம்மதியான வாரம். ராசியை குரு பார்ப்பதால் உங்களுடைய பணிகளை விரைவாகவும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். மிக மிக சிறப்பான நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொட்டது எல்லாம் துலங்கும். ஜனவசியம் ஏற்படும். தெளிவான மன நிலையோடு செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு மகழ்ச்சி தரும். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்வதால் குல தெய்வ அனுகிரகம் உண்டாகும்.
பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கவலை அகலும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு சிறு பதவி உயர்வு கிடைக்கும். வீடு, நிலம், தோட்டம், வாகன யோகமும் உண்டாகும். சிலர் வீட்டை புதுப்பிப்பார்கள். தாய் வழிச் சொத்து, உயில் ஆதாயம் உண்டு. எதிரிகளின் பலம் குறையும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோக நற்பலன் தரும்.பிள்ளைகளின் கடமைகளை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம், வாங்கும் யோகம் உண்டாகும். திருமணத்திற்கான வரன்கள் தேடி வரும். லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406