என் மலர்

  கன்னி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  இந்த வார ராசிப்பலன்

  தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் வக்ரம் பெற்று விரயாதிபதி சூரியனுடன் சுக ஸ்தானத்தில் செவ்வாயின் எட்டாம் பார்வையில் இருப்பதால் விரக்தி மனப்பான்மை உருவாகும். ஆனால் குருவின் பார்வை பட்ட இடங்கள் பல மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. எந்தக் கை உங்களை விட்டாலும் நம்பிக்கையை விடாமல் இருப்பது முக்கியம். புதிய முதலீடுகளை தவிர்த்தல் நலம். பார்க்கும் வேலையை மாற்றக்கூடாது.

  சிலருக்கு அசையாச் சொத்து, பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப விரயம் உண்டாகும். வாழ்க்கை துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு.புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும். 2.1 .2023 இரவு 8.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பதுடன் ஓய்வு நேரம் குறையும். அலைச்சல் மிகுந்த பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. ஏகாதசியன்று துளசி மாலை அணிவித்து பெருமாளை வழிபடவும்.

  பிரசன்ன ஜோதிடர்

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×