என் மலர்

  கன்னி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  இந்த வார ராசிப்பலன்

  23.1.2023 முதல் 29.1.2023 வரை

  தடைகள் தகரும் வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு நான்கில் நின்று பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தை தன் வீட்டைத்தானே பார்ப்பதால் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணிபுரிபவர்களின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாகவே வந்து சேரும். வெளிநாடு சென்றவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் சிலருக்கு அரசியல் ஆசை துளிர் விடும். திருமணத் தடை அகலும்.பார்த்துச் சென்ற வரனிடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். கன்னி ராசியினர் தாத்தா பாட்டியாகும் யோகம் உள்ளது.

  சில பிள்ளைகள் கல்விக்காக விடுதிக்கு செல்வார்கள். பெண்களுக்கு தந்தையின் பூர்வீக வீடு, பங்களா கிடைக்கும். தம்பதிகளிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கும். சிலருக்கு கண், காது சார்ந்த பிரச்சினைக்கு மருத்துவம் செய்ய நேரும். 27.1.2023 மாலை 6.35க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அனைத்து செயலிலும் நிதானம் மற்றும் பொறுமை மிக முக்கியம். நேர் மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். கருமாரியம்மன் வழிபாடு மேலும் சிறப்பை தரும்.

  பிரசன்ன ஜோதிடர்

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×