என் மலர்
கன்னி
வார ராசிபலன் 4.1.2026 முதல் 10.1.2026 வரை
4.1.2026 முதல் 10.1.2026 வரை
கன்னி
பொறுப்புகள், கடமைகள் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். பிறரை நம்பி களத்தில் இறங்கி ஏமாற்றம் அடைந்த நீங்கள் சுய நம்பிக்கையில் இழந்தததை ஈடுகட்டுவீர்கள். இதுவரை உங்களைத் துரத்திய அவமானம், நஷ்டம், கவலைகள் விலகும். எதிர்காலத்தில் உங்கள் பெயர் பிரகாசிக்குமளவு புகழ், பெருமை, கவுரவம் சேரும். ஜனன கால ஜாதரீதியாக சாதகமான தசாபுக்திகள் நடந்தால் நன்மையின் அளவை அளவிட முடியாத வளர்ச்சி உண்டு. கண்டகச் சனி பற்றிய பயம் விலகும்.
பொருளாதார பற்றாக்குறை அகலும். வர வேண்டிய கடன் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடனை திரும்ப செலுத்துவீர்கள். பெண்களுக்கு பொருளாதாரத்தில் தன் நிறைவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் மனம் மகிழும் சம்பவம் நடக்கும். தொழில் உத்தியோகம் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். அரசு வேலைக்கான முயற்சி கைகூடும். புத ஆதித்ய யோகத்தால் மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். பள்ளி கல்லூரிகள் மூலம் கல்வி சம்பந்தமான சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உள்ளது. தினமும் திருகோளாறு பதிகம் படிக்கவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






