என் மலர்
கன்னி
வார ராசிபலன் 30.11.2025 முதல் 6.12.2025 வரை
30.11.2025 முதல் 6.12.2025 வரை
கன்னி
நீண்ட கால லட்சியங்களும், குறிக்கோள்களும் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரே பத்தாம் அதிபதியாக இருப்பதால் தொழில் மூலமாக தன வரவு அதிகமாகும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். இதுவரை உங்களுக்கு இருந்த பிரச்சிினைகள் எல்லாம் சூரியனை கண்ட பணி போல் விலகும்.
சிந்தனைகள் தெளிவாகும். தடைபட்ட கனவுகள் லட்சியங்களை நிறைவேற்ற உகந்த காலமாகும். நிதானமாக செயல்படுவீர்கள். புதிய வீடு வாங்குதல் வாகனம் வாங்குதல் போன்ற செயல்களில் ஆர்வம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். அரசு மற்றும் அரசாங்க பணிகளால் ஆதாயங்கள் கிடைக்கும். சிலர் புதிய ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பார்கள்.
1.12.2025 அன்று இரவு 11.18 முதல் 3.12.2025 அன்று இரவு 11.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற ஆசைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் விபரீத விளைவுகளை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவபுராணம் படித்து சிவபெருமானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






