என் மலர்
கன்னி
வார ராசிபலன் 23.11.2025 முதல் 29.11.2025 வரை
23.11.2025 முதல் 29.11.2025 வரை
கன்னி
சிக்கல்கள் மற்றும் சிரமங்களிலும் இருந்து விடுபடும் காலம். ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெறுகிறார். லாப ஸ்தானத்தில் நிற்கும் குரு பகவான் என கிரக நிலைகள் மிக மிக சாதகமாக உள்ளது. பண வரவு திருப்தியாக இருக்கும். பொருளாதாரத்தில் நிலவிய ஏற்ற இறக்க மந்த நிலை மாறும். தடைபட்ட திருமண முயற்சிகள் துரிதமடையும்.
விலகிச் சென்ற உறவுகள், உடன் பிறந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். சிலருக்கு நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் ஏற்படும். அல்லது வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபம் அதிகரிக்கும். வயோதிகர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும். புதிய எதிர்பாலின நட்பால் அசவுகரியங்கள் ஏற்படும். தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






