என் மலர்
கன்னி
வார ராசிபலன் 21.12.2025 முதல் 27.12.2025 வரை
21.12.2025 முதல் 27.12.2025 வரை
கன்னி
முயற்சிகளில் வெற்றி பெறும் வாரம். ராசி அதிபதி புதன் 3-ம்மிடமான வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்ப வாழ்க்கையில் சில சங்கடங்கள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். துடிப்புடன் செயல்பட்டு தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள். பங்குதாரர் மற்றும் வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் கணவரின் தொழில், உத்தியோக உயர்வால் நிம்மதி அடைவார்கள்.
கணவன் மனைவி இடையே சின்னச்சின்ன ஊடல்கள் வந்து போகும். கடன் நோய் எதிரி சார்ந்த பிரச்சினைகள் குறையும். எந்த பிரச்சினைகளையும் சமாளிக்கும் தைரியம் அதிகரிக்கும். கடந்தகால உழைப்பிற்கான பலன் இப்பொழுது கை கொடுக்கும். முன்னோர்களின் நல் ஆசியும் குலதெய்வ கடாட்சமும் உண்டாகும்.
பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த தீராத சிக்கல்கள் தீரும். மாணவர்கள் ஆரோக்கியத்திலும், கல்வியிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






