என் மலர்
கன்னி
வார ராசிபலன் 2.11.2025 முதல் 8.11.2025 வரை
2.11.2025 முதல் 8.11.2025 வரை
கன்னி
வெற்றிகரமான வாரம். ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் வெற்றி ஸ்தான அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்றுள்ளார். ஆட்சி பலம் பெறும் சுக்கிரனால் தனம், வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானம் பலப்படுகிறது. காழ்ப்புணர்ச்சியால், தவறான புரிதலால் பிரிந்த குடும்ப உறவுகள் உங்களை புரிந்து கொள்வார்கள். சில திட்டங்களை செயல்படுத்த போராடினாலும் முடிவில் வெற்றி வாகை சூடுவீர்கள். நீச்ச பங்க ராஜயோக சூரியனால் அரசின் சலுகைகளில் முன்னுரிமை உண்டு. விவசாயிகளுக்கு தடைபட்ட குத்தகைப் பணம் கிடைக்கும்.
காலி மனை வியாபாரிகளுக்கு நல்ல ஆதாயம் உண்டு. இழுபறியில் நின்ற தந்தைவழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும். அசையாச் சொத்தை அடமானம் வைத்து தொழிலுக்கு பயன்படுத்துவீர்கள். 4.11.2025 அன்று பகல் 12.34 முதல் 6.11.2025 பகல் 11.47 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையைச் சோதிக்கும் பல்வேறு அனுபவங்களை சந்திக்க நேரும். எனவே பிறரிடம் பேசும் போது பொறுமை, நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. காவல் தெய்வங்களை வழிபடுவதால் அனைத்து விதமான சுப பலன்களும் உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






