என் மலர்tooltip icon

    கன்னி

    வார ராசிபலன் 11.1.2026 முதல் 17.1.2026 வரை

    11.1.2026 முதல் 17.1.2026 வரை

    கன்னி

    உற்சாகம் பொங்கும் மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி புதன் 4,7ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார்.எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தனித் திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் கிடைக்கும். சிலர் சொந்த வீட்டில் இருந்து மன மாற்றத்திற்காக வாடகை வீடு செல்லலாம். அரசு ஊழியர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.

    திருமணத்தடை அகலும். சிலருக்கு மறுமண யோகம் உண்டாகும். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும்.சொத்து தொடர்பான செயல்களில் இடைத் தரகர்களை நம்பி பணம் கொடுப்பதை தவிர்க்கவும்.ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பெண்களுக்கு தாய் வழிச் சீதனம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிரிகளின் பலம் குறையும். கருடாழ்வாரை வழிபட நிரந்தரமான முன்னேற்றம் உண்டாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×