என் மலர்

    கன்னி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo

    இந்த வார ராசிப்பலன்

    6.3.2023 முதல் 12.3.2023 வரை

    சிறப்பான பலன்கள் தேடி வரும் வாரம். சுக ஸ்தான அதிபதி மற்றும் களத்திர ஸ்தான அதிபதி குரு உச்சம் பெற்ற தனம் வாக்கு குடும்ப ஸ்தானாதிபதி மற்றும் பாக்கிய அதிபதி சுக்ரனுடன் இணைந்து பலம் பெறுவதால் சுகபோக வாழ்க்கை உண்டாகும். தாய், தந்தை வழி உறவுகளின் அன்பும், அரவணைப்பும் கூடும். பதினாறு வகைச் செல்வங்களும் நிரம்பும். ஆடம்பரமான சொத்துக்கள் சேரும்.

    விவசாயம், ரியல் எஸ்டேட், கால்நடை வளர்ப்பவர்களுக்கு சிறிய முயற்சியில் அதிக வருமானம் கிடைக்கும். உழைக்காத வருமானம் உண்டு.பயன்படுத்த முடியாமல் கிடந்த முன்னோர்களின் சொத்துகளால் ஆதாயம் உண்டாகும். தடைபட்ட வாடகை வருமானம் வரத்துவங்கும் . அரச பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு.புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய் பெருகும். சொத்து இல்லாதவர்களுக்கு புதிய வீடு, வாகன யோகம் உண்டாகும்.

    கூட்டுக் குடும்பத்தில் நிலவிய சலசலப்பு குறைந்து கலகலப்பு நிலவும்.சிலருக்கு மறுமணம் நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களின் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப பேசி காரியம் சாதிப்பீர்கள். மாசிமகத்தன்று பால் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×