என் மலர்
கன்னி
இந்த வார ராசிப்பலன்
13.2.2023 முதல் 19.2.2023 வரை
நிறைந்த மனதோடு நிம்மதியாக செயல்படும் வாரம். 2,9-ம் அதிபதி சுக்ரன் ராசிக்கு ஏழில் உச்சம் பெறுவதால் பாக்கிய அதிபதி பலம் பெறுகிறார். அதிர்ஷ்டமும் கவுரவப் பதவிகளும் தேடி வரும். திடீர் அதிர்ஷ்டத்தால் ஏற்றம் உண்டாகும். ஆடம்பரச் செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்க திட்டமி டுவீர்கள்.
பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். முன்னோர்களின் நல்லாசியும், ஆஸ்தியும் கிடைக்கும். ஆயுள் ஆரோக்கியம் முன்னேற்றம் தரும். தடைபட்ட அனைத்து முயற்சிகளும் துரிதமாகும். தொழிலை விரிவுபடுத்த தேவையான பொருளாதார உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும்.உயர் கல்வி முயற்சி சித்திக்கும். நல்ல நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள். சிலருக்கு அந்தஸ்தான சொகுசு கார் வாங்கும் அமைப்பு உண்டாகும்.
வாழ்க்கைத் துணைக்கு கவுரவமான வேலை கிடைக்கும். ஆன்மீகச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகள் உள்ளது. திருமண முயற்சிகள் வெற்றி தரும். எதிர் பாலினத்தவரால் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். மேலும் நன்மையை அதிக ரிக்க சிவராத்திரியன்று சிவனுக்கு கரும்புச்சாறு அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406