என் மலர்

  கன்னி - சுபகிருது வருட பலன்

  சிம்மம்

  சுபகிருது வருட பலன் - 2022

  புத பகவானின் ஆசி பெற்றகன்னி ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டில் அதிர்ஷ்டம் உங்களுடன் உறவாட நல் வாழ்த்துக்கள்.

  உங்கள் ராசிக்கு 8ம் இடத்திற்கு ராகு பகவானும், 2ம் இடத்தில் கேது பகவானும் சஞ்சரிக்கிறார். குரு பகவான் 7ம் இடத்தில் நிற்கிறார். சனி பகவான் 5,6 ம் இடத்தில்பயணிக்கிறார்.7ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்ற குருவின் பார்வை ராசிக்கு இருப்பதால் ஒருவருட காலத்திற்கு குருவின் பார்வை கவசமாககாக்கும் என்பதால் தைரியமாக, தெம்பாக இருக்கலாம். 8ம்மிட ராகு விபரீத ராஜ யோகத்தை தர விருக்கிறார்.

  2ம்மிட கேதுவால் சில மன சஞ்சலம் ஏற்படலாம். 17.1.2023 வரை சனியின் சஞ்சாரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் விதத்தில் உள்ளது. சனி பூர்வ புண்ணியத்துக்கு காரகன்என்பதால் குல தெய்வ அனுகிரகம் மற்றும் முன்னோர்களில் நல் ஆசிகள் உள்ளது. எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். சரியான திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவீர்கள். தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும். ஆன்ம பலம் பெருகும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம் , அதிர்ஷ்டக்குறைபாடு இருந்த இடம் தெரியாது. அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்.

  குடும்பம்: ஒரு குடும்ப உறவுகளின் ஒற்றுமையை நிர்ணயிப்பதில் பணமும், சொத்தும் முக்கிய காரணியாக உள்ளது. பணம் குவியும் காலத்தில் உறவுகள் ரத்தின கம்பளம் விரிக்கும். பிற நேரத்தில் ஏளனப்படுத்தும்.இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்தில் கோட்சார கேது சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகள் விலகிச் செல்வது போன்ற உணர்வு உண்டாகும்.யாரையும் பார்க்கவோ, பேசவோ பிடிக்காது. சிலர் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு வெளியூர் என வாழ நேரலாம். சிலர் உறவுகளிடம் மனஸ்தாபத்தால் தனிமையாக வாழ விரும்பலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது.அடுத்தவரின் குறுக்கீடு மிகுதியாகும். சம்பந்தமில்லாத குற்றத்தில் உங்களை மாட்டி வம்பு வழக்கை உருவாக்குவார்.

  ஆரோக்கியம்:ராகு/கேது மற்றும் சனியால் ஆரோக்கியத்தில் சிறு பின்னடைவு இருக்கவே செய்யும். உடல் உஷ்ணம், அஜீரணம் தொடர்பான நோய்கள் சங்கடத்தில் ஆழ்த்தும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆயுளை அதிகரிப்பார், ஆனால் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடக் கூடிய நோய்களின் வீரியத்தை அதிகப்படுத்தி உடல் தளர்ச்சியையும் மனபயத்தையும்மிகைப்படுத்துவார். அவ்வப்போது உடல் களைப்பால் அவதி அசௌகரியங்களால்ஏற்படும். சிலருக்கு கண் பார்வை குறையும். ஒருசிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யநேரும்.

  திருமணம்:8ல் ராகு, 2ல் கேது என்பதால்கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்பட்டுள்ளது. ராகு/கேது தசை, புத்தி நடப்பவர்கள் சுய ஜாதகத்தை பரிசீலிக்கவும். குரு தசை, புத்தி நடப்பவர்களுக்கு குரு பலத்தால் பெரியோர்களின் நல்லாசியால் திருமணம் விமரிசையாக நடக்கும்.

  பெண்கள்: 8ம்மிட ராகு பெண்களுக்கு மாங்கல்ய தோஷத்தை தருவார் என்பதால் ஒரு நல்ல நாளில் மாங்கல்யத்தை தங்க செயினில் போடாமல் மஞ்சள் கயிற்றில் அணிந்து கொள்ளவும். சிலருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு வம்பு, வழக்கு வரலாம். இந்த ஒன்றரை ஆண்டுகள் தேவையற்ற பேச்சை குறைத்தாலே எந்த பாதிப்பும் வராது. அறிமுகம் இல்லாத பழக்கம் இல்லாத நபர்களிடம் குடும்ப விபரங்களை பகிரக் கூடாது. விலையுயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் கொடுக்க கூடாது. வாங்க கூடாது.காஞ்சி காமாட்சியை வழிபட தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.

  மாணவர்கள்:கல்வி முன்னேற்றத்திற்கு விடுதியில் தங்கி படிக்கலாம். ராசிக்கும் 3ம் இடத்திற்கும் குருப் பார்வை இருப்பதால் படிக்கும் பாடம் நன்றாக புரியும். இது வரை சுமாராக படித்தவர்கள் கூட நன்றாக படிக்க துவங்குவார்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் நல்ல மதிப்பெண் எடுப்பீர்கள்.

  உத்தியோகஸ் தர்கள்:அலுவலகப் பணிகள் வழக்கம் போல் நடக்கும். ஆனால் வேலைப் பளு அதிகமாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு இல்லை. கடுமையாக உழைத்தாலும் உழைப்பிற்கான ஊதியம் நற்பெயரும், அங்கீகாரமும் கிடைக்காது.

  முதலீட்டாளர்கள்:சுய தொழில் புரிவர்களுக்கு தொழில் நடக்கும். தொழில் நடத்த தேவையான பொருளாதாரத்தை எப்படியாது திரட்டுவீர்கள். கூட்டம் கலை கட்டும். ஆனால் கல்லாவில் காசு இருக்காது. சிலர் பணத்தை இரட்டிப்பாக்குவது போன்ற செயல்களில் முதலீடு செய்து அதிர்ஷ்ட நம்பி பணத்தை இழக்க வாய்ப்புள்ளது. தொழில் கூட்டாளிகளால் வம்பு வழக்கு வரலாம். அனுசரித்துச் செல்ல வேண்டிய காலம் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.

  அரசியல்வாதிகள்:அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பேசவேண்டும். எதிர்கட்சியினர் உங்கள் வார்த்தையைக் கொண்டே உங்களுக்குகலகத்தை ஏற்படுத்துவார்கள். அதனால் களங்கம் தரும் வீண் விமர்சனம், கவுரவக்குறைவு உருவாகலாம்.

  கலைஞர்கள்:கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ராகுவும், கேதுவும் சாரப் பரிவர்த்தனையில் சஞ்சரிக்கும் காலத்தில் பிரமாண்ட வாய்ப்புகள் தேடி வரும்.திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வருமானத்தை மறு முதலீடாக மாற்றக்கடாது.

  விவசாயிகள்:ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் விளைச்சல் மற்றும் அறுவடை நன்றாக இருக்கும்.பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் மிகுதியாக இருக்கும். கோட்சாரம் சற்று சாதகமற்று இருப்பதால் குறுகிய கால பயிர்களை பயிரிட பாதிப்பு இருக்காது.

  கவனமாக செயல்பட வேண்டிய காலம்

  ராகு/கேது: 21.2.2023 முதல்கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ராகு 8ம் இடத்திலும் கேது இரண்டாம் இடத்திலும் சஞ்சரிப்பதால் சுய சிந்தனை மட்டுப்படும். வந்த வாக்கிலும் போன வாக்கிலும் வாழ்க்கையை வாழ்வார்கள்.2,8ம்,இடத்துடன் ராகு- கேதுக்கள் சம்பந்தம் பெறும்போதுவட்டிக்கு வட்டிகட்ட நேரும். வழக்குகளில் சாதகமாகத் தீர்ப்பு வராது. ரேஸ், சூதாட்டம், லாட்டரி போன்றவை மீளமுடியாத இழப்பில் கொண்டு நிறுத் தும்.குடும்பத்தில்உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள். அரசுவழி ஆதாயம் கிடைப்பதில் தடை ஏற்படும்.ஒவ்வாமை ஏற்படும் என்பதால் வெளி உணவினை சாப்பிடாமல் வீட்டில் சமைத்த சூடான உணவுகளை சாப்பிட வேண்டும்.

  குரு:29.7.2022 முதல் 23.11.2022 வரை ராசிக்கு 5ல் சஞ்சரிக்கும் கோட்சாரசனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் பிள்ளைகளால் மன அமைதி குறையும். புத்திர பாக்கிய யோகத்தில் தடை ஏற்படும். உடல்நலம் பாதிக்கும்.அரசின் உதவித் தொகை கிடைப்பது தடைப்படலாம்.பயண அலைச்சல் மிகும். தீயவழியில் பொருள் விரயம் ஏற்படும். உங்களின் சொத்துகள் பிறரால் அனுபவிக்கப்படலாம். சிலர் மதம் மாறலாம் அல்லது கலப்புத் திருமணம் செய்லாம். உயர்கல்வி முயற்சிதடை, தாமதத்திற்குப் பிறகு பலிதமாகும்.

  பரிகாரம்:பிரதோச காலத்தில் பச்சரிசி மாவில் நந்திக்கு தீபம் ஏற்றி வழிபட கர்ம வினை தீரும். மன சஞ்சலம் நீங்கும்.

  சுப செலவுகள் அதிகரிக்கும்

  8ம்மிடராகுவாலும் 5ம்மிட சனியாலும் குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை அடைய முயற்சிப்பார்கள். விட்டதை பிடிக்கிறேன் என அதிர்ஷ்டத்தை துரத்துவார்கள். 8ம்மிட ராகு கெட்டவன் என்பதால்கிட்டிடும் ராஜ யோகம் என்பதால் சிலருக்கு சுப பலன்களும் நடக்கும். அதிர்ஷ்ட வசமாக வீடு, வாகனம், பொன், பொருள் சேர்க்கை, பிள்ளைகளின் திருமணம், கல்வி என சுப செலவுகள் ஏற்படலாம். 2ம்மிட கேதுவினால் பெரிய சேமிப்போ லாபமோ எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு பய உணர்வினால் நேரம், காலம், பொருள் விரயம் உண்டாகும். ராசிக்கு குருப் பார்வை இருப்பதால்பெரிய நஷ்டமோ, மிகுதியான அசுபமோ இருக்காது.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×