என் மலர்
சிம்மம்
வார ராசிப்பலன் 23.5.22 - 29.5.22
ராசி அதிபதி புதன் விரய அதிபதி சூரியனுடன் பாக்கிய ஸ்தானத்தில் இணைவதால் தடைபட்ட வெளிநாட்டு பயணம், வேலை வாய்ப்பு கை கூடும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் தேவைக்கு பணம் கிடைக்கும். 7-ல் செவ்வாய் மற்றும் 2-ல் கேது, 8-ல் ராகு இருப்பதால் கன்னி ராசிப் பெண்களுக்கு கோட்சார ரீதியான சர்ப்ப, செவ்வாய் தோஷத்தால் திருமண வாய்ப்புகள் தள்ளிப் போகலாம்.
கணவன், மனைவி ஒற்றுமை யாக இருந்தாலும் மூன்றாம் நபரின் குறுக்கீடு நிம்மதியின்மையை ஏற்படுத்தும் என்பதால் பிறரின் நயவஞ்சக பேச்சை நம்பக்கூடாது. செவ்வாயின் நேரடிப் பார்வை ராசியில் பதிவதால் எதையும் எதிர்கொள்ளும் துணிவும் மன தைரியமும் அதிகரிக்கும். 27.5.2022 நள்ளிரவு 12.38 முதல் 29.5.2022 காலை 11.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். திட்டமிட்டு செயல்பட முடியாது. அமாவாசையன்று பறவைகளுக்கு தானியம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406