என் மலர்tooltip icon

    கன்னி

    2025 புரட்டாசி மாத ராசிபலன்

    கன்னி ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவர் உச்சம் பெற்று, விரயாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே வருமானம் ஒருபுறம் வந்தாலும், விரயங்கள் மறுபுறம் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்றுவர வேண்டும் என்ற எண்ணம் பூர்த்தியாகும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடலாம். 10-ல் குரு இருப்பதால் பதவி மாற்றமும், இடமாற்றமும் வருவதற்கான அறிகுறி தென்படும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும்போது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர். வீடு வாங்குவதோ, வீடு கட்டுவதோ போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். 'கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்கலாமா?' என்ற சிந்தனை அதிகரிக்கும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் 'வேலையில் இருந்து விடுபட்டு, சுயமாக ஏதேனும் செய்யலாமா?' என்று சிந்திப்பார்கள்.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் உச்சம்பெறுவது நன்மைதான். என்றாலும் கேந்திராதிபத்ய தோஷம் பெற்றிருப்பதால் குடும்ப பிரச்சினை அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் உருவாகி மனக்கலக்கம் ஏற்படும். பெற்றோர் வழியில் வாழ்க்கைத் துணையின் உத்தியோகம் சம்பந்தப்பட்ட கவலை மேலோங்கும். என்ன இருந்தாலும் குருவின் பார்வைக்கு பலம் அதிகம் என்பதால், ஒருசில காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வியாபாரத்தில் இருந்த குறுக்கீடு அகலும். பூர்வீகச் சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்களை வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கைகூடும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழு வதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. 6-க்கு அதிபதி வக்ரம்பெறுவது நன்மைதான். என்றாலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் சனி அதிபதியாக விளங்கு வதால் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். சொத்துக்களால் பகை உருவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் வந்துகொண்டே இருக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு திருப்தி தரும். கலைஞர் களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் மேன்மை கிட்டும். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 24, 25, 29, 30, அக்டோபர்: 10, 11, 15, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    ×