என் மலர்
கன்னி
2026 மாசி மாத ராசிபலன்
பொறுப்பான கன்னி ராசியினரே!
அனுபவ அறிவால் வெற்றி பெறும் சாதகமான மாதம். முக்கியமான இடங்களுக்கு குருவின் பார்வை சாதகமாக உள்ளதால் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. பொறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சிலும், செயலிலும் அறிவு மேம்படும். உங்கள் சொல்வாக்கும், கவுரவமும் உயரும்.கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். இதுவரை சந்தித்த பிரச்சனைகள் பனி போல் விலகும். முடங்கி கிடந்த தடைபட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றி வாய்ப்பை தரும் இனிய ஆண்டாக மாறும். இழந்த அனைத்து இன்பங்களும் உங்களைத் தேடி வரப்போகிறது.
தொட்டது துளிர் விடும். பட்டது பூக்கும். திட்டமிட்ட காரியங்களை மெல்ல மெல்ல வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்பார்கள். வீடு கலகலப்பாக இருக்கும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணவரத்து கூடும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். பூர்வீகச் சொத்து, தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். சிற்றின்ப நாட்டம் அதிகரிக்கும். வேற்று மொழி கற்பதில் ஆர்வம் உண்டாகும். தொழில் ஒப்பந்தங்களை நன்றாக படித்த பின்பு கையெழுத்திடவும்.
தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும். சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும். ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து விதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளிக்கும் தைரியம், மனப்பக்குவம் உண்டாகும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். மன உளைச்சல் மன அழுத்தங்கள் நீங்கும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. கண்டக சனி பகவனால் திருமணம் தடைபடாது. பொருத்தமான ஜாதகம் வந்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். முதல் திருமணத்தில் தோல்வியை சந்தித்தவர்களுக்கு அடுத்த இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமையும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உள்ளது.
பொருளாதாரம்
நீண்ட நாட்களாக வராமல் இருந்த வரா கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். சிலருக்கு பெரிய தொகை கடனாக கிடைக்கும். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வசிக்கும் வீட்டை விரிவு செய்வீர்கள். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும்.
உத்தியோகஸ்தர்கள்
தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் மாதம். உங்களின் புகழ், அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும். விரும்பிய வேலை கிடைக்கும். வெளியூர், வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு இடம் பெயர நேரும். பேச்சுத் திறமையால் சாதகமான பலனை அடைவார்கள். அரசுப் பணியாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலர் வேலையில் இருந்து கொண்டு ஓய்வு நேரத்தில் சிறு தொழில் மூலம் வருமானம் ஈட்டலாம். வேலைச் சுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பெண்கள்
புதிய பெண் தொழில் அதிபர்கள் அதிகம் உருவாகுவார்கள். ஏற்கனவே சுய தொழிலில் இருக்கும் பெண்கள் தொழிலை பிவிருத்தி செய்வார்கள். புதிய தொழில் நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் கடன் வழங்க நிதி நிறுவனங்கள் முன்வரும். பல பெண்கள் உபரி லாபத்தால் நீண்ட கால கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவார்கள். கணவர், புகுந்த, பிறந்த வீட்டினரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். இதுவரை சரியில்லாத வேலை, குறைவான சம்பளத்தில் இருந்தவர்களுக்கு நல்ல கம்பெனியில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும். தீராத நோயால் அவதிப்பட்டவர்களுக்கு நோய் கட்டுப்படும்.
சூரிய கிரகணம்
மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. கன்னி ராசிக்கு 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் கிரகணம் ஏற்படுவதால் கையில் பணம் புரள்வதால் கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். சற்று ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி மன நிறைவு, நிம்மதி அதிகரிக்கும். பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு வாழ்க்கை வசந்தமாகும். வழக்குகள் சாதகமாகும் அல்லது தள்ளுபடியாகும்.
குரு உபதேசம், ஜோதிடம், மருத்துவம், யோகா, தியானம் போன்ற துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு செல்வது நல்லது. வெளிநாட்டு குடியுரிமை, விசா சார்ந்த பிரச்சனைகள் அகலும். ராகு, கேதுக்களின் நிலைப்பாடு சற்று சுமாராக உள்ளது. தன்னம்பிக்கையுடன் உரிய வழிபாட்டு முறைகளை கடைபிடித்தால் தெய்வத்தின் அருட்கடாட்சம் கிடைக்கும்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். ராசிக்கு 12ம் மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் லாப ஸ்தான அதிபதி சந்திரனுடன் கேது இணைந்து சந்திர கிரகண தோஷம் ஏற்படுகிறது. தூக்கம் சற்று குறைவுபடும். மனசஞ்சலம் பய உணர்வும் இருக்கும். குடும்ப உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக இருப்பீர்கள். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆதாயம் குறைவுபடும். பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி சீட்டு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
கை, கால் மூட்டு வலி, பாதம், இடது கண் போன்றவற்றில் பாதிப்பு இருக்கும். கண், மூட்டு அறுவை சிகிச்சைகளை ஒத்தி வைக்கவும். ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடிய உணவு சாப்பிடுவது நல்லது. கண் அறுவை சிகிச்சை செய்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும். உயிர் காக்க தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்றவர்கள் ஒரு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம். அறுவை சிகிச்சை அவசியம் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள் குல இஷ்ட தெய்வத்தை வழிபட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் கண்டகச் சனியின் தாக்கம் குறையும்.அனைத்து நன்மைகளையும் அடைய முடியும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






