என் மலர்tooltip icon

    கன்னி

    2025 ஆடி மாத ராசிபலன்

    கன்னி ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே ஆரோக்கிய தொல்லைகள் அதிகரிக்கும். பல பணிகள் அரைகுறையாக பாதியில் நிற்கலாம். திடீர் செலவுகளால், சேமிப்பு கரையும். மருத்துவச் செலவுகளும், மனக்கலக்கம் தரும் தகவல்களும் வரலாம். ஆயினும் உங்கள் ராசிநாதன் புதன் வக்ர இயக்கத்தில் இருப்பதாலும், குருவோடு இணைந்து இருப்பதாலும் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. விரயாதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் விரயத்திற்கேற்ற வரவு வந்துசேரும்.

    மிதுன - சுக்ரன்

    ஆடி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய ஸ்தானங்களுக்கு அதிபதியானவர். தனாதிபதியான சுக்ரன், தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். கொடுக்கல்- வாங்கல் திருப்தி தரும். குரு - சுக்ர சேர்க்கையின் காரணமாக எதிர்பாராத சில இனிய மாற்றங்கள் ஏற்படும். பயணங்களாலும் பலன் கிடைக்கும். குறிப்பாக வாழ்க்கைத் துணை அல்லது பிள்ளைகளின் வேலைக்காக எடுத்த முயற்சி பலன் தரும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் வருமானத்தால் மகிழ்ச்சி உண்டாகும். ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் நடைபெறும் நேரம் இது.

    கன்னி - செவ்வாய்

    ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். 'கன்னி செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அஷ்டமாதிபதியான அவர் உங்கள் ராசிக்கு வரும்போது, சில இழப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றங்களை சந்திக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். சொத்துப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். வாங்கிய சொத்துக்களாலும் பிரச்சினை வரக்கூடும். பாகப்பிரிவினை சுமுகமாக முடிவடையாது. பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் பங்குதாரர்கள் விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர்.

    கடக - புதன்

    ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிநாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் பொழுது பொருளாதார மேம்பாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் நாடி வரும் நேரம் இது. வெளிநாடு செல்லும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சூரியனோடு புதன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். அரசு வழியில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு திடீரென பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பாராமல் வந்துசேரும். இக்காலம் ஒரு இனிய காலமாகவே அமையும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் போதுமானதாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு. கலைஞர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து வருமானம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 21, 22, 25, 26, 31, ஆகஸ்டு: 1, 6, 7.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    ×