என் மலர்tooltip icon

    கன்னி - தமிழ் மாத ஜோதிடம்

    கன்னி

    இந்த வார ராசிப்பலன்

    17.11.21 முதல் 15.12.21 வரை

    எத்தனை பிரச்சினை வந்தாலும் அதை எளிதில் சமாளிக்கும் கன்னி ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், தன ஸ்தானத்தில் சகாய ஸ்தானாதிபதி செவ்வாயோடு இணைந்திருக்கின்றார். எனவே பொருளாதாரத்தில் முன்னேற்றமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும். 6-ல் குரு இருப்பதால் பக்கத்தில் இருப்பவர்களிடம் பகைமை பாராட்டாமல் இருப்பது நல்லது.

    செவ்வாய்-சனி பார்வைக் காலம்

    மாதத் தொடக்கத்தில் இருந்து கார்த்திகை 20-ந் தேதி வரை செவ்வாய்-சனி பார்வை இருக்கின்றது. எனவே கொஞ்சம் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமிது. பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களை பாகப்பிரிவினை செய்துகொள்வதில் தாமதங்கள் ஏற்படும். சொத்துக்களை வாங்கும் பொழுது பத்திரங்களைச் சரிபார்ப்பது அவசியமாகும்.

    விருச்சிக புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை முதல் நாளே விருச்சிக ராசிக்குப் புதன் செல்கின்றார். உங்கள் ராசிநாதன் சகாய ஸ்தானத்தில் விரயாதிபதி சூரியனோடு இணையும் நேரத்தில் விரயங்கள் கூடுதலாகத் தான் இருக்கும். தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்குவதால் பழைய தொழிலைப் பைசல் செய்துவிட்டுப் புதிய தொழிலில் கவனம் செலுத்துவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக் கசப்புகள் மாறும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    தனுசு புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை 18-ந் தேதி தனுசு ராசிக்குப் புதன் செல்கின்றார். அங்குள்ள சுக்ரனோடு சேர்ந்து புத சுக்ர யோகத்தை உருவாக்குகின்றார். உங்கள் ராசிநாதன் புதனும் தனாதிபதி சுக்ரனும் இணைந்திருக்கும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். பொருளாதாரம் திருப்தி தரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். மங்கல ஓசை மனையில் கேட்கும் சூழல் அமையும். மக்கள் செல்வங்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தங்கம், வெள்ளி வாங்கும் யோகம் உண்டு.

    மகர சுக்ரனின் சஞ்சாரம்

    கார்த்திகை 19-ந் தேதி மகர ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

    விருச்சிக செவ்வாயின் சஞ்சாரம்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். பெரிய மனிதர்களின் தொடர்பு பகையாகிப் போகலாம். பொருளாதாரத்தில் சில இழப்புகளைச் சந்திக்கும் சூழ்நிலை உண்டு. மகிழ்ச்சி அதிகரிக்க மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 20, 21, 25, 26, டிசம்பர்: 1, 2, 6, 7

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு

    கன்னி

    தமிழ் மாத ராசிப்பலன்

    உதவி செய்வதால் பிறர் உள்ளத்தில் இடம்பிடிக்கும் கன்னி ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் உச்சம் பெற்றிருக்கிறார். குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. எனவே ஆரோக்கியம் சீராகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

    துலாம் - சுக்ரன் சஞ்சாரம்

    ஐப்பசி 2-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது அவருக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், பலம்பெறும் போது எடுக்கும் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காத இடத்தில் பணியாற்றி வந்தவர்களுக்கு, இப்போது நல்ல இடத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை அமையும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். இல்லத்தில் காலாகாலத்தில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் நடைபெற வழிபிறக்கும்.

    துலாம் - புதன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கும் 10-ம் இடத்திற்கும் அதிபதியான புதன், ஐப்பசி 6-ந் தேதி துலாம் ராசிக்குச் செல்கிறார். தன ஸ்தானத்தில் சூரியன், சுக்ரனோடு இணைந்திருக்கும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக அல்லது கல்யாணம் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் முயற்சி கைகூடும். தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமான பற்றாக்குறை அகலும். என்றைக்கோ வாங்கிப் போட்ட சொத்து பலமடங்கு உயரும்.

    மிதுன - செவ்வாய் வக்ரம்

    ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். அதே நேரம் மகரத்தில் உள்ள சனியை பார்க்கவும் ெசய்கிறாா். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ரம் பெறுவது நன்மைதான். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரும். சகோதரர்களோடு இருந்த மனப் போராட்டங்கள் அகலும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். இட மாற்றம், வீடு மாற்றம் எளிதில் அமையும். வழக்குகள் சாதகமாக முடியும். செவ்வாய் சனியைப் பார்ப்பதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.

    விருச்சிக - புதன் சஞ்சாரம்

    ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல் கிறார். உங்கள் ராசிநாதன் புதன், சகாய ஸ்தானத்திற்கு வரும் போது தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க எடுத்த முயற்சிகளில் அனு கூலம் உண்டு. உற்றார் உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். தற்காலிகப் பணியில் இருப்பவர் களுக்கு நிரந்தரப் பணி அமையும்.

    விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்

    ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதி யான சுக்ரன், சகாய ஸ்தானத்திற்கு வரும் போது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். பழைய ஆபரணங்களைக் கொடுத்துப் புதிய ஆபரணங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    குரு வக்ர நிவர்த்தி

    உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், மாதத் தொடக்கத்தில் வக்ரமாக இருக்கிறார். அவர் ஐப்பசி 30-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இதனால் அவரது பார்வைக்கு பலன் கூடுதலாகக் கிடைக்கும். அந்த வகையில் களத்திர ஸ்தானம் பலம்பெறுகிறது. எனவே இல்லத்தில் நடைபெறாதிருந்த சுபகாரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெறும். பொருளாதார நிலை திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 18, 19, 26, 27, 30, 31, நவம்பர்: 9, 10, 15, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    கன்னி

    தமிழ் மாத ராசிப்பலன்

    18.9.22 முதல் 17.10.22 வரை

    அமைதியாக இருந்து கொண்டு அரிய பணிகளைச் செய்யும் கன்னி ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, குடும்ப ஸ்தானத்தில் கேது பலம் பெற்றிருக்கிறார். 8-ல் ராகு சஞ்சரிக்கிறார். விரயாதிபதி சூரியன் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் விரயங்கள் அதிகரிக்கும்.

    கன்னி - சுக்ரன் சஞ்சாரம்

    புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்கு வரும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் திருப்தியாக இருக்காது. பெற்றோர் வழியில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பூர்வீக சொத்துகளைப் பிரித்துக்கொள்ள முன்வருவீர்கள். ஆனாலும் அது பாதியிலேயே நிற்கலாம். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    புரட்டாசி 16-ந் தேதி, கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் உங்கள் ராசியிலேயே உச்சம் பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். எடுத்த காரியங்கள் வெற்றியாகும். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். பணிபுரியும் இடத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர். பயணங்கள் பலன் தரும். பணப்பற்றாக்குறை அகலும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரலாம். பிள்ளைகள், மனைவிக்கு வேலை கிடைத்து வருமானம் அதிகரிக்கும்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும் இந்த நேரம் புதிய தொழில் வாய்ப்புகள் கைகூடும். கடன் சுமை ஓரளவு குறையும். செவ்வாய் பூமிகாரகன் என்பதால் வீடு கட்டுவது, வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

    செவ்வாய், சனி பார்வை இருப்பதால் ஒருசில சமயங்களில் மனக்குழப்பம் அதிகரிக்கலாம். பணப்புழக்கத்திலும் தடைகள் வரலாம். 6-க்கு அதிபதியான சனியை, எட்டுக்கு அதிபதியான செவ்வாய் பார்ப்பதால் விபரீத ராஜயோக அடிப்படையில் ஒருசில காரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.

    சனி வக்ர நிவர்த்தி

    புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகின்றார். இக்காலத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம்பெறுவதால் புதிய திருப்பங்கள் ஏற்படும். பொருளாதார நெருக்கடி நிலை மாறும். கடமையில் இருந்த தொய்வு அகலும். கலைத்துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அற்புதமான நேரமிது. புதிய ஒப்பந்தங்கள் வரலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு சில நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர். இனிய வாழ்வமைய எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    இம்மாதம் சூரிய பகவான் வழிபாடு காரிய வெற்றி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 20, 21, 29, 30, அக்டோபர்: 2, 3, 13, 14.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களோ, இடமாற்றங்களோ வரலாம். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், உடனுக்குடன் சரியாகிவிடும். குரு பார்வை இருப்பதால் பிள்ளைகள் அல்லது உடன்பிறப்புகள் வழியில் சுபகாரியப் பேச்சு கைகூடலாம். சனி பகவான் வக்ர இயக்கத்தில் பஞ்சம ஸ்தானத்தில் இருப்பதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.

    கன்னி

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.8.2022 முதல் 17.9.2022 வரை

    விருந்தினர்களை உபசரிப்பதில் வல்லவர்களாக விளங்கும் கன்னி ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அஷ்டமத்தில் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே சர்ப்ப தோஷத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறீர்கள். புது முயற்சிகளை யோசித்து செய்யுங்கள்.

    சிம்ம - சூரியன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில், விரயாதிபதியான சூரியன் மாதம் முழுவதும் சஞ்சரிக்கிறார். எனவே விரயங்கள் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். பிரபலமானவா்களை நம்பி செய்த காாியங்களில் பிரச்சினை ஏற்படலாம். சுபகாரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    ஆவணி 8-ந் தேதி உங்கள் ராசிக்கு வரும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். எனவே உங்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நேரம் இது. ராசிநாதன் புதன் பலம் பெறும் இந்த நேரத்தில் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். உடல்நலம் சீராகும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

    வக்ர புதன் சஞ்சாரம்

    ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 12-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவர் என்பதால் வக்ர காலத்தில் நற்பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் நிரந்தரப் பணி அமையும்.

    சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்

    ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறாா். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 12-ம் இடம் வரும்பொழுது குடும்பச்சுமை கூடும். குடியிருக்கும் வீட்டால் சில பிரச்சினைகள் உருவாகும். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். சகோதர வர்க்கத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டு வணிகம் செய்பவர்களும், பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்களும் கவனமாக செயல்படுங்கள்.

    குரு வக்ரமும், சனி வக்ரமும்

    மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ர இயக்கத்தில் உள்ளனர். உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவதால், சில நற்பலன்கள் கிடைக்கும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக மாறும். இல்லத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். சனியின் வக்ர காலத்தில் பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை ஏற்படும். ஆரோக்கியத் தொல்லையும் உண்டு.

    இந்த மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை வழிபாடு செய்து வந்தால் துயரங்கள் விலகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 20, 21, 25, 26, 31, செப்டம்பர்: 1, 5, 6, 16, 17 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் குருவும், சனியும் வக்ரமாக இருப்பதால் குடும்பச்சுமை அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். விரயங்களை சுபவிரயமாக மாற்றிக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கன்னி

    தமிழ் மாத ராசிப்பலன்

    17-07-2022 முதல் 16-08-2022 வரை

    நல்ல யோசனைகளை அள்ளி வழங்கும் கன்னி ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதோடு குரு பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால் நினைத்த காரியம் நிறைவேறும்.

    ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம், விரயங்கள் அதிகரிக்கலாம். சுபச் செலவுகளைச் செய்தால், வீண் விரயங்களில் இருந்து விடுபடலாம். வீடுமாற்றம், இடமாற்றம் ஏற்படும். வெளிநாட்டு முயற்சியில் இதுவரை இருந்த தடை அகலும். தொழில் முன்னேற்றத்திற்காகப் புதியவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்வீர்கள்.

    ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது பொருளாதாரம் மேம்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்துமுடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். பணியில் இருப்பவர்கள், சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். ஆபரண சேர்க்கை உண்டு.

    ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற குரு வக்ரம் பெறுவது யோகம்தான். 4-க்கு அதிபதி வக்ரம் பெறுவதால் சுக ஸ்தானம் பலமிழக்கிறது. எனவே ஆரோக்கியம் பாதிக்கும். இடம், பூமி வாங்கும் முயற்சியில் சிறு தடைகள் ஏற்பட்டு அகலும். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. தன்னிச்சையாகச் செயல்படுபவர்கள் சில தடுமாற்றங்களை சந்திப்பர். 7-க்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவதால் வாழ்க்கைத் துணை வழியே சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பாசம் மிக்கவர்கள் பகையாக மாறலாம். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துச் செல்வது நல்லது.

    ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பாக்கிய ஸ்தானம் பலப்படுகிறது. எனவே பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று மகிழ்ச்சியைத் தரும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்திவைப்பீர்கள்.

    இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் வராஹி அம்மனை வழிபடுங்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 23, 25, 29, 30, ஆகஸ்டு: 4, 5, 9, 10 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதத் தொடக்கத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிம்ம புதனின் சஞ்சாரத்திற்குப் பிறகு செலவு கூடும். கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்க அல்லது தொழில் தொடங்குவீர் கள். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். சம்பள உயர்வுடன் கூடிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அதுவும் கைகூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும்.

    கன்னி

    தமிழ் மாத ராசிப்பலன்

    ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை

    நல்ல கருத்துக்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் கன்னி ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் பரிபூரண பார்வையும் கிடைக்கிறது. எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியா எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

    ஆனி 4-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய திருப்பங்களும், தொழில் முன்னேற்றமும் ஏற்படும். பெண் குழந்தைகளின் சுபச்சடங்குகள் மற்றும் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். முன்னோர் சொத்துக்களில் ஆதாயமும், முறையான பங்கீடுகளும் வந்து சேரும்.

    ஆனி 11-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியான புதன், 10-ம் இடத்திலேயே சஞ்சரிப்பது யோகம் தான். உங்கள் ராசிநாதனாகவும் புதன் இருப்பதால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல தகவல்கள் உங்களைத் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ஆனி 12-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 8-க்கு அதிபதியான செவ்வாய், அஷ்டமத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. எதையும் ஒருமுறைக்கு இருமுறை செய்யும் சூழ்நிலை உருவாகும். விரயங்கள் அதிகரிக்கும். வீடுமாற்றம், இடமாற்றம் வேதனை தரு வதாக அமையலாம். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் லாப ஸ்தானத்திற்கு வரும் போது பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உடன் பிறப்புகளின் வழியே இருந்த கோபங்கள் மாறும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் வாய்ப்பு உண்டு. வீடு, இடம் வாங்கும் யோகம் ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.

    ஆனி 29-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். 9-க்கு அதிபதி 10-ல் சஞ்சரிக்கும் இந்த நேரம், ஒரு பொற்காலம்தான். தொழிலில் கிளைத் தொழில் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களுக்குள் ஏற்பட்ட உரசல்கள் மாறும். குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களுக்கும் வேலை கிடைத்து, வருமானம் பெருகும்.

    இம்மாதம் தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 15, 16, 26, 27, ஜூலை: 1, 2, 8, 9 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் வரவும், செலவும் சமமாகும். குரு பார்வை இருப்பதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவரும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு பாராட்டும், புகழும் கூடும். மேலிடத்தில் கேட்ட சலுகைகளும் கிடைக்கும்.

    சிம்மம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

    உற்றார், உறவினர்களின் உள்ளம் அறிந்து உதவும் கன்னி ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் வக்ரம் பெறுகிறார். மேலும் குருவினுடைய பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. தன, பாக்கியாதிபதி சுக்ரன், சப்தம ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும்.

    மீன - செவ்வாய் சஞ்சாரம்

    வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அபதிபதியான செவ்வாய், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது சகோதரர்களால் சங்கடம் வரலாம். தொழிலில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பிறரை நம்பி செய்த காரியம் மன வாட்டம் தரும்.

    சனி - செவ்வாய் பார்வைக் காலம்

    வைகாசி மாதம் 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கிறார். உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானம் பலமிழக்கிறது. எனவே வாழ்க்கைத் துணை வழியே சில பிரச்சினை ஏற்படலாம். வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு சில தடுமாற்றங்களும், தடைகளும் ஏற்படும். பிள்ளைகளை நெறிப்படுத்துவதன் மூலமே நிம்மதி பெறமுடியும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் தடை வரலாம். வீண் விரயங்கள் ஏற்படும் நேரம் இது.

    புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

    வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். அது உங்களுக்கு யோகம்தான். உடல்நலம் சீராகும். நினைத்ததை நினைத்தபடி செய்வீர்கள். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு, பிரபல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரலாம்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    இதுவரை மீனத்தில் உச்சம் பெற்று சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். அவர் தன் சொந்த வீட்டைப் பார்ப்பதால் தன ஸ்தானம் வலுவடைகிறது. பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பெண்வழிப் பிரச்சினை அகலும். புதிய தொழிலுக்கு வங்கிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், ஊதிய உயர்வு உண்டு. படிப்பிற்கேற்ற நல்ல வேலை அமையும்.

    மகரச் சனியின் வக்ர காலம்

    உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், வைகாசி 11-ந் தேதி மகரத்தில் வக்ரம் பெறுகிறார். இந்த நேரம் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவிழப்பதால் எதிலும் கவனம் தேவை. சொத்துக் களாலும், சொந்தங்களாலும் சில பிரச்சினை ஏற்படலாம். விரயங்களை, சுப விரயமாக மாற்றுங்கள். உத்தியோகத்தில் சில சர்ச்சைகள் உருவாகும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

    இம்மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று நரசிம்மரை வணங்குங்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:மே: 15, 16, 19, 20, 30, 31, ஜூன்: 4, 5, 10, 11, 12மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதத் தொடக்கத்தில் குருவின் பார்வை இருப்பதால் ஆரோக்கியம் சீராகும்.உற்சாகத் துடன் பணிபுரிவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. சுபச்செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு புதிய வேலைக்கு செய்த முயற்சியில் அழைப்புகள் வரலாம். தாய்வழி ஆதரவு உண்டு.

    ×