என் மலர்
கன்னி - தமிழ் மாத ஜோதிடம்
கன்னி
மார்கழி மாத ராசிபலன்
நிதானமாக செயல்பட்டு வெற்றி காணும் கன்னி ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் வெற்றிகள் ஸ்தானத்தில் வீற்றிருப்பது யோகம் தான். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அருள்தரும் தெய்வங்களின் ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால் நாக கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. எனவே இடைஇடையே கொஞ்சம் மனக்குழப்பங்கள் அதிகரிக்கலாம். சர்ப்ப சாந்தி வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. நேர்மறை சொற்களை பேசுவதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக் கொள்ள இயலும்.
கும்ப ராசியில் சனி
மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான் மார்கழி 4-ந் தேதி கும்ப ராசிக்கு செல்கின்றார். வாக்கிய கணித ரீதியாக நடைபெறும் இந்த சனிப்பெயர்ச்சி ஜீவன ஸ்தானத்தை பலப்படுத்துவதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இயல்பாகவே பொருளாதார நிலை உயரும். கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும். கடந்த காலத்தில் நடைபெறாமல் இருந்த பல காரியங்கள் இப்பொழுது கைகூடும். உத்தியோகத்தில் பணியிட மாற்றமும், பதவி உயர்வும் உண்டு. சுயதொழில் செய்பவர்கள் புதிய கூட்டாளிகளுடன் கிளை தொழில் தொடங்கும் முயற்சி வெற்றிகரமாக முடியும்.
விருச்சிக-சுக்ரன்
மார்கழி 9-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன்செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது தனவரவு தாராளமாக வந்து சேரும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. பூர்வீக இடத்தை விற்று விட்டு புதிய சொத்துக்கள் வாங்கலாமா? என்று யோசிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் நடத்துபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
தனுசு-செவ்வாய்
தனுசு ராசிக்கு மார்கழி 11-ந் தேதி செவ்வாய் பெயர்ச்சியாகி செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அஷ்டமாதிபதி 4-ல் சஞ்சரிக்கும் பொழுது வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள அதிகம் செலவிடுவீர்கள். உடல்நலக் குறைபாடும் மருத்துவ செலவும் உண்டு. உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்ய இயலாது. சொத்து விற்பனையில் பிரச்சினைகள் ஏற்படும். சகோதர வழியில் நடைபெறும் சுபநிகழ்வுகளுக்கு நீங்கள் கொடுத்து உதவும் வாய்ப்பு உண்டு.
தனுசு-புதன்
மார்கழி 23-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் சூரியனோடு இணைந்து புத-ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். எனவே பொன், பொருள் சேர்க்கை உண்டு. பொருளாதார நிலை உயரும். கடமையை செவ்வனே செய்து வெற்றி காண்பீர்கள். தங்கம், வெள்ளி போன்றவை வாங்க வழிபிறக்கும். தாய்வழி ஆதரவும் கிடைக்கும். ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும்.
பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
மாணவ-மாணவியர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் திருமண முயற்சியில் இருந்த தடை அகலும்.
பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 24, 25, 29, 30,
ஜனவரி: 5, 6, 10, 11.
மகிழ்ச்சிதரும் வண்ணம்:- ஆரஞ்சு.
கன்னி
கார்த்திகை மாத ராசிபலன்
தன்னை சார்ந்தவர்களும் சந்தோஷமாக இருக்க விரும்பும் கன்னி ராசி நேயர்களே!
கார்த்திகை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் விரயாதிபதி சூரியனோடும், தைரியகாரகன் செவ்வாயோடும் இணைந்து சஞ்சரிக்கின்றார். எனவே தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். தனவரவு திருப்திகரமாக இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும். இடம், பூமி விற்பனைகள், உத்தியோக மாற்றங்கள் போன்றவைகள் நிகழலாம். ஜென்ம கேதுவும், ஏழில் ராகுவும் இருப்பதால் பிரச்சினைகள் அகல வழிபாடுகள் தேவை.
வக்ர குருவின் ஆதிக்கம்
மாதம் முழுவதுமே மேஷ ராசியில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. எனவே அவர் வக்ரம் பெறுவது யோகம்தான். பெற்றோர் வழி ஆதரவு திருப்தி தரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். ஆரோக்கியம் சீராகும். வாரிசுகளுடன் ஏற்பட்ட வாக்குவாதங்கள் அகலும். அஞ்சல் வழியிலும், அலைபேசி வழியிலும் நல்ல தகவல் கிடைக்கும். வருமானம் போதுமானதாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.
துலாம்-சுக்ரன்
உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தன பாக்கியாதிபதியானவர் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். எனவே பொருளாதாரத்தில் ஒருசில சமயம் நெருக்கடிகள் அதிகரிக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை ஏற்படும். ஆயினும் கார்த்திகை 14-ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வருகின்றார். எனவே எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கப்போகின்றது. குறிப்பாகத் தொழில் வளம் மேலோங்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
தனுசு-புதன்
உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் கார்த்திகை 14-ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது யோகம்தான். சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். உதாசீனப்படுத்திய உறவினர்கள் ஓடி வந்து இணைவர். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். புதிய தொழில் தொடங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள். தாய், தந்தையர்களின் ஒத்துழைப்போடு பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.
கன்னி
ஐப்பசி மாத ராசிபலன்
18.10.2023 முதல் 16.11.2023 வரை
அமைதியாக இருந்து அரிய பணிகளைச் செய்யும் கன்னி ராசி நேயர்களே!
ஐப்பசி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு விரயாதிபதி சூரியனும், சகாய ஸ்தானாதிபதி செவ்வாயும் சஞ்சரிக்கின்றார். எனவே பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்தாலும் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். வீடு மாற்றங்களும், இட மாற்றங்களும் கூட வரலாம். வேலைப்பளுவின் காரணமாக புதிய உத்தியோகத்திற்கான வாய்ப்பைத் தேடிச்செல்லும் சூழ்நிலை உண்டு. சர்ப்ப சாந்திப் பரிகாரங்கள் நிலைமையைச் சீராக்கும்.
சனி வக்ர நிவர்த்தி!
ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாவது யோகம் தான். எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்ய இயலும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நிறைய நடைபெறும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பூர்வீகச் சொத்துக்களில் உங்களுக்குரிய பங்கு கிடைப்பதற்கான வழிபிறக்கும். அண்ணன்-தம்பிகளுக்குள் இருந்த அரசல் புரசல்கள் மாறும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம். சனிக்குரிய வழிபாடுகளைச் செய்வதோடு அதற்குரிய சிறப்பு தலங்களுக்கும் சென்று அனுகூலம் தரும் நாளில் வழிபட்டு வந்தால் மகிழ்ச்சி நிலைக்கும்.
குரு வக்ரம்!
மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்று சஞ்சரிக்கின்றார். இது நன்மை தான். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும் பொழுது நல்ல சந்தர்ப்பங்கள் தேடி வரும். குறிப்பாக தாய்வழி ஆதரவு கிடைக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. மண விழா, மணி விழா போன்ற விழாக்கள் மட்டும் அல்லாமல் கிரகப்பிரவேசம் மற்றும் கடைதிறப்பு விழாக்கள் கூட நடைபெறலாம். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.
நீச்சம் பெறும் சுக்ரன்!
ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பண நெருக்கடி அதிகரிக்கும். பாசம் காட்டியவர்கள் உங்களை விட்டு விலகலாம். பக்கபலமாக இருப்பவர்களை அனுசரித்துக் கொள்வது நல்லது. குடும்ப ஒற்றுமை குறையலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்களா? என்பது சந்தேகம் தான்.
விருச்சிக புதன்!
ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிநாதன் சகாய ஸ்தானத்தில் உலா வரும் இந்த நேரம் எண்ணங்கள் ஈடேறும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். வீடு மாற்றங்கள், இட மாற்றங்கள் உறுதியாகலாம். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடல் தாண்டிச்சென்று வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்பும் பிள்ளைகளுக்கு நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றங்கள் எளிதில் கிடைக்கும். கலைஞர்களுக்கு முயற்சிகளில் வெற்றி உண்டு. மாணவ- மாணவியர்களுக்கு கல்வி விருத்தி ஏற்படும். பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். தொடர்கதையாய் வந்த கடன் சுமை குறையும். இட மாற்றங்கள் இனிமை தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 20, 21, 31, நவம்பர் 1, 2, 4, 5, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.
கன்னி
புரட்டாசி மாத ராசிபலன்
18-09-2023 முதல் 17-10-2023 வரை
அமைதியாக இருந்து கொண்டு அரிய பணிபுரியும் கன்னி ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியிலேயே விரயாதிபதி சூரியன் மற்றும் செவ்வாயும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். எனவே வரவும், செலவும் சமமாகவே இருக்கும். எந்தச் செயலைத் தொடங்க நினைத்தாலும் அதற்குரிய பொருளாதாரம் கடைசி நேரத்தில் வந்து கைகூடிவிடும். 2-ல் கேது இருப்பதால் புது முயற்சிகளில் ஈடுபடும்பொழுது அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செய்வது நல்லது.
புதன் வக்ரம்
புரட்டாசி 10-ந் தேதி, கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். அதே நேரத்தில் அந்த வீடு புதனுக்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிநாதன் உங்கள் ராசியிலேயே வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம், இதுபோன்ற வக்ர காலங்களில்தான் யோகம் செய்யும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து பொருளாதார நிலை உயரும். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம். புகழ்மிக்கவர்கள் பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுக்கலாம்.
துலாம் - செவ்வாய்
புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 2-ம் இடத்தில் சஞ்சரித்து, தன் வீட்டைத் தானே பார்ப்பதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பூமி யோகம் உண்டு. 'வாங்கிய இடத்தை விற்க முடியவில்லையே, வில்லங்கம் இருக்கின்றதே' என்றெல்லாம் நினைத்தவர்களுக்கு இப்பொழுது புதிய திருப்பங்கள் ஏற்படும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவோடு கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதர ஒத்துழைப்போடு நற்பலன்களைக் காணும் நேரம் இது.
துலாம் - புதன்
புரட்டாசி 28-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிநாதன் 2-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாதிருந்த மங்கல நிகழ்ச்சிகள் இப்பொழுது நடைபெறும். இல்லம் கட்டிக் குடியேறுவதோ அல்லது வீடு வாங்கிக் குடியேறுவதோ உங்கள் எண்ணங்களைப் பொறுத்து அமையும். மேலதிகாரிகளின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். சம்பள உயர்வு பற்றிக் கேட்டு சலிப்படைந்த உங்களுக்கு இப்பொழுது தானாக சம்பள உயர்வும், பதவி உயர்வும் வரலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு திருப்தி தரும். கலைஞர்களுக்கு விட்டுப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் வரலாம். மாணவ-மாணவிகளுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
செப்டம்பர்: 18, 19, 23, 24, அக்டோபர்: 4, 5, 8, 9, 15, 16. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
கன்னி
தமிழ் மாத ராசிபலன்கள்
18-08-2023 முதல் 17-09-2023 வரை
நல்லதையே சிந்தித்துக் கொண்டிருக்கும் கன்னி ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாத தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரோடு சுக்ரன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். குருவின் பார்வை உங்கள் ராசிநாதன் மீது பதிகிறது. இந்த அமைப்பு விரய ஸ்தானத்தில் இருப்பதால், அதிக விரயங்களைச் சந்திக்கும் மாதமாக இது இருக்கும். ஆயினும் குரு பார்வையின் காரணமாக அவை அனைத்தும் சுப விரயங்களாகவே அமையும்.
கடக - சுக்ரன் ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவீர்கள். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய இயலும். தொழில் வெற்றி நடைபோடும். எதிரிகளின் தொல்லை குறையும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம். வாகன யோகம் உண்டு. பணிபுரியும் இடத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக் கொண்டு செயல்படுவர்.
கன்னி - செவ்வாய் ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. 'கன்னி செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. எனவே இக்காலத்தில் விரயங்கள் ஏராளமாக வந்துசேரும். மனக்கலக்கம் அதிகரிக்கும். மகிழ்ச்சி குறையும். பணியாளர்கள் உங்களை விட்டு விலகலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வதாகச் சொல்லி, கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது.
மகர - சனி சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மரக ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். இக்காலத்தில் பஞ்சம ஸ்தானம் வலுப்பெறுவதால் பிள்ளைகளால் பிரச்சினைகள் தலைதூக்கும். பெற்றோர் வழி ஆதரவு குறையும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உத்தியோகத்தில் திடீர் மாற்றங்களும், மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகும் சூழலும் உருவாகும். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக் கொள்ளுங்கள். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. தசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் நல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும்.
புதன் வக்ர நிவர்த்தி சிம்மத்தில் சஞ்சரிக்கும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல்கள் வந்துசேரும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். சேமிப்பு உயரும். செயல்பாடுகளில் தொடர்ந்து வெற்றி பெறும் சூழல் உருவாகும். உத்தியோக உயர்வு உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கைநழுவிச் சென்றாலும், மற்றொரு வாய்ப்பு வந்துசேரும்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவும், பெற்றோரின் ஒத்துழைப்பும் கூடுதலாக கிடைக்கும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஆகஸ்டு: 21, 22, 26, 27, செப்டம்பர்: 6, 7, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
கன்னி
தமிழ் மாத ராசிப்பலன்
17.7.23 முதல் 17.8.23 வரை
அமைதியாக இருந்தபடி அரிய பணிகளைச் செய்யும் கன்னி ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் விரயாதிபதி சூரியனோடு கூடியிருக்கிறார். எனவே விரயங்கள் அதிகரிக்கலாம். அஷ்டமத்து குருவின் ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத்திற்கென்று ஒரு தொகையைச் செலவிடும் சூழல் உருவாகும். ராகு-கேதுக்களின் ஆதிக்கம் இருப்பதால் ஏற்ற இறக்க நிலை மாற, யோகபலம் பெற்ற நாளில் முறையான வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.
மேஷ - குரு சஞ்சாரம்
நவக்கிரகத்தில் சுப கிரகமான குரு பகவான் இப்பொழுது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் குரு பகவான் அடியெடுத்து வைத்திருப்பதால் வேலைப்பளு கூடும். இருப்பினும் பொருளாதார நிலை திருப்தி தராது. உத்தியோகத்தில் இடமாற்றம் உறுதியாகலாம். வாகனத்தால் தொல்லைகளும், வளர்ச்சிக்கு இடையூறுகளும் அதிகரிக்கும். குருவின் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிவதால் குடும்பத்தில் நீண்ட நாட்களாகத் தாமதப்பட்டு வந்த காரியங்கள் இப்பொழுது நடைபெறத் தொடங்கும். எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்த்து, நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றிவிடுவீர்கள். கொடுக்கல் - வாங்கல்களில் பழைய கடன்களை பைசல் செய்தாலும் புதியதாக கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். குடும்பப் பெரியவர்களின் யோசனையைக் கேட்டு நடந்தால் குழப்பங்கள் ஏற்படாது.
சுக ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் மருத்துவத்தால் பலன் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். அத்தியாவசிப் பொருட்கள் வாங்குவதில் அதிகக் கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டு வணிகம் ஆதாயம் தரும்.
சிம்ம - புதன்
ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிநாதன் புதன் விரய ஸ்தானத்திற்கு வரும்போது விரயங்களே அதிகரிக்கும். வரவு வருவதற்கு முன்னதாகவே செலவு காத்திருக்கும். இடமாற்றம், வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடியின் காரணமாக, ஒருசிலர் விருப்ப ஓய்வு பெற்று, பணியில் இருந்து வெளியேற முடிவு செய்வர். அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுக்க வேண்டாம். உறவினர் வழியில் ஒரு தொகையைக் கொடுத்து உதவும் சூழ்நிலை உருவாகும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் லாபமும், பிற்பகுதியில் விரயமும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு மனக்கட்டுப்பாடு அவசியம் தேவை. பெண்களுக்கு உடன் இருப்பவர்களால் பிரச்சினை ஏற்படும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வருமானம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 19, 20, 25, 30, 31, ஆகஸ்டு: 10, 11, 15, 16.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
கன்னி
தமிழ் மாத ராசிப்பலன்
மற்றவர்களின் மனதைப் புரிந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் உச்சம்பெற்ற சந்திரனோடு இணைந்து பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணைபுரியும் விதத்தில் நல்ல வாய்ப்புகள் வரப்போகிறது. ஊர்மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பணவரவு சரளமாக இருக்கும்.
மிதுன - புதன்
ஆனி மாதம் 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். இது அவருக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிநாதன் புதன் என்பதால் இக்காலம் ஒரு இனிய காலமாக அமையும். எதிர்காலத்தை சிறப்பாக்கும் முக்கியப் புள்ளிகளை இப்பொழுது சந்திக்க நேரிடும். அஷ்டமத்து குருவால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகளையும், திறமைகளையும் பார்த்து மேலதிகாரிகள் பாராட்டுவர். சூரியனோடு புதன் இணைவதால் 'புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. எனவே அரசு சார்ந்த விஷயங்களில் அனுகூலம் கிடைக்கும்.
சிம்ம - செவ்வாய்
ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு செவ்வாய் வருவது யோகம்தான். 8-க்கு அதிபதி 12-ல் வரும்பொழுது எண்ணற்ற நற்பலன்கள் கிடைக்கும். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கலாம். திடீர் முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு வீடு, இடம் வாங்கும் அமைப்பு ஏற்படும். சிம்மத்தில் இருக்கும் செவ்வாயை குரு பார்ப்பதால் கெடுபலன்கள் குறையும்.
சிம்ம - சுக்ரன்
ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் வருகிறார். அவர் அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். மேலும் குருவின் பார்வை பதிந்த செவ்வாயின் பார்வை, சனி மீது விழுகின்றது. எனவே தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் வெற்றி நிச்சயம். நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்களும் கிடைக்கும். தன வரவில் இருந்த தடைகள் அகலும். வியாபார விருத்திக்கு புதிய முதலீடுகள் வந்து சேரும். கடன் பிரச்சினைகள் படிப்படியாகத் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள்.
கடக - புதன்
ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் லாப ஸ்தானத்திற்கு வரும்போது, செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடல் வணிகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும். ஆதாயம் தரும் தகவல்களை அதிகமாக நண்பர்கள் கொண்டு வந்து சேர்ப்பர். புதிய வாகனங்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். உத்தியோகத்தில் உங்கள் அறிவுத்திறமையை கண்டு அதிகாரிகள் வியப்பர். தொழில் வெற்றிநடை போடும். இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகள் பலன் தரும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு தொழிலை அபிவிருத்தி செய்ய உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பர். வெளிநாடு சென்று பணிபுரிய நினைப்பவர்களுக்கு அந்த முயற்சி கைகூடும். கலைஞர்களுக்கு சகக் கலைஞர்களின் அறிமுகத்தால் ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றிதரும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நல்ல வரன்கள் கைகூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 17, 18, 21, 22, 27, 28, ஜூலை: 13, 16.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.
கன்னி
தமிழ் மாத ராசிப்பலன்
15.5.23 முதல் 15.6.23 வரை
நிதானமே நிம்மதியை வழங்கும் என்று சொல்லும் கன்னி ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும் என்பார்கள். அதே நேரத்தில் குருவினுடைய பார்வையும் தன ஸ்தானத்தில் பதிகின்றது. எனவே பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நிறைவேறாத ஒரு சில காரியங்கள் நிறைவேறி நிம்மதியை வழங்கும். இடமாற்றம், வீடு மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். அடகுவைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு உண்டு. அதிகார வர்க்கத்தினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி உயர்வின் காரணமாகவும், ஊதிய உயர்வின் காரணமாகவும், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று பணிபுரிய நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ராகு-கேது சஞ்சாரம்
பின்னோக்கி நகரும் கிரகங்களான ராகு-கேதுக்கள், உங்கள் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டும். மாதத் தொடக்கத்தில் 8-ல் ராகுவும், 2-ல் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து லாபத்தை வரவழைத்துக் கொடுப்பர். பயணங்கள் அதிகரிக்கும். பாசமும், நேசமும் கொண்டவர்களால் வளர்ச்சி கூடும். வழக்குகளில் இருந்த தேக்க நிலை மாறும். 2-ல் கேது இருப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாமல் போகலாம். எனவே வாக்கு கொடுக்கும் முன் யோசிப்பது நல்லது. சுபச்செலவுகள் அதிகரிக்கும்.
கடக - சுக்ரன்
வைகாசி 16-ந் தேதி கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு நீச்சம்பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு 2, 9-க்கு அதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது நற்பலன்கள் நடைபெறும். குறிப்பாக வருமானம் உயரும். வாங்கல் - கொடுக்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்க நண்பர்கள் உறுதுணைபுரிவர். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிகார வர்க்கத்தினர்களின் ஆதரவோடு பல நல்ல காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். ஆபரண சேர்க்கை உண்டு.
ரிஷப - புதன்
வைகாசி 18-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.தோள்கொடுத்து உதவ நண்பர்கள் காத்திருப்பர். தனவரவு தாராளமாகும். இனத்தார் பகை மாறும். எதையும் எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். மனதளவில் நினைத்ததை மறுகணமே செய்து முடிக்கும் யோகம் வாய்க்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு அகலும். சேமிப்பு உயர்ந்து உள்ளத்தை மகிழ்விக்கும்.
பொதுவாழ்வில் இருந்த வீண் பிரச்சினைகள் அகலும். விருப்பங்கள் நிறைவேறும். தொழிலில் உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். பெண்களுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். கணவன் - மனைவி, ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 20, 21, 24, 25, 26, ஜூன்: 2, 3, 5, 6.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
கன்னி
தமிழ் மாத ராசிப்பலன்
14.4.2023 முதல் 14.5.2023
எதையும் யோசித்துப் பேசும் கன்னி ராசி நேயர்களே!
சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் மறைந்திருக்கின்றார். அவரோடு சூரியனும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கின்றார்கள். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. எனவே பொருளாதாரப் பிரச்சினை அகலும். புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பீர்கள். கடன் பிரச்சினைகளும் படிப்படியாக குறையும். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் கல்யாணம், காதுகுத்து, பிறந்த நாள், மணி விழா என்று கொண்டாட்டங்கள் பலவும் வந்துகொண்டே இருக்கும். முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்ல முக்கியப் புள்ளிகள் ஒத்துழைப்புச் செய்வர். அசையாச் சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் இருந்து அனைத்து முயற்சிகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
சனியின் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சனி சஞ்சரிக்கின்றார். அவர் ஆட்சிபலம் பெற்று சஞ்சரிப்பது யோகம்தான். வீழ்ச்சியில் இருந்து எழுச்சி பெறுவீர்கள். கூச்சலிட்ட எதிரிகள் விலகுவர். கொடுக்கல் - வாங்கல்கள் சுமுகமாக நடைபெறும். நாட்பட்ட நோய் அகல, மருத்துவ ஆலோசனை கைகொடுக்கும். பணிபுரியும் இடத்தில் பல மாதங்களாக நடைபெற்ற பிரச்சினை முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன்சுமை குறையத் தொடங்கும். செவ்வாய்-சனி பார்வை இருப்பதால் உறவினர் பகை உருவாகலாம்.
மேஷ - குரு
சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் குரு பகவான் அடியெடுத்து வைப்பதால் கவனம் தேவை. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. அடுத்தவர்களுக்கு நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும். ஆடம்பரச் செலவுகளால் கையிருப்புக் கரையும்.
குருவின் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே பார்வை பலனால் ஒருசில நன்மைகள் நடைபெறலாம். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் உண்டு. ஆனால் தொழில் உத்தியோகத்தில் மறைமுக போட்டிகள் காணப்படும். அதனால் குறிப்பிட்ட இலக்கை அடையவிடாமல் செய்துவிடும். பணியாளர்களை பகைத்துக் கொள்ளாமல் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது.
மிதுன - சுக்ரன்
சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதி பதியான சுக்ரன், தொழில் ஸ்தானத்திற்கு வரும் போது, எந்த தொழில் செய்தாலும் ஏற்றம் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும். எந்தப் புது முயற்சிகள் செய்தாலும் குடும்ப உறுப்பினர்களை கலந்து ஆலோசித்துச் செய்வது நல்லது. அடகுவைத்த நகைகளை மீட்பீர்கள். பெண்களால் பெருமை சேரும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெற்று சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்திப் பெருமை காண்பீர்கள்.
இம்மாதம் நடராஜர் வழிபாடு நன்மைகளை வாரி வழங்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 14, 22, 23, 27, 28, மே: 4, 5, 9, 10
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.
கன்னி
தமிழ் மாத ராசிப்பலன்
15.3.2023 முதல் 13.4.23 வரை
மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லும் கன்னி ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் நீச்சம் பெற்று 'நீச்ச பங்க ராஜயோக'த்தில் இருக்கிறார். எனவே நீண்ட நாளையக் கனவுகள் நனவாகும். உடல்நலம் சீராகி சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். பணிபுரியும் இடத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். ராசிநாதனோடு சூரியனும் இணைந்து புத ஆதித்ய யோகத்தை உருவாக்குவதால் கூடுதல் பொறுப்புகளும் வரலாம். நீண்ட நாளையப் பிரச்சினைகளுக்குத் தெளிவான முடிவெடுக்கும் நேரம் இது.
10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் சனியைப் பார்க்கிறார். இந்த நிகழ்வு பங்குனி 14-ந் தேதி வரை இருப்பதால், மாதத் தொடக்கத்தில் பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் தலைதூக்கலாம். பிள்ளைகளை நெறிப்படுத்திக் கொள்வது நல்லது. பணப்பரிமாற்ற விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் முன்னேற்றப் பாதிப்புகள் வரலாம். எனவே நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கைகூடுவதற்கு முன்னால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
மேஷ - புதன்
பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் அகலும். பொறுப்புகள் அதிகரிக்கும். வீண் பிடிவாதம் பிடித்த உறவினர்கள் விலகிச் செல்வர். முயற்சித்த காரியங்களில் முத்தான பலன் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் மங்கலச் செய்தி வந்து சேரும். வெளிநாட்டு முயற்சியில் இருந்த தடை அகலும். அரசியல் பிரமுகர்களின் ஆதரவோடு பெரிய முயற்சி ஒன்று கைகூடும்.
ரிஷப - சுக்ரன்
பங்குனி 24-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானாதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கும் இந்த நேரம் பொன்னான நேரமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். பதவிகளைத் தேடிப் போகாத உங்களுக்கு பதவிகள் கிடைக்கலாம். தோளுக்கு மேல் மாலை வந்து, நாளுக்கு நாள் மகிழ்ச்சியைக் கூட்டும். ஆடை, ஆபரணங்கள், அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தொண்டர்களின் அரவணைப்பும், தொடர்ந்து செல்வாக்கும் இருக்கும். வியாபாரம், தொழில் நடத்துபவர்களுக்கு கூட்டாளிகள் கூடுதல் லாபம் தர வழிவகுத்துக் கொடுப்பர். கலைஞர்களுக்கு வருமானம் உயர வழி பிறக்கும். மாணவ - மாணவியர்கள், படிக்கும் நேரத்தை அதிகப்படுத்தி கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிக்கலாம். பெண்களுக்கு தெய்வ வழிபாட்டில் ஆர்வம் கூடும். உடல்நலத்திற்காக செலவிடும் தொகை குறையும். கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு வீடு, வாகனம் வாங்க சலுகைகள் கிடைக்கும்.
இம்மாதம் குரு பகவான் வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 15, 16, 26, 27, 31, ஏப்ரல்: 1, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.
கன்னி
தமிழ் மாத ராசிப்பலன்
13.2.2023 முதல் 14.3.2023 வரை
பொறுமையாக செயல்பட்டு பெருமை காணும் கன்னி ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியோடு இணைந்து சஞ்சரிக்கிறார். 2ல் கேதுவும், 8-ல் ராகுவும் சஞ்சரித்து சர்ப்பதோஷத்தை உருவாக்குகிறார்கள். எனவே ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை ஏற்பட்டாலும், குருவின் பார்வை இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை. குரு உங்கள் ராசியைப் பார்ப்பதோடு, 3, 11 ஆகிய இடங்களையும் பார்க்கிறார். எனவே சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வரலாம்.
உச்ச சுக்ரன் சஞ்சாரம்
மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உச்சம் பெறுவது யோகம்தான். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். பூர்வீக சொத்துகளை பிரித்துக் கொள்வதில் இருந்த தடை அகலும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். முன்னோர் கட்டிவைத்த சிதிலமடைந்த கோவில்களை, பழுதுபார்க்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும்.
கும்ப - புதன் சஞ்சாரம்
மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமான புதன், 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். நாடு மாற்றம், வீடு மாற்றம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். தொழிலில் இருந்த இடையூறு அகலும்.
மீன - புதன் சஞ்சாரம்
மார்ச் 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். மேலும் அங்கு குருவோடு இணைந்து 'நீச்ச பங்க'மும் அடைகிறார். ராசிநாதன் நீச்சம் பெறுவதால் ஆரோக்கியத் தொல்லை உண்டு என்றாலும், மாற்று மருத்துவத்தால் உடல்நலத்தைச் சீராக்கிக் கொள்ள இயலும். தொழில் மாற்றம் அல்லது புதிய பங்குதாரர்களின் சேர்க்கை ஏற்படும். உத்தியோகத் தில் மேலதிகாரிகள் உங்கள் எண்ணங்களைப் பூர்த்திசெய்வர்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9-க்கு அதிபதியான சுக்ரன், 8-ல் மறைவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். 'பணம் வந்த மறுநிமிடமே செலவாகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் திடீர் பிரச்சினைகள் உருவாகலாம். 'உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்ய முடியவில்லையே' என்ற கவலை மேலோங்கும். குடும்ப உறுப்பினர்கள், உங்கள் மீது குற்றம் சுமத்தக்கூடும்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அது அவ்வளவு நல்லதல்ல. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடு ஏற்படும். தொல்லை தரும் எதிரிகளின் பலம் மேலோங்கும். உடன்பிறப்புகள் உங்களை விட்டு விலக நேரிடலாம். வாங்கிய இடத்தை ஒருசிலர் விற்கவும் வாய்ப்புள்ளது. வழக்குகள், வாய்தாக்கள் வந்து கொண்டேயிருக்கும். மன அமைதி குறையும். பிறருக்கு பொறுப்பு சொல்வதன் மூலம் பிரச்சினைகள் வரலாம்.
இம்மாதம் பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 13, 14, 16, 17, 28, மார்ச்: 1, 4, 5, 11, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
கன்னி
தமிழ் மாத ராசிப்பலன்
16.12.22 முதல் 14.1.23 வரை
நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்று சொல்லும் கன்னி ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் கேதுவும், 8-ம் இடத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். குரு பார்வை முறையாக உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கடமையில் இருந்த தொய்வு அகலும். வருமானம் திருப்தி தரும்.
புதன் வக்ர இயக்கம்
உங்கள் ராசிக்கும், 10-ம் இடத்திற்கும் அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். அவர் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது நன்மைகள் அதிகம் நடைபெறும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறுவதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லம் கட்டிக் குடியேறும் யோகம் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும் வாய்ப்பு உண்டு. தங்கு தடைகள் தானாக விலகும். தைரியத்தோடு செயல்புரிவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.
மகர-சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். அவர் 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது, பிள்ளைகள் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வேண்டுமென்று விரும்பியவர்களுக்கு அதற்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்கு வாய்க்கும். குடியிருக்கும் வீட்டை விலைக்கு வாங்கும் யோகம் உண்டு. வாழ்க்கைத் துணையின் பேரில் இடம், பூமி வாங்கும் யோகம் ஏற்படலாம்.
புதன் வக்ர நிவர்த்தி
மார்கழி 24-ந் தேதி, தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அதிக முயற்சி செய்தும் முடிவடையாத காரியங்கள், இனி எளிதில் முடிவடையும். நல்ல சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்வீர்கள். நண்பர்கள் வாயிலாக வருமானம் கிடைக்க வழிபிறக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சினையின் காரணமாக அதில் இருந்து விலகிக் கொள்ள முன்வருவீர்கள். விருப்ப ஓய்வில் வெளிவந்து நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து சுயதொழில் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெற்றோர் உடல்நலத்தில் கவனம் தேவை. பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
மார்கழி 29-ந் தேதி, ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். இது அவ்வளவு நல்லதல்ல. உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதி வலுவடைவதால் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். குறிப்பாக உடன்பிறப்புகளின் பகை அதிகரிக்கும். அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்தாலும் திருப்தி அடைய மாட்டார்கள். வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும். வருமானப் பற்றாக்குறையின் காரணமாக ஒருசிலர் கடன் வாங்கும் சூழ்நிலையும் உண்டு.
உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியாக விளங்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாவதால் இழப்புகளும், விரயங்களும் கூடுதலாக இருக்கும். எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. சென்ற மாதத்தில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் மீண்டும் தொடரும். பொருளாதாரப் பற்றாக்குறையின் காரணமாக ஒருசிலருக்கு மன அழுத்தம், நிம்மதி குறைவு ஏற்படலாம். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்பட வேண்டிய நேரம் இது. பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
இம்மாதம் ராமபிரான் வழிபாடு நன்மையை வழங்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 19, 20, 23, 24, ஜனவரி: 4, 5, 8, 9. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.






