என் மலர்
கன்னி
2025 மாசி மாத ராசிபலன்
வரவிற்கு ஏற்ற விதம் செலவு செய்ய நினைக்கும் கன்னி ராசி நேயர்களே!
மாசி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன், விரயாதிபதி சூரியனோடு கூடியிருக்கிறார். எனவே விரயங்கள் கூடுதலாக இருக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் எதிர்பாராத விதத்தில் வந்து சேரலாம். கடன் சுமை கொஞ்சம் அதிகரிக்கும். கடமையை சரி வரச் செய்ய முடியாமல் கவலைப் படுவீர்கள். உற்றார், உறவினர்களின் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
தொழில் பங்குதாரர்கள் உங்களை விட்டு விலக நேரிடும். எதிர்மறை சிந்தனை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார் என்றாலும், ஜென்மத்தில் கேது இருப்பதால் எதையும் போராடியே முடிக்கும் சூழ்நிலை உருவாகும்.
சூரியன் - சனி சேர்க்கை
இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு விரயாதிபதி சூரியன், ரோகாதிபதி சனி. இந்த இரண்டும் இணையும் நேரம், ரோக நிவர்த்திக்காக பரிகாரம் செய்வது நல்லது. ஆரோக்கியத் தொல்லை கொஞ்சம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு ரண சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகலாம்.
தொழில் போட்டிகள் அதிகரிக்கும். எதைச் செய்தாலும் யோசித்து செய்வதே நல்லது. ஏன் என்றால் பிறருக்கு நன்மை செய்தாலும் கூட, அது தீமையாகத் தெரியும். பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். ஏற்றமும், இறக்கமும் தொடர்கதையாய் வரும் நேரம் இது.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். எனவே சகோதர சச்சரவுகள் அகலும். உங்களை சார்ந்திருப்பவர்களால் ஏற்பட்ட வாக்குவாதங்கள் நல்ல முடிவிற்கு வரும். சென்ற மாதம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரும். என்றைக்கோ விலைக்கு வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது நல்ல விலைக்கு விற்பனையாகி அதிக லாபத்தைக் கொடுக்கும்.
பெற்றோர் வழிப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். 'முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். இப்பொழுது மகிழ்ச்சியடையும் விதத்தில் பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். 'பழைய வாகனங்கள் செலவு வைக்கின்றதே' என்று கருதி, புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீன - புதன் சஞ்சாரம்
மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் புதன் நீச்சம்பெறும் இந்த வேளையில், நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் யோகம் செய்ய வேண்டுமானால் நீச்சம்பெற வேண்டும் அல்லது வலிமை இழக்க வேண்டும். அந்த அடிப்படையில் இப்பொழுது எதிர்பாராத நல்ல திருப்பங்கள் வரப்போகின்றது. இருப்பினும் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. மருத்துவச்செலவு உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். கலைஞர்களுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு பிரச்சனைகள் நீங்க, பிரபலஸ்தர்கள் பின்னணியாக இருப்பர். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 18, 19, 23, 24, மார்ச்: 6, 7, 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.






