என் மலர்tooltip icon

    கன்னி

    2024 மார்கழி மாத ராசிபலன்

    சிந்தித்து செயல்பட வேண்டும் என்று சொல்லும் கன்னி ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவர் மீது குரு பகவானின் பார்வை பதிகிறது. எனவே சாதகமான பலன்கள் நிறைய வந்துசேரும். சச்சரவுகள் அகலும்.

    புதிய முயற்சிகளில் வெற்றி கிடைத்து பொருளாதார நிலை உயரும். புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டு. இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் நன்மை கிடைக்கும் மாதம் இது.

    செவ்வாய் - சுக்ரன் பார்வை

    மாதத் தொடக்கத்தில் கடகத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். கும்பத்திற்கு சுக்ரன் சென்றபிறகும், அவர் மீது தன் பார்வையை செலுத்துகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வெற்றிகள் மற்றும் தன ஸ்தானாதிபதியாக இருக்கிறார். எனவே அவர், சுக்ரனைப் பார்க்கும் பொழுது தனவரவு தாராளமாக வந்துசேரும்.

    பணப்புழக்கம் அதிகரிக்கும் இந்த நேரத்தில், இதைச்செய்வோமா? அதைச் செய்வோமா என்று மனக்குழப்பம் ஏற்படும். இருப்பினும் வியாபாரம் மற்றும் தொழில் வெற்றிநடை போடும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த சுபகாரியங்கள் இப்பொழுது நடைபெறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். சொந்த பந்தங்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள்.

    குரு வக்ரம்

    உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, வக்ரம் பெறுவது நன்மைதான். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வலிமை இழக்கும் போது நன்மை செய்யும். அந்த வகையில் குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாமல் இருந்த காரியங்கள், இப்பொழுது துரிதமாக நடைபெறும்.

    கல்யாண முயற்சி கைகூடும். நீண்ட நாளைய பிரார்த்தனை நிறைவேறும். கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது அல்லது வீடு கட்டும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நல்ல சந்தர்ப்பங்கள் வாசல் கதவை தட்டும். நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும்.

    கும்ப - சுக்ரன்

    மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஜீவனத்திற்கு வழிபிறக்கும். பொருளாதாரம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் சூழ்நிலையும், அதனால் வருமான பெருக்கமும் ஏற்படும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.

    தனுசு - புதன்

    மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியான புதன், சுக ஸ்தானத்திற்கு செல்வது நல்ல நேரம்தான். தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழிலில் உள்ள போட்டியாளர்கள் விலகுவர். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நெருக்கடி நிலை அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த இலக்கை அடைய நேரிடும். மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் திறமை வெளிப்படும். பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வருங்காலத்தைப் பற்றிய பயம் அகலும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 18, 19, 25, 26, 30, 31, ஜனவரி: 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    ×