என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கன்னி - குருப்பெயர்ச்சி பலன்கள்
கன்னி
குருப்பெயர்ச்சி பலன்கள் 2023
இளமையை விரும்பும் கன்னி ராசியினரே இதுவரை ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரித்த குருபகவான் அஷ்டம ஸ்தானம் எனும் எட்டாமிடம் நோக்கிச் செல்கிறார்.அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.
கன்னி ராசிக்கு குருபகவான்
4,7 எனும் இரு கேந்திரங்களுக்கு அதிபதி. சுகாதிபதி, களத்திர ஸ்தான அதிபதி அஷ்டம ஸ்தானம் செல்கிறார். அஷ்டம ஸ்தானம் அசிங்கம், அவமானம், விபத்து, கண்டம், அறுவை சிகிச்சை, ஆயுள் பற்றிக் கூறுமிடம். அதே போல் எதிர்பாராத அதிர்ஷ்டத்தைக் கூறுமிடமும் இதுதான். எனினும் அஷ்டம குரு சிறப்பித்துச் சொல்லக் கூடிய பலன் அல்ல. ராசி பலன் பார்ப்பது, கிரகப் பெயர்ச்சி பற்றி தெரிந்து கொள்வது எதற்காக? கோட்சார கிரகங்கள் சாதகமாக இருக்கும் காலங்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். எதார்த்தமாக வாழ்க்கையை நடத்தலாம்.கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருக்கும் காலங்களில் புதிய செயல்களை தவிர்த்து விழிப்புடன் செயல்பட வேண்டும். இதுவே ஜோதிடம் கூறும் தீர்வு. இப்பொழுது கன்னி ராசிக்கு கோட்சார சனி ஆறாமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் இருக்கிறார். குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அக்டோபர் 30, 2023 வரை ராகு கேதுக்கள் 8, 2 ம்மிடத்திலும் அதன் பிறகு 7, 1ம் மிடத்திலும் சஞ்சரிப்பார்கள். அனைத்து வருட கிரகங்களின் சஞ்சாரமும் சற்று சுமாராக இருப்பதால் புதிய முதலீடுகளை தவிர்த்து இறை வழிபாட்டில் ஈடுபட பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. அதே நேரத்தில் சுய ஜாதக ரீதியான நல்ல தசாபுத்திகள் நடந்து கொண்டு இருந்தால் எந்த பாதிப்பும் இருக்காது. சுப பலன்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே உங்கள் சிந்தனைகள் யாவும் தொலைநோக்குடன் இருக்க வேண்டும். தேவையற்ற பயத்தைத் தவிர்த்து சுய ஜாதக தசா புத்திக்கு தகுந்த வழிபாட்டு முறைகளை கடைபிடித்து பயன் பெற வாழ்த்துக்கள்.
குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள் :
ராசிக்கு 12ம்மிடமான விரய அயன, சயன, வெளிநாட்டுப் பயணம் பற்றிக் கூறும் ஸ்தானத்திற்கு பதிகிறது. விரயங்கள் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். எனவே இந்த காலகட்டத்தில் நகை வாங்குவது, வீடு கட்டுவது, பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சேமிப்பது என உங்கள் விரயத்தை சுபமாக மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது.அவசியம் அநாவசியம் எது என பகுத்துணர்ந்து செயல்பட்டால் விரயத்தை தவிர்கலாம். அத்துடன் தொழில், வேலைக்காக பலர் குடும்பத்தை பிரிந்து வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். சிலருக்கு கால் அல்லது கண் பிரச்சனைக்காக வைத்தியம் செய்ய நேரும்.எவ்வளவு மனபாரம் இருந்தாலும் படுத்த அடுத்த நொடி நிம்மதியாக கவலை மறந்து நிம்மதியாக தூங்கி விடுவீர்கள். இது குருபகவான் உங்களுக்கு கொடுத்த வரப்பிரசாதம்.
குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:
ராசிக்கு இரண்டாமிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் ஏழாம் பார்வை பதிவதால் குடும்பம் கோவிலாக இறைவனின் இருப்பிடமாக இருக்கும்.அதிகார தோரணையான பேச்சில் அனைவரையும் கட்டிப் போடுவீர்கள். பேச்சில் தைரியம், தன் நம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும்.சொல் வலிமை, வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களின் ஆலோசனை கேட்க ஒரு கூட்டம் உருவாகும். பேச்சுத் திறமையால் வருமானத்தை அதிகரிப்பீர்கள். ஒருவர் சம்பாத்தியத்தில் தள்ளாடிய குடும்பம் பிள்ளைகளின் வருமானத்தால் நிமிர்ந்து நிற்கும்.குடும்பத்திற்கு நிலையான நிரந்தரமான வருமானத்திற்கான வழி தென்படும். விரயங்கள் இருந்தாலும் இல்லை என்ற நிலை இருக்காது. பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்ற உண்மையான உறவுகளின் வருகை ஆனந்த கண்ணீரை வரவழைக்கும்.
குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:
ராசிக்கு நான்காமிடமான சுக ஸ்தானத்திற்கு குருவின் ஒன்பதாம் பார்வை பதிவதால் மனதில் அவ்வப்போது சில மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பயன்படாத பழைய சொத்துக்களை கொடுத்து விட்டு புதிய சொத்துக்கள் வாங்கலாம்.புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. எப்பொழுதோ வாங்கிப் போட்ட சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும். தாயின் அன்பு ஆசிர்வாதம், ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். எவ்வளவு வேலைப் பளு மனக்கஷ்டம் இருந்தாலும் சுக ஸ்தானத்தில் பதியும் குருப் பார்வை ஆரோக்கியத் தொல்லைகளை சீராக்கும்.ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். அலங்காரப் பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சுற்றுப் பயணம் சென்று மகிழ்வீர்கள்.
அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்- 22.4.2023 முதல் 21.6.2023 வரை
கோட்சாரத்தில் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் வேதனைகளும், துயரங்களும் விலகும்.குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலருக்கு மருமகன், மருமகள் வருவார்கள். சிலருக்கு பேரன் பேத்தி பிறப்பார்கள். பிள்ளை பேறு இல்லாதவர்களுக்கு புத்திர பிராப்தம் உண்டாகும். வீட்டில் ஆடம்பர விருந்து உபசாரங்கள் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். பாலிசி முதிர்வு தொகை, எதிர்பாராத பண வரவு உண்டு.
பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்- 22.6.2023 முதல் 17.4.2024 வரை
கன்னி ராசிக்கு 2,9ம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் வாக்கு வன்மை பெறும். வாக்கு பலிதம் உண்டாகும். பேச்சில் தெய்வத்தன்மை வெளிப்படும்.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அறுசுவை உணவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களும் ஜாதகரும் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமையாக அன்பாக இருப்பார்கள். தனவிருத்தி உண்டு.
ஆசிரியர், ஜோதிடம், சட்டம், புரோகிதம், கூட்டுத் தொழில், உணவுத்தொழில், அயல்நாட்டு தொடர்பு போன்ற தொழில்களில் நல்ல வருமானம் உண்டாகும். தந்தை ,தந்தை வழி உறவினர்கள் மூலம் சொத்து ஆதாயம், குலத் தொழில் வருமானம், உண்டு. பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி உண்டாகும்.
கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்- 18.4.2024 முதல் 30.4.2024 வரை
கன்னி ராசிக்கு விரயாதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பல வருடமாக எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுதியாகும்.கண் பாதிப்பு இருக்கும். விலையுயர்ந்த பொருட்களை வங்கி பாதுகாப்பில் வைக்கவும். சொத்துகள் வாங்கும் பொழுது, விற்கும் போதும் தவறான விலை நிர்ணயம் ஏற்படலாம்.தேவையற்ற வம்பு, வழக்குகளில் ஆர்வத்தை குறைப்பது நல்லது. பூர்வீக சொத்து பிரச்சனையை ஒத்தி வைக்கவும்.
குருவின் வக்ர பலன்கள் :
4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வந்து குவியும். விரயங்கள் குறையும். சேமிப்பு உயரும். பணத்தைப் பார்த்த சில போலியான உறவுகள் உண்மையானவர்கள் போல் நடிப்பார்கள். கடன் சுமை குறையத் துவங்கும்.
பெண்கள்:
நீண்ட நாட்களாக தடைபட்ட பெரிய செயல்களைக் கூட எளிதாக செய்து முடித்து வெற்றியைக் கொண்டாடுவீர்கள்.குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் வேதனைகளும், துயரங்களும் விலகும். தம்பதிகள் விட்டுக் கொடுத்து வாழ வேண்டிய காலம். வீட்டிற்கு தெரியாமல் நகைச் சீட்டு, ஏலச் சீட்டு கட்டுவதை தவிர்த்து அரசுடைமை வங்கிகளில் சேமிக்கவும்.
மாணவர்கள்:
மாணவர்களின் பேச்சாற்றல் பளிச்சிடும். பேச்சுத் திறமையால் பல வெற்றிகளை பெறுவீர்கள். சிலர் உயர் கல்விக்கு வெளிநாடு செல்லலாம். படிப்பு தொடர்பான அனைத்து முயற்சிகளும் பலிதமாகும். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி பாஸ் பண்ண உரிய காலம். க்க கூடாது. குறுகிய கால பயிர்கள், காய்கனிகள் நல்ல லாபம் பெற்றுத் தரும்.அரசின் மானியம் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள்:
அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊதிய உயர்வுடன் இடம் மாற்றம் கிடைக்கும். ஆனால் உயர் அதிகாரிகளால் நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். வேலைப் பளு மன சஞ்சலத்தை அதிகரிக்கும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிவர்களுக்கு வேறு நல்ல வேலை கிடைக்காதா என்ற ஆதங்கம் மேலோங்கும் . இருக்கும் வேலையை விடக் கூடாது.
ராகு/கேது பெயர்ச்சி:
அக்டோபர் 30,2023ல் ராகு 7ம் இடத்திற்கும், கேது ராசிக்கும் இடம் பெயருகிறார்கள். நண்பர்கள், தொழில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. சில தம்பதிகள் தொழில் நிமித்தமாக பிரிந்து வாழலாம். சிலர் கருத்து வேறுபாட்டால் பிரியலாம்.
பரிகாரம் :
தேவையில்லாமல் கவலைப்படுவதைத் தவிர்த்திடுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இறைவன் சோதித்தால் விரைவில் நல்ல காலம் வரப்போகிறது என்று பொருள். ஜென்ம நட்சத்திர நாளில் கோவில் குளத்து மீனுக்கு பொரி போடவும். நேரம் கிடைக்கும் போது திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட்டு வர நவகிரகங்களும் துணை நிற்கும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023
இளமையான கன்னி ராசியினரே குருபகவான் 7ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்.
சனி பகவான் 5, 6ம் இடத்திலும், ராகு பகவான் 8ம் இடத்திலும் கேது பகவான் 2ம் இடத்திலும் பயணிக்கிறார்கள். கன்னி ராசிக்கு குருபகவான் 4, 7ம் அதிபதி. நான்காம் இடம் என்பது சுக ஸ்தானம் . 7ம் இடம் என்பது களத்திர ஸ்தானம், நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் பற்றிக் கூறுமிடம். 7ல் ஆட்சி பலம் பெற்ற குரு ராசியைப் பார்ப்பதால் தொட்டது துலங்கும். காரிய சித்தி உண்டாகும். வெற்றி மேல் வெற்றி வந்து உங்களைச் சாரும். அதை வாங்கித் தந்த பெருமை குருவைச் சாரும். சமுதாய அந்தஸ்து புகழ், கவுரம் என வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. இந்த ஒரு வருட காலம் அஷ்டம ராகுவால் ஏற்படப் போகும் இன்னல்கள், அவமானங்கள் மட்டுப்படும்.
குருவின் பார்வையால் தற்காலிக நிவாரணம் கிடைக்கும். 6ல் குரு நின்ற காலத்தில் ஏற்பட்ட காலத்தில் ஏற்பட்ட கடன், நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உத்தியோகம் இழந்தவர்களுக்கு மீண்டும் நல்ல உத்தியோகம் கிடைக்கும். வேலையாட்களால் ஏற்பட்ட மனச்சங்கடம் நீங்கும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். பகையானவர்கள் உறவாகுவார்கள். சமுதாயத்தில் அந்தஸ்து நிறைந்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் ஆர்வம் பிறக்கும்.
தொழில், உத்தியோகம், கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள். இது நாள் வரை தம்பதிகளிடம் மனக்கசப்புடன் வாழ்ந்த தம்பதிகளிடம் அன்பும், ஆசையும் அதிகரிக்கும்.திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவார்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நிலவிய குறைபாடுகள் அகலும்.பலருக்கு வாழ்க்கைத் துணை மூலம் திரண்ட சொத்துக்கள் கிடைக்கும். அல்லது நிறைய வரதட்சனை, சீர் மற்றும் சொத்துக்களுடன் கூடிய மணமகள் கிடைக்கும். மனைவி அல்லது உறவினரின் உயில், பங்குச்சந்தை, லாட்டரி, இன்சூரன்ஸ் ஆகியவற்றின் மூலம் எதிர்பாராத திடீர் தன வரவு ஏற்பட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பீர்கள்.
சிலருக்கு அடமான சொத்துக்கள் மீண்டு வரும். சிலருக்கு சுய உழைப்பில் சொத்து சுகம், வீடு, வாகனம், ஆடம்பர பொருட்கள் கிடைக்கும். தாய் வழி வீடு மனை தொடர்பான சாதகமான பலன் ஏற்படும். இதுவரைவிற்காமல் இருந்தபூர்வீகஅசையா சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும் . தாயின் ஆரோக்கியம் சீராகும்.பணத் தேவைகள் நிறைவாகும். ஆக மொத்தம்உங்களை சூழ்ந்திருந்த பல விதமான பிரச்சனைகளிலிருந்து மீள வழி பிறக்கும்.
5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை ராசிக்கு 11மிடமான லாப ஸ்தானத்தில் பதிகிறது. லாப ஸ்தானத்திற்கு சனிப் பார்வையும் உள்ளது. குரு மற்றும் சனியின் பார்வை ராசிக்கு இருப்பதால் அனைத்துவிதமான கவலைகளும் அகன்று வளமான வாழ்க்கை கிடைக்கும் காலம். சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைப்பது உறுதி. வெகு நாட்களாக இருந்து வந்தகடன் தொல்லை குறைவதற்கு தேவையான தன லாபம் ஏற்படும்.சேமிப்பு உயரும் . 11மிடம் கடகம் என்பதால் வெளிநாட்டு தொழில், உத்தியோக வாய்ப்பும் கிடைக்கும் மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும்.
சிலர் மூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் ஆரம்பிக்கலாம். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கையில் ஆர்வம் மிகும்.சிலருக்கு விலை உயர்ந்த சொகுசு வாகன யோகமும் உண்டாகும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். அலுவலகப் பணிகள் வழக்கம் போல் நடக்கும். ஆனால் வேலைப் பளு அதிகமாக இருக்கும்.
வேலை பளுவால் ராஜினாமா செய்ய நினைத்தால் கூட முடியாத வகையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சுய தொழில் புரிவர்களுக்கு தொழில் நடக்கும். கூட்டம் கலை கட்டும். காசு கொட்டி வைக்க கல்லாவில் இடம் பத்தாது. 8ல் ராகு இருப்பதால் சிலர் பணத்தை இரட்டிப்பாக்குவது போன்ற செயல்களில் முதலீடு செய்து அதிர்ஷ்டத்தை நம்பி பணத்தை இழக்க வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வம்பு வழக்கு வராது.
7ம் பார்வை பலன்கள்:குருவின் 7ம் பார்வை ராசிக்கு இருப்பதால் உங்களை பீடித்த பதம் பார்த்த அனைத்து இன்னல்களும் அகலும். உங்களின் மனோநிலை வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்படும். நடை, உடை, பாவனைகளில் கம்பீரம் ஏற்படும். தடை பட்டசெயல்கள் வெகு விரைவில் செயலாக்கம் பெறும்.உங்களுடைய தகுதி, திறமைஉயரும். சமூதாய அங்கீகாரம்ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியத்தையும் குரு பகவான் தருவார். சகலசௌபாக்கியமும் உருவாகும்.யோகா, மூச்சுப் பயிற்சி, மெடிடேசன் மூலம் உடல் ஆரோக்கியம்மேம்படும். மனைவியால் கௌரவ பதவிகள் தேடி வரும்.
9ம் பார்வை பலன்கள்:குருவின் 9ம் பார்வை ராசிக்கு 3ம் இடமான சகாய ஸ்தானத்திற்கு இருப்பதால் மனதில் தெம்பு, தைரியம் உற்சாகம் குடிபுகும். எதிர்காலம் பற்றிய பயம் அகலும். புதுப்புது முயற்சியில் ஈடுபடுவர்கள். சிலருக்கு அரசியல் ஆர்வம் துளிர்விடும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
அடிக்கடிசிறு தூர பயணம் ஏற்படவாய்ப்புள்ளது. ஒருசிலருக்கு வீடு மாற்றம், ஊர்மாற்றம்ஏற்படவாய்ப்பு உண்டு. உங்களுடைய தனித் திறமை மிளிரும். உங்களின் செயல் திறனில் மாற்றம் ஏற்பட்டுலகுவாக பணியாற்றி நற்பெயர்பெறுவீர்கள். இளைய சகோதரத்தின் மூலம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள்மறைந்து நல்லிணக்கம்ஏற்படும். உடன் பிறந்தவர்களின் இல்லத் திருமணம் உங்கள் தலைமையில் விமரிசையாக நடக்கும். உயில், சொத்து வழக்குகள் சாதமாகும். ஜாமீன் பிரச்சனைகள் தீரும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட பிணக்குகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு படிக்கும் பாடம் நன்றாக புரியும். ஞாபக சக்தி அதிகரிக்கும். பாடம் நன்றாக புரிந்து ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் நல்ல மதிப்பெண் எடுப்பீர்கள்.கல்வி முன்னேற்றத்திற்கு விடுதியில் தங்கி படிக்கலாம். தீர்த்த யாத்திரை, ஆலய வழிபாடு,மந்திர உபதேசங்கள் கிடைக்கும்.
முன்னோனோர்களின் நீத்தார் கடன்தொடர்பான வழிபாட்டு குறைவை சரி செய்ய ஏற்ற காலம். ராசி அதிபதிபுதன் என்பதால்கணிதம் சார்ந்த தொழில், வங்கி தொழில், அறிவு சார்ந்த தொழில் ,ஜோதிடம் , கல்வி நிறுவனங்கள் புத்தக விற்பனை சிறப்பாக இருக்கும்.தகவல் தொடர்பு துறை , ஊடகங்களில் செய்தித் துறை போன்றவற்றால் அனுகூலம் ஏற்படும். அரசாங்க ஒப்பந்த, கண்டிராக்ட் தாரர்களுக்கு நன்மைகள் ஏற்படும்.
வக்ர பலன்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பேசவேண்டும். எதிர்கட்சியினர் உங்கள் வார்த்தையைக் கொண்டே உங்களுக்குகலங்கத்தை ஏற்படுத்துவார்கள்.
ராகுவும், கேதுவும் சாரப் பரிவர்த்தனையில் சஞ்சரிக்கும் காலத்தில் பிரமாண்ட வாய்ப்புகள் தேடி வரும்.திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வருமானத்தை மறு முதலீடாக மாற்றக்கடாது. கடன் வாங்கக் கூடாது. சில நேரங்களில் அவை நன்மையாகவும்பல நேரங்களில்தீமையாகவும்முடிந்து விடும். 5ல் சனி இருப்பதால் புத்திர பேறு ஏற்படுவதில் கால தாமதம் உண்டாகும்.
பெண்கள்:குழந்தைகளின் கல்வி, ஆரோக்யம், திருமணம் என்று ஏதாவது சுப செலவு இருந்து கொண்டே இருக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். சகோதர சகோதரிகளிடம் அனுகூலும் ஏற்படும். தந்தை, தந்தை வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் பெருமாள் கோவில் கருடாழ்வாரை வழிபட மன வேதனை நீங்கும். 5ம் இடத்தில் கோட்சார சனி நிற்பதால் உங்களின் வேண்டுதல்கள் பிரார்தனைகளை குல தெய்வம் நிறைவேற்றித் தரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: ராஜ்நாத் சிங் பேட்டி
மிச்சாங் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு முதலமைச்சரை சந்தித்தார் ராஜ்நாத் சிங்
தஞ்சை ராஹத் டிரான்ஸ்போர்ட் மோசடி வழக்கு: பிளக்ஸ் நிறுவன உரிமையாளர் கைது
தெலுங்கானா முதல்வராக பதவி ஏற்ற ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஹஜ் பயணம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
