என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 26 ஜனவரி 2025

    இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். வர வேண்டிய தொகை வந்து சேரும். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025

    நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்க வேண்டிய நாள். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றங்களை  செய்வீர்கள். பழகிய சிலரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் சூழ்நிலை உருவாகும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 23 ஜனவரி 2025

    மங்கல ஓசை மனையில் கேட்கும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்து நெருக்கடியை கொடுக்கலாம். சோம்பலால் திட்டமிட்ட பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 22 ஜனவரி 2025

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். வழக்கமான பணிகளில் மாற்றம் செய்ய நேரிடலாம். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாளவும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 21 ஜனவரி 2025

    யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேரும். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 20 ஜனவரி 2025

    முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து மகிழும் நாள். வியாபாரத்தில் பணியாளர்களை மாற்றும் சிந்தனை உருவாகும். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 19 ஜனவரி 2025

    நாணய பாதிப்பு ஏற்படாமல் நடந்துகொள்ள வேண்டிய நாள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உணர்ச்சிவசப்படுவதன் மூலம் உறவினர் பகை ஏற்படலாம்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 18 ஜனவரி 2025

    எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 17 ஜனவரி 2025

    ஒற்றுமை பலப்படும் நாள். நேற்றைய பிரச்சனையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். கொடுக்கல், வாங்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் உருவாகும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 16 ஜனவரி 2025

    திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. வியாபார முன்னேற்றம் கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வரலாம்.

    ×