என் மலர்

  ரிஷபம் - ஆண்டு பலன் - 2022

  ரிஷபம்

  ஆங்கில ஆண்டு பலன் - 2022

  கலையார்வம் மிகுந்த ரிஷப ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு முழுவதும் குரு மற்றும் சனியின் சஞ்சாரங்கள் ஓரளவு சாதகமாகவே உள்ளது. ஏப்ரல் 2022-க்கு பிறகு ராகு/கேதுக்கள் 6,12-ம் இடங் களுக்கு மாறும் போது ராகு/ கேதுவால் ஏற்படும் இன்னல்கள் அகலும்.

  இந்தப் புத்தாண்டில் தொழில் மேன்மை உண்டாகும். ஊதியஉயர்வு, பதவி உயர்வு உண்டாகும். காரியத்தடை நீங்கும். புதிய எண்ணத்துடன் பாடுபட மனதில் தெம்பு பிறக்கும். தொட்டது துலங்கும். ஆன்மீகத் தேடுதல் கூடும். மன வேதனை மறையும். உங்களின் குலதெய்வ அருள் கிடைப்பதை உணருவீர்கள். பக்தி அதிகமாகும். நீங்கள் நினைத்த அத்தனையும் படிப்படியாக நடக்கும். இந்த புத்தாண்டிற்கான விரிவான பலன்களை காணலாம்.

  குரு சஞ்சார பலன்:- ஏப்ரல் 13, 2022 வரை குரு பகவான் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வியாபாரமே செய்ய முடியாத நிலை, இழுத்து மூடிவிட்டுச் செல்லும் நிலையில் இருப்பவர்கள், வேலை யாட்களால் தொழில் நெருக்கடியில் இருந்தவர்களுக்கு கும்ப குருவால் நம்பிக்கை துளிர் விடும். தொழில், உத்தியோகத்தில் நிலவிய வெறுப்புகள் மறையும்.

  தொழில் மற்றும் பிற தேவைக்காக கடன் வாங்கலாம். எதிரி, கடன், வைத்தியச் செலவு அதிகரிக்கும். போட்டி, பொறாமை உருவாகும். இவற்றை சமாளிக்கும் வைராக்கியம் உருவாகும். போட்டியையும், எதிரியையும் சமாளிக்கும் வல்லமை பெற்றவரே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.

  நீண்ட காலத் திட்டங்களும், லட்சியங்களும், கனவுகளும் நிறைவேறும். கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டி தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி ஏற்பட வாய்ப்ப்பு உள்ளது. குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்கள் பெயரில் இருந்த கலங்கங்கள் மறையும். ஏப்ரல் 13-க்கு பிறகு 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு மாறும் குருவால் பயம், குழப்பம் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

  பல்வேறு விதமான தொடர் ஆதாயங்கள் கிடைக்கும். புதிய எண்ணத்துடன் உழைக்க மனதில் தெம்பு பிறக்கும். தொழிலிலும் குடும்பத்திலும் விரும்பத்தகுந்த மாறுதல்கள் நடக்கும். அவமானப்படுத்திய மனைவி, பிள்ளைகள் மதிப்பு, மரியாதை தருவார்கள். கடன் தொல்லை படிப்படியாக குறையும். சிலருக்கு கடன் இருந்த சுவடே தெரியாது.

  தொட்டது துலங்கும். என்றோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். புதிதாக வாங்கப் போகும் சொத்தின் மதிப்பும் பல மடங்கு உயரும். விற்காமல் கிடந்த சொத் துக்கள் நல்ல லாபத்திற்கு விற்கும். தடைபட்ட உடன் பிறந்தவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெறும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குல, இஷ்ட தெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். வாரிசுகளுக்கு திருமணம், பிள்ளைப் பேறு, நிலையான சொத்து அமைவது, தொழில், உத்தியோக வாய்ப்பு போன்ற சுப நிகழ்வுகளால் மனதில் நிம்மதி கூடும்.

  சனியின் சஞ்சார பலன்கள்:- 9-ம் இடச்சனி என்பதால் இழந்த பாக்கிய பலன்களை மீண்டும் கிடைக்கப்பெறுவீர்கள். தொழில்/ வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரலாம். மோசமான பிரச்சனைகளை சந்தித்தவர்கள் கூட தலை நிமிர்ந்து நிற்க கூடி நல்ல நேரம் ஆரம்பம். டிரேடிங் துறையில் குறிப்பாக ஜவுளி அழகு ஆடம்பர பொருள், விற் பனையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

  வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கப் பெற்று முன்னேற்றப் பாதையில் செல்லுவார்கள்.பகல், இரவு பாராமல் அல்லும் பகலும் உழைத்த உழைப்பு பணமாக காய்க்கப்போகிறது.

  26-2-2022 முதல் 6-4-2022 வரை சனி பகவானும் 7, 12-ம் அதிபதியான செவ்வாய் இணைகிறார்கள்.சிலருக்கு தடைபட்ட திருமணம் கைகூடும்.தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக இக்கால கட்டத்தில் சிலர் வாழ்க்கை துணையை பிரிந்து வாழ நேரலாம் அல்லது கணவன் மனைவி கருத்து வேறுபாட்டாலும் பிரிய நேரும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு பஞ்சாயத்து நீதி மன்றம் செல்லும் நிலையை ஏற்படுத்தும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். தவறான நட்பு வலையில் மாட்டலாம்.களத்திரம், நண்பர்கள் மூலம் வம்பு, வழக்கு, கோர்ட் கேஸ் பிரச்சனை வரும். வம்பு வழக்கிற்கு நீதி மன்றம் செல்லாமல் பெரியோர்களின் முன்னிலையில் பேசி தீர்த்தல் நலம் தரும்.

  ராகு/கேது சஞ்சார பலன்:- ஏப்ரல் 12, 2022 வரை ராசியில் சஞ்சரிக்கும் ராகு/கேதுவால் சிலருக்கு ஆழ்மனதில் இனம் புரியாத கலக்கம் தோன்றும்.

  தனித்திறமைகள் வெளிப்படும். எல்லாம் சரியாகவே நடந்தால் கூட நாம் செய்வது சரியா? என்ற இனம் புரியாத பய உணர்வு உங்களுக்குள் இருந்து கொண்டு தான் இருக்கும். ஒரு சிலருக்கு செரிமானக் கோளாறு இருக்கும்.

  ஜென்ம ராசி மற்றும் ஏழில் ராகு/கேதுக்கள் என்பதால் நாக தோஷம் உண்டாகும். நாக தோஷத்தால் திருமணத்தடை மற்றும் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, ஒற்றுமை குறைவு, உடல்நலக்குறைவு, கருச்சிதைவு போன்ற பிரச்சினைகள் எழும். ஜனன கால ஜாதகத்தில் தற்போது நடைபெறும் தசாபுத்திக்கு ஏற்பவே அசுப பலன்களின் பாதிப்பு இருக்கும் என்பதால் பயப்பட தேவையில்லை.

  லக்னத்தில் உள்ள ராகு உங்களை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க வைத்து பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். சுக்கிரன் வீட்டு ராகு பணத்தை அள்ளி அள்ளி கொடுப்பார். நிறைய பணம் வரும். ஆனால் கையில் பணம் தங்காது. ராகு அள்ளிக் கொடுக்கும் பணத்தை விருச்சக கேது அளவில்லாத செலவை கொடுத்து சேமிப்பை கரைப்பார். குடும்ப உறுப்பினர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களின் எதிர்பாராத பொருளாதார தேவையை நிறைவு செய்ய அதிக பண உதவி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

  எனினும் கடன் பிரச்சனையிலிருந்து பூரண விடுதலையாகுவீர்கள். ஏப்ரல் 12-ல் ராகு பகவான் பனிரெண்டாம் இடமான மேஷத்திற்கு மாறுகிறார். கேது ஆறாம் இடமான துலாத்திற்கு மாறுகிறார். மறைவு ஸ்தானத்தில் ராகு/கேதுக்கள் வரும் போது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார்கள். விரயத்தை ராகு மிகுதிப்படுத்துவார். வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.

  குழந்தைகளின் படிப்பு, திருமணம் வீடு, வாகன செலவு என வாழ்க்கைக்கு அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்ய நேரும். எலும்பு தேய்மானம், மூட்டு வலி தொடர்பான பிரச்சினைகள் கடுமையாக பாதிக்கும். ஒரு சிலருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய நேரும். எது எப்படி இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.

  ஆறாமிட கேது பொருள் கடன் மட்டும் அல்ல ஊழ் வினையால் ஏற்படும் உடல் உபாதைகள். எதிரிகள், பிறவிக் கடன், பித்ரு கடனையும் தீர்க்க உதவுவார்.

  திருமணம்:- ராசியில் ராகுவும் ஏழில் கேதுவும் நின்று கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தை வெளிப்படுத்துகிறது.மேலும் 9-ல் ஆட்சி பலம் பெற்று நிற்கும் பாக்கியாதிபதி சனி ஆன்மீக நாட்டத்தையும், வெளியூர் வெளிநாட்டு வாழ்க்கையையும் ஏற்படுத்தியதால் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பும் குறைவுபட்டு இருக்கும். தற்போது ராசிக்கு 10-ம் இடமான கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தைப் பார்க்கிறார். நான்காம் இடமான சுக ஸ்தானத்தை பார்க்கிறார். தடைபட்ட அனைத்து வழிகளும் திறந்து 2022 ஏப்ரல் மாதத்திற்குள் உங்களுக்கு கெட்டி மேளம் கொட்டப்படும்.

  பெண்கள்:- கணவன், மனைவியிடம் நிலவிய கருத்து வேறுபாடு குறையும். சில பெண்களின் விவாகரத்து வழக்கு சாதகமாகி விரும்பிய ஜீவனாம்சம் கிடைக்கும். உங்களுக்குள் நிலவிய மறைமுகப் போர், மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும். சக உழியரால் ஏற்பட்ட அவமானம் மறையும். மாமியார், மாமனார், நாத்தனார், மச்சினர் பிரச்சனை குறையும்.

  விவசாயிகள்: -கடந்த ஆண்டு ஏற்பட்ட இழப்புகளால் உங்களுக்குள் பதிந்த எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றும் நேரம் வந்துவிட்டது. இந்த ஆண்டு நீங்கள் பயிருடன் பணத்தையும் சேர்த்து தான் அறுவடை செய்வீர்கள். பங்குதாரர் இல்லாத விவசாயமாக இருந்தால் பயிருடன் பணமும் வீடு வந்து சேரும். விவசாயிகள் நீண்ட காலமாக செலுத்தாக கடன் பாக்கிகளை அரசு தள்ளுபடி செய்யும்.

  உத்தியோகஸ்தர்கள்:- உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் சிறிது சிறிதாக மேலதிகாரியுடன் இருந்த கருத்து வேறுபாடு மாறும். உங்களுக்கு ஆதரவு தரும் புதிய மேலதிகாரி வரலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். வேலையில் நாட்டம் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கும். அரசு, வெளிநாட்டு வேலைக் கான முயற்சிகள் பலிதமாகும்.

  முதலீட்டாளர்கள் / வியாபாரிகள்:- புதிய தொழில் திட்டங்களுடம் போதிய முதலீடுகள் வைத்துள்ள புதிய தொழில் பங்குதாரர் அல்லது நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் தடவாளப் பொருட்கள் வாங்க அரசின் நிதியுதவி மற்றும் நலத்திட்டங்கள் பயன்படும். வேலையாட்களின் அனுசரனை தொழிலில் தடையற்ற வளர்ச்சி உண்டாகும். மதி நுட்பம் நிறைந்த நல்ல தொழில் ஆலோசகர் மற்றும் வேலையாட்கள் அமைவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொழில், வியாபாரம் செய்பவர்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

  அரசியல்வாதிகள்: 9-ல் சனி இருப்பதால் பெயர், புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். நினைத்ததை நிறை வேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உங்கள் தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றி மக்களின் ஆதரவை பெறுவீர்கள். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உயர் பதவி கிடைக்கும்.

  மாணவர்கள்: -படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். முன்பை விட அதிக ஈடுபாட்டுடன் படித்து நல்ல மதிப்பெண் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் தொடர்வார்கள். அரியர்ஸ் வைத்தவர்கள் மீண்டும் எழுதி வெற்றி பெறுவார்கள்.

  கிருத்திகை 2,3,4-ம் பாதம்: குடும்ப உறவுகளுடன் எல்லா விஷயங்களையும் மனம் விட்டுப் பேசி மகிழும் படியான சூழல் உருவாகும். சனிக்கிழமைகளில் வரும் பிர தோஷ நாளில் ஈஸ்வரனை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபட நன்மை அதிகமாகும்.

  ரோகிணி:- ஏற்றமும், இறக்கமும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை என்பதை உணர்ந்து எதர்த்தமாக வாழப் பழகுவீர்கள். திங்கட்கிழமைகளில் மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து அம்பிகையை வழிபட மன நிம்மதி உண்டாகும்.

  மிருகசீரிஷம் 1,2 :- இந்த ஆண்டு உங்கள் கவலைகள், கடன்கள் அனைத்தையும் கோட்சார குரு, சனி, ராகு/ கேதுக்கள் தீர்த்து வைப்பார்கள். செவ்வாய்கிழமை 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி நவகிரக அங்காரகனை வழிபட இன்னல்கள் அகலும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×