என் மலர்tooltip icon

    ரிஷபம்

    வார ராசிபலன் 7.12.2025 முதல் 13.12.2025 வரை

    7.12.2025 முதல் 13.12.2025 வரை

    ரிஷபம்

    தன்னம்பிக்கை நிறைந்த வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ராசிக்கு 7-ம் இடத்தில் சூரியன் மற்றும் புதனுடன் இணைந்து ராசியை பார்க்கிறார். உங்கள் எண்ணங்கள், யோசனைகள் திட்டங்களை செயல்படுத்தக்கூடிய சாதகமான சூழ்நிலை உருவாகும். இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். கடன் தொல்லை இழப்புகள், விரயங்கள் குறையும்.

    தொழிலில் மூலம் மதிப்பு, மரியாதை உயரும். தடைபட்ட வாடகை வருமானம் வரத்துவங்கும். புதிய வீடு, மனை வாங்கும் முயற்சி கைகூடும். சொத்துக்களுக்கு நல்ல வாடகை தாரர்கள் கிடைப்பார்கள். வெளிநாட்டு வேலை முயற்சி நிறைவேறும். பெண்களுக்கு கணவரின் பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும். தாயின் அன்பும் ஆசிர்வாதமும் தாய் வழிச் சொத்தும் கிடைக்கும்.

    புதிய தொழில் முயற்சிக்காக வெளியூர், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள நேரும். தந்தை வழிச் சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினை இழுபறியாகும். தொழில் சார்ந்த விசயங்களில் அரசின் சட்ட திட்டங்களை கடைபிடிப்பது நல்லது. குல அல்லது இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத்தும் சுபமாகவே இருக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×