என் மலர்
ரிஷபம்
வார ராசிப்பலன்
31.10.2022 முதல் 06.11.2022 வரை
புத்தியை தீட்ட வேண்டிய வாரம். ராசி மற்றும் 6-ம் அதிபதி சுக்ரன் 6-ல் ஆட்சி பலத்துடன் இருப்பதால் பணவரவு நன்றாக இருக்கும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். ஒரு சிலர் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்து சம்பாதிப்பார்கள். போட்டி பந்தயங்களில் அமோகமாக வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஏற்றமும், முன்னேற்றமும் இருக்கும்.
அலுவலக சுமையும் அலைச்சலும் உங்களுக்கு சிரமம் தரும். எனினும் உத்தியோகத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். பூர்வீகச் சொத்துக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்ப நலனுக்காக இரவு பகல் பாராது உழைப்பீர்கள். சிலர் கடன் பெற்று புதிய வாகனம், சொத்துக்கள், வாங்குவார்கள். சிலர் செல்வாக்கை காட்ட கடன் வாங்கி செலவு செய்வார்கள்.
உடல் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்பு தோன்றினாலும் சமாளித்து விடுவீர்கள். ஆன்லைன் வர்த்தகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமணத் தடை அகலும். தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும். வரவு, செலவு சீராக இருக்கும். சிவ வழிபாடு நன்மை தரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406