என் மலர்tooltip icon

    ரிஷபம்

    வார ராசிபலன் 4.1.2026 முதல் 10.1.2026 வரை

    4.1.2026 முதல் 10.1.2026 வரை

    ரிஷபம்

    குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் நின்று தனம் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவை பார்க்கிறார். குரு ராசி அதிபதியை பார்ப்பதால் வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும். வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும்.

    விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். விலை உயர்ந்த நவீன ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண தடை விலகி விவாகம் நடைபெறும். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×