என் மலர்tooltip icon

    ரிஷபம்

    வார ராசிபலன் 30.11.2025 முதல் 6.12.2025 வரை

    30.11.2025 முதல் 6.12.2025 வரை

    ரிஷபம்

    நல்லவிதமான மாற்றங்கள் உருவாகும் வாரம். ராசிக்கு 6-ல் ஆட்சி பலம் பெற்று நின்ற ராசி அதிபதி சுக்கிரன் வார இறுதியில் 7-ம் மிடத்திற்கு சென்று ராசியை பார்ப்பார். இது ரிஷப ராசியினருக்கு இழந்த இன்பங்களை மீட்டு தரக்கூடிய அமைப்பாகும். எதையும் தைரியத்தோடு செய்யக் கூடிய மன பலம் அதிகரிக்கும். திறமையான பேச்சால் மற்றவர்களை வசீகரம் செய்யக்கூடிய தன்மை உருவாகும்.

    திறமைகள் அதிகரிக்கும். செயல் திறன் கூடும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கடன் சுமைகள் படிப்படியாக குறையும். திருமண தடை அகலும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும். வேலைப்பளு குறையும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும்.

    புத்திர பிராப்தத்தில் நிலவிய குறைபாடுகள் சீராகும். பூர்வீகச் சொத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். அழகு ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு பன்னீர் பூக்களால் அர்ச்சனை செய்யவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×