என் மலர்tooltip icon

    ரிஷபம்

    வார ராசிபலன் 28.12.2025 முதல் 3.1.2026 வரை

    28.12.2025 முதல் 3.1.2026 வரை

    ரிஷபம்

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு சனியின் 3ம் பார்வை உள்ளது. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு வக்ரமாக இருப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் மனதை வருத்தும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களது செய்கை கோபத்தை அதிகரித்தாலும் நிதானத்தை கடைபிடித்தால் தேவையற்ற பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

    தொழில், உத்தியோக ரீதியான பாதிப்பு எதுவும் இருக்காது. தொழில் கூட்டாளிகளிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. நல்ல சொந்த வீட்டிற்குச் செல்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.

    ஆண், பெண்களுக்கு திருமண வாய்ப்பு தேடி வரும். குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் வைத்தியத்தில் சீராகும். வீட்டுக்கடன் குறைந்த வட்டியில் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சொத்து தொடர்பான முக்கிய முடிவு, பத்திரப்பதிவுகளை ஓரிரு வாரங்களுக்கு தவிர்க்கவும். நடராஜருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட எல்லா விதமான பிரச்சினைகளும் சீராகும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×