என் மலர்
ரிஷபம்
வார ராசிபலன் 27.7.2025 முதல் 2.8.2025 வரை
27.7.2025 முதல் 2.8.2025 வரை
காதல் கைகூடும் வாரம். 7, 12ம் அதிபதி செவ்வாய்க்கு சனி பார்வை இருப்பதால் முன்னோர்களின் நல் ஆசியால் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரும் இந்த வாரத்தில் எல்லா வகையிலும் உங்களுக்கு சாதகமான நன்மைகள் உண்டாகும். புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். எதையும் சமாளிக்கும் தைரியமும் ஆற்றலும் உருவாகும்.
திருமணம் தொடர்பான பாவகங்கள் மிக வலிமையாக இயங்குவதால் திருமணத் தடை அகலும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிப்பார்கள். ஆக்கப் பூர்வமான ஆலோசனைகள் உதயமாகும். புதிய பதவிகள் கிடைத்து, அதற்கேற்ப அந்தஸ்தும் உயரும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு. பங்குச் சந்தை ஆதாயம் உபரி வருமானத்தைப் பெற்றுத்தரும்.
பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தால் புகுந்த வீட்டில் கவுரவம் கூடும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். இடமாற்றங்கள் ஏற்படலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் வரும். பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். கருட பஞ்சமி அன்று கருட தரிசனம் செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






