என் மலர்
ரிஷபம்
வார ராசிபலன் 23.2.2025 முதல் 01.03.2025 வரை
23.2.2025 முதல் 01.03.2025 வரை
அதிர்ஷ்டமான வாரம். 2,5-ம் அதிபதி புதன் நீச்ச பங்க ராஜ யோகம் பெறுகிறார். இது ரிஷபத்திற்கு மிகப் பெரிய வாழ்வியல் மாற்றங்கள் உண்டாக்கும் காலம். பிரிந்து சென்ற உறவுகள் தேடி வருவார்கள்.பழகிய வட்டாரத்தில் மதிப்பும், அந்தஸ்தும் கூடும். தொழிலில் நிலவிய தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும்.
பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். 12 ராசிகளில் வரக் கூடிய சனிப் பெயர்ச்சியில் அதிக சுப பலன்களைப் பெறப் போவதும் ரிஷப ராசிதான். கடன்கள் படிப்படியாக குறையத் துவங்கும். மறுமண முயற்சிகள் கைகூடும்.
எலியும், பூனையுமாக இருந்த தம்பதிகள் நண்பர்களாக, காதலர்களாக மாறுவார்கள். வம்பு, வழக்குகளில் இருந்த இழுபறி நிலைமாறி தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக முடியும். 25.2.2025 அன்று 12.56 காலை வரை சந்திராஷ்டமம் உள்ளது. ஓய்வு நேரம் குறையும்.
தேவையற்ற அலைச்சல் டென்சன், உடல் சோர்வு ஏற்படும். பேச்சால் வீண் பிரச்சனை ஏற்படும் என்பதால் தேவையில்லாத பேச்சினைத் தவிர்க்கவும். சிவராத்திரியன்று பஞ்சாமிர்த அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






