என் மலர்
ரிஷபம்
வார ராசிபலன் 21.12.2025 முதல் 27.12.2025 வரை
21.12.2025 முதல் 27.12.2025 வரை
ரிஷபம்
அதிர்ஷ்டமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் செவ்வாயுடன் இணைந்து குரு பார்வை பெறுகிறார். விபரீத ராஜயோகம் கை கூடி வரப்போகிறது. அதிர்ஷ்ட பணம், பொருள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கையில் பணம் தாராளமாக நடமாடும். வேலையில் இருந்த சிரமங்கள் குறையும். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
மகிழ்ச்சியான சம்பவங்கள் அதிகம் நடைபெறும். கஷ்ட காலம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப்போகிறது. சிலர் சிறு தொழில் புதியதாக கற்று அது சார்ந்த தொழில் ஆரம்பிக்கலாம். இதுவரை வேலை கிடைக்காத மகள், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம், சுபகாரியம் தொடர்பாக இந்த வாரம் பேசி முடிக்கலாம்.
திருமணம் முடிந்து சண்டை போட்டு பிரிந்தவர்கள் இனி சந்தோஷமாக சேர்ந்து வாழ்வார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 22.12.2025 அன்று காலை 10.07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் நல்லது சொன்னாலும் மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். பேச்சில் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்தவும்.மகாலட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






