என் மலர்tooltip icon

    ரிஷபம்

    வார ராசிபலன் 20.7.2025 முதல் 26.7.2025 வரை

    20.7.2025 முதல் 26.7.2025 வரை

    முன்னேற்றங்கள் உண்டாகும் வாரம். ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி சுக்கிரனுக்கு சனி பார்வை. எதிர்பாராத நல்லவை நடக்கும். தடைபட்ட காரியங்கள் தாமாக நடக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டாகும். இக்கட்டான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வீடு மாற்றம், வேலை மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது.

    அரசுப் பணிக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைக்கான பணி நியமன ஆணை கிடைக்கப் பெறுவார்கள். பழைய முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். ஆடி மாதம் என்பதால் பெண்கள் வீட்டிற்கு தேவையான மங்கலப் பொருட்கள் வாங்குவார்கள்.

    பிள்ளைகள் மீண்டும் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள். புத்திர பாக்கியம் உண்டாகும். வெளிநாடு முயற்சியில் முன்னேற்றம் உண்டு. சிலர் புதிய செல்போன் வாங்கலாம். தவணை முறைத் திட்டத்தில் வீட்டு மனை அல்லது தோட்டம் வாங்குவீர்கள். இன்சூரன்ஸ் பாலிசி முதிர்வுத் தொகை கிடைக்கும். ஆடி வெள்ளிக்கிழமை சர்க்கரை பொங்கல் தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×