என் மலர்tooltip icon

    ரிஷபம்

    வார ராசிபலன் 18.05.2025 முதல் 24.05.2025 வரை

    18.05.2025 முதல் 24.05.2025 வரை

    லாபகரமான வாரம். ராசியில் சுக அதிபதி சூரியன் சஞ்சாரம் செய்வதால் இது ரிஷப ராசிக்கு இழந்ததை மீட்டுக் கொடுக்கும் அமைப்பாகும். ஆத்ம ஞானம் பெருகும். மனக்குழப்பம், மன சஞ்சலம் அகலும். ஞாபக சக்தி அதிகரிக்கும், முயற்சி நிறைவேறும். தகவல் தொடர்பு துறை மற்றும் ஊடகங்களில் பணி புரிபவரின் தனித்திறமைகள் பாராட்டப்படும்.

    அரசு உத்தியோகம் அல்லது அரசின் உதவிகள் கிடைக்கும். ஓரிடத்தில் நிற்காமல் அலைந்து திரிந்து தொழில் செய்பவர்களின் லாபம் பெருகும். புதியதாக தொழில் துவங்க ஏற்றமான காலம். குழந்தை பாக்கியம் ஆண் வாரிசு கிடைக்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ ஆரம்பிப்பார்கள். தொலைந்து போன, திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும்.

    வழக்கத்தைவிட உபரி வருமானம் அதிகளவில் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். சொத்துக்களின் மதிப்பு உயரும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். தாய்வழி உறவுகளால் ஆதரவான பலன் உண்டு. பெண்களுக்கு தாய் வீட்டுச் சீதனம் கிடைக்கும். இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×