என் மலர்
ரிஷபம்
வார ராசிபலன் 15.6.2025 முதல் 21.6.2025 வரை
15.6.2025 முதல் 21.6.2025 வரை
மனதில் அமைதி குடிபுகும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூரியன், குரு, புதன் சேர்க்கை இருப்பதால் சூரியன் குரு சேர்க்கை சிவராஜ யோகம். இழந்த இன்பங்களை மீட்டுப் பெறும் காலம். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொட்டது துலங்கும். நண்பர்கள் மூலம் புதிய தொழில், வருமான வாய்ப்புகள் அமையும். அன்றாட தேவைக்காக சிரமப்பட்ட நிலை மாறும். நிறைந்த பொருளாதாரமும் சொகுசு வாழ்க்கையும் கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர்களின் உல்லாசத்திற்காக தாராளமாக செலவு செய்து மகிழ்வீர்கள். நீண்ட காலமாக நிலவிய திருமணத் தடை அகலும். நல்ல வரன் அமையும். தாயார் மற்றும் மூத்த சகோதரத்தால் ஆதாயம் உண்டு. பல மொழி கற்கும் ஆர்வம் உண்டாகும். அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்குவீர்கள்.
பங்கு வர்த்தகம் நல்ல லாபம் பெற்றுத் தரும். பெண் பிள்ளைகள் பூப்பெய்துவார்கள். பரம்பரை நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைய துவங்கும். திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். சீட்டு பணம், பாலிசி முதிர்வு தொகை, கிடைக்கும். தினமும் காலபைரவ அஷ்டகம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406