என் மலர்
ரிஷபம்
வார ராசிபலன் 15.3.2026 முதல் 21.3.2026 வரை
ரிஷபம்
நிறைந்த மனதோடு நிம்மதியாக செயல்படும் வாரம். தன ஸ்தானத்தில் நிற்கும் குரு பகவான் வக்ர நிவர்த்தியாகிறார். லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் சனி சேர்க்கை உள்ளது. தன, லாப ஸ்தானம் பலம் பெறுவதால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குறைந்த முயற்சியில் நிறைவான வருமானம் உண்டாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்த தேவையான பொருளாதார உதவிகள் கிடைக்கும்.
முதலீட்டாளர்களுக்கு அரசு வழியில் மானியங்கள், உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கையும், சேமிப்பும் அதிகரிக்கும். உயர் கல்வி முயற்சி சித்திக்கும். வாழ்க்கைத் துணைக்கு கவுரவமான வேலை கிடைக்கும். பெண்களுக்கு குழந்தைகள் நலனில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களின் மனமறிந்து நடந்து கொள்வார்கள். அமாவாசை அன்று கோ பூஜை செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






