என் மலர்
ரிஷபம்
வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை
11.5.2025 முதல் 17.5.2025 வரை
மனச் சங்கடம் குறையும் வாரம். ராசியில் 4ம் அதிபதி சூரியன். தன ஸ்தானத்தில் குரு பகவான் என ரிஷப ராசிக்கு கோட்சாரம் சாதகமாக உள்ளது. ஜென்ம குருவால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். நன்மதிப்பும், பெருமையும் உண்டாகும். தோற்றப் பொலிவு மற்றும் பழக்க வழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். மனதில் நல்ல எண்ணங்களை உதயமாகும்.
குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். புதிய பெரிய மனிதர்களின் நட்பால் அந்தஸ்து உயரும், ஆதாயம் அதிகரிக்கும். மனதில் ஆடம்பரமான எண்ணங்கள் அதிகரிக்கும். செலவிற்கு தேவையான பணம் தாராளமாக கிடைக்கும். வீடுகட்டும் பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும்.
மனைவி வழிச் சொத்தில் நிலவிய எதிர்ப்புகள் அகன்று முழுச் சொத்தும் கிடைக்கும். உபரி வருமானம் கிடைக்கும். 15.5.2025 அன்று மதியம் 2.07 மணி முதல் 18.5.2025 நள்ளிரவு 12.04 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலர் நண்பர்கள் போல் நடித்து கால் வாரி விடுவார்கள். காது, மூக்கு, தொண்டை தொடர்பான உடல் உபாதைகள் சிரமம் தரும். சித்ரா பவுர்ணமி அன்று ஆடை தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






