என் மலர்
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
15.8.2022 முதல் 21.8.2022 வரை
ஆரவாரம் மிகுந்த வாரம். ராசி அதிபதி சுக்ரன் சகாய, இளைய சகோதர ஸ்தானம் எனும் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். அனைத்து காரியங்களுக்கும் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.விட்டுப் பிரிந்த உறவுகள் ஒட்டி உறவாடுவார்கள்.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கவுரவமும் உண்டாகும். கஷ்டங்களும், சிரமங்களும் குறையும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். துடிப்புடன் செயல்பட்டு தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள். லாப குருவால்வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்.உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைப் பார்கள்.எதிர்பார்த்த இடத்தில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
திருமண முயற்சியில் நல்ல தகவல்கள் கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும்.பிள்ளைகளுக்கான கல்விச் செலவு அதிகரிக்கும். புதிய எதிர்பாலின நட்பால் தொல்லைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406