என் மலர்
ரிஷபம் - வார பலன்கள்
ரிஷபம்
30.3.2025 முதல் 05.4.2025 வரை
கடன் தீர்க்க உகந்த காலம். தற்போது ராசியில் உள்ள குருவிற்கு சனி பார்வை கிடைப்பது தர்ம கர்மாதிபதி யோகம். இந்த கிரக நிலவரம் 14-5- 2025 வரை நீடிக்கிறது. இது கடன் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து மீள பிரபஞ்சம் கொடுத்த சந்தர்ப்பமாகும் எவ்வளவு கடன் சுமையில் உள்ளவர்களும் இந்த காலகட்டத்தில் கடனை தீர்க்கக்கூடிய மார்க்கம் தென்படும்.
அதேபோல் திருமண தடை இருப்பவர்களுக்கும் இந்த காலகட்டத்தில் திருமணம் நடந்து முடியும். குரு பெயர்ச்சிக்குப் பிறகு தன ஸ்தானத்திற்கு குரு சென்ற பிறகும் மணவாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்க கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். பெற்றோர்கள் பெரியவர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தடைபட்ட உயர்கல்வி வாய்ப்பு தற்போது கை கூடி வரும். வெளிநாடு செல்வதில் நிலவிய தடைகள் அகலும். பாஸ்போர்ட், விசா சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய சொத்துக்கள் சேரும். நோய்க்கு உரிய வைத்தியம் கிடைக்கும். மன நிம்மதி கூட விநாயகர் அகவல் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை
23.3.2025 முதல் 29.3.2025 வரை
உற்சாகமான வாரம்.லாப ஸ்தானத்தில் நிற்கும் சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் ஆன்ம பலம் பெருகும். மனக் குழப்பம் நீங்கும். ஏற்றங்களும் நல்ல மாற்றங்களும் வந்து கொண்டே இருக்கும்.குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில் வாய்ப்புகள் தேடி வரும். மனைவி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பணம் தொடர்பான அனைத்து சர்ச்சைகளும் தீரும். மகளின் திருமணத்திற்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். சிலர் கம்பெனி சார்பாக அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணம் செய்ய நேரும். உயர் கல்வி முயற்சி நிறைவேறும்.
அலுவலகத்தில் விரும்பிய எதிர்பார்த்த பணி உங்களுக்கு வழங்கப்படும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். உடல் மற்றும் மனதில் உள்ள சங்கடங்கள் அகலும்.24.3.2025 அன்று காலை 10.25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பணிகளை ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செய்யவும். முக்கியமான பேச்சு வார்த்தையை ஓரிரு வாரம் தவிர்க்கவும். அமாவாசையன்று இயன்ற தான தர்மம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை
16.3.2025 முதல் 22.3.2025 வரை
லாபகரமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும்.பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் சிலருக்கு உழைக்காத அதிர்ஷ்ட வருமானம் கிடைக்கும். தோற்றம் பொலிவு பெறும். ஆன்ம பலம் பெருகும். உங்கள் இனத்தவர் மத்தியில் பெரிய மனிதராக இருப்பீர்கள். புத்திக் கூர்மையை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பீர்கள். பிள்ளைகளுக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். பிள்ளைப்பேறில் இருந்த குறைகள் அகன்று குடும்பம் தழைக்க அடுத்த வாரிசு உருவாகும். விண்ணப்பித்த அரசு உத்தியோகத்திற்கு சாதகமான பதில் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வால் உள்ளம் மகிழும்.
சிலருக்கு புதிய தொழில் கிளைகள் துவங்கும் வாய்ப்புகள் உள்ளது. குல தெய்வ கோவில் பிரார்த்தனைகளை நிறைவு செய்யும் வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். திரைக்கலை ஞர்களின் தனித்திறமை மிளிரும். 22.3.2025 அன்று நள்ளிரவு 1.46 மணிக்கு சந்திராஷ்டமம் துவங்குவதால் எந்த விஷயத்தையும் கணவன், மனைவி திட்டமிட்டு செய்வது நன்மையை அதிகரிக்கும். பஞ்சமுக நெய் தீபம் ஏற்றி வெள்ளிக் கிழமை மகாலட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
வார ராசிபலன் 9.3.2025 முதல் 15.3.2025 வரை
9.3.2025 முதல் 15.3.2025 வரை
நிறைந்த மனதோடு நிம்மதியாக செயல்படும் வாரம். 11-ம்மிடமான உப ஜெய ஸ்தானமான லாப ஸ்தானத்தில் ராசி அதிபதி சுக்ரன் வக்ரம் பெறு வதால். பல விதமான கிரகங்கள் ரிஷபத்திற்கு மிக மிக சாதகமாக உள்ளது. தொழிலில் புதிய திருப்பங்கள் உண்டாகும். அதிர்ஷ்டமும் கவுரவப் பதவிகளும் தேடி வரும். திடீர் அதிர்ஷ்டத்தால் ஏற்றம் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்த தேவையான பொருளாதார உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் சுபச் செலவு ஏற்படும். வீடு, வாகனம்,பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் நிம்மதி பெரு மூச்சு விடும் நேரம்.
இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனை இனி இல்லை. சின்னத்திரை, பெரியதிரை கலைஞர்களின் திறமைகள் போற்றப்படும்.பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும்.உயர் கல்வி முயற்சி சித்திக்கும்.உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட மனக் கவலை மறையும். எதிரிகள் விலகுவார்கள். கடந்தகால வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மாசி மகத்தன்று பன்னீர் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
வார ராசிபலன் 02.03.2025 முதல் 08.03.2025 வரை
02.03.2025 முதல் 08.03.2025 வரை
வராக்கடன்கள் வசூலாகும் வாரம். ராசியில் உள்ள அஷ்டம குருவின் ஆதிக்கத்தால் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தை அள்ளித்தருவதாக மீடியாக்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து அதிர்ஷ்டப் பொருட்களை வாங்குவீர்கள்.
வராத கடனும் வசூலாகும். கடன் சுமை குறையும். மன உளைச்சல், மனக்குழப்பம் அகலும். பிள்ளைபேறு உண்டாகும். லாபச் சனி துவங்குவதால் வேலை பளு அதிகமாகும். கவுரவம் நிலைத்திருக்கும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
திருமண முயற்சிகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணைக்கு அரசு வேலை கிடைக்கும். சொந்தமனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். பெண்களுக்கு தாய் வீட்டுச் சீதனம், பாகப் பிரிவினை பணம், சொத்து கிடைக்கும்.
சிலர் வீடு மாற்றம் செய்யலாம். தலைமறைவாக வாழ்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள். பிள்ளைகள் பெற்றோர்களின் உண்மையான அன்பை புரிந்து கொள்வார்கள். தாய், தந்தையே தெய்வம் என்ற உணர்வு மேலோங்கும். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். அஷ்ட லட்சமிகளை வழிபட மகிழ்ச்சி கூடும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
வார ராசிபலன் 23.2.2025 முதல் 01.03.2025 வரை
23.2.2025 முதல் 01.03.2025 வரை
அதிர்ஷ்டமான வாரம். 2,5-ம் அதிபதி புதன் நீச்ச பங்க ராஜ யோகம் பெறுகிறார். இது ரிஷபத்திற்கு மிகப் பெரிய வாழ்வியல் மாற்றங்கள் உண்டாக்கும் காலம். பிரிந்து சென்ற உறவுகள் தேடி வருவார்கள்.பழகிய வட்டாரத்தில் மதிப்பும், அந்தஸ்தும் கூடும். தொழிலில் நிலவிய தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும்.
பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். 12 ராசிகளில் வரக் கூடிய சனிப் பெயர்ச்சியில் அதிக சுப பலன்களைப் பெறப் போவதும் ரிஷப ராசிதான். கடன்கள் படிப்படியாக குறையத் துவங்கும். மறுமண முயற்சிகள் கைகூடும்.
எலியும், பூனையுமாக இருந்த தம்பதிகள் நண்பர்களாக, காதலர்களாக மாறுவார்கள். வம்பு, வழக்குகளில் இருந்த இழுபறி நிலைமாறி தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக முடியும். 25.2.2025 அன்று 12.56 காலை வரை சந்திராஷ்டமம் உள்ளது. ஓய்வு நேரம் குறையும்.
தேவையற்ற அலைச்சல் டென்சன், உடல் சோர்வு ஏற்படும். பேச்சால் வீண் பிரச்சனை ஏற்படும் என்பதால் தேவையில்லாத பேச்சினைத் தவிர்க்கவும். சிவராத்திரியன்று பஞ்சாமிர்த அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
வார ராசிபலன் 16.2.2025 முதல் 22.2.2025 வரை
16.2.2025 முதல் 22.2.2025 வரை
நம்பிக்கை அதிகரிக்கும் வாரம். 2, 5-ம் அதிபதி புதன் கேந்திரம் ஏறி சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகம் ஏற்பட்டுள்ளது. தடைபட்ட பாக்கியங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் முயற்சிக்க உகந்த அற்புதமான நேரம். முன்னோர்களின் நல்லாசியால் பூர்வ புண்ணிய பலத்தால் சொத்துத் தகராறுகள் அகலும்.
திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என அவரவர் வயதிற்கேற்ற சுப பலன்கள் உண்டு. புதிய தொழில் துவங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு தேடி வரும்.
பொருளாதாரத்தில் நிலவிய சிக்கல், சிரமங்கள் விலகி பொருள் வரவு அதிகரிக்கும். வராக்கடன்கள் வசூலாகும். கடன் சுமை குறையும். அடமானப் பொருட்களை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் அமையும். 22.2.2025 அன்று மாலை 5.40 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் ஆடம்பரச் செலவை குறைத்து எதிர் நீச்சல் போட்டால் வெற்றி நடைபோட முடியும். வீண் விரயங்கள் அதிகரிக்கும்.சிதம்பரம் நடராஜரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
வார ராசிபலன் 9.2.2025 முதல் 15.2.2025 வரை
9.2.2025 முதல் 15.2.2025 வரை
லாபகரமான வாரம். லாப ஸ்தானத்தில் ராசி அதிபதி சுக்ரன் உச்சம். லட்சியங்களும் கனவுகளும் நிறைவேறும். அரசாங்க உத்தியோகம் அல்லது அதற்கு இணையான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.லாபங்கள் அதிகரிக்கும். வராக் கடன்கள் வசூலாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வரவேண்டிய பி.எப். பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும்.கடன் தொல்லை குறையும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இனம் புரியாத நோய்க்கான காரணம் தெரியும். உரிய வைத்தியம் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு புதிய வெளிநாட்டு வாய்ப்புகள் உருவாகும். வேலையில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.தற்காலிகப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாகும்.தொழில் முன்னேற்றம், அனுகூலம் உண்டு. சிலர் வாழ்க்கைத் துணை, நண்பர்களுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். புதிய எதிர்பாலின நட்பைத் தவிர்க்கவும். பெண்களுக்கு ஆடை அலங்காரத்தில் ஆர்வம் அதிகமாகும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும்.பொன், பொருள் ஆபரணச்சேர்க்கை உண்டாகும். தைப்பூசத்தன்று ரோஜா மாலை அணிவித்து முருகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
வார ராசிபலன் 2.2.2025 முதல் 8.2.2025 வரை
2.2.2025 முதல் 8.2.2025 வரை
அதிர்ஷ்டமான வாரம்.ராசி அதிபதி சுக்ரன் குருவுடன் பரிவர்த்தனை. எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். விசேசமான சுபபலன்களை நடக்கும்.மனக் குழப்பம் அகலும். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் உங்களை வழி நடத்தும் காலம் என்றால் அது மிகையாகாது. என்றைக்கோ வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயரும். பங்கு பத்திரங்கள் நல்ல லாபம் பெற்றுத் தரும். பிள்ளைகள் போட்டித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். கொடுக்கல், வாங்கல் மற்றும் ஜாமீன், கடன் விசயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய தொழில் கடன் கிடைக்கும்.
வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். ஆடை ஆபரண சேர்க்கை, அந்தஸ்தான வீடு, ஆடம்பர வாகனம் என வாழ்வாதாரம் உயரும். குல தெய்வ அனுகிரகமும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கப் பெறுவீர்கள்.திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாயகம் வந்து செல்ல வாய்ப்பு கிடைக்கும்.உடல் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
வார ராசிபலன் 26.1.2025 முதல் 1.2.2025 வரை
26.1.2025 முதல் 1.2.2025 வரை
மகிழ்ச்சியான வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி சுக்ரன் 8, 11-ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். இது நிரந்தரமான முன்னேற்றத்தை உண்டாக்கும் மிகச் சிறப்பான கிரக அமைப்பாகும்.தடைபட்ட காரியங்கள் தாமாக நடந்து முடியும்.பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்படலாம். உத்தியோக பணிகளில் உயர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் கைகூடும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.
நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும்.உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். திருமணத் தடை அகலும். கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.வீட்டிற்கு தேவையான பொருட்களை சேகரிப்பதில் பெண்களுக்கு ஆர்வம் கூடும். 26.1.2025 அன்று காலை 8.26 முதல் 28.1.2025 அன்று மதியம் 2.52 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதப்படும். பண விசயத்தில் யாரையும் நம்பக் கூடாது. அமாவாசையன்று தாமரை மாலை அணிவித்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
வார ராசிபலன் 19.1.2025 முதல் 25.1.2025 வரை
19.1.2025 முதல் 25.1.2025 வரை
இல்லறம் நல்லறமாகும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் வக்ர செவ்வாயின் சஞ்சாரம். தனாதிபதி புதனின் பார்வையில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வருமானம் உயரும். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய சேமிப்புகள் பற்றிய எண்ணம் உருவாகும். கைவிட்டுப் போனது எல்லாம் கிடைக்கும். நல்ல வேலையும், பதவி உயர்வும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிரமங்கள் நீங்கும்.
வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். விபரீத ராஜ யோகத்தால் சக வியாபாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள், இன்னல்கள் மறையும். பூர்வீக நிலப் பிரச்சனை தீர்ந்து பூர்வீகத்தால் யோகம் உண்டாகும். திருமண முயற்சிகளை துவங்கலாம். மாணவர்கள் கல்வியிலும் அதிக கவனம் செலுத்துவார்கள். முதல் திருமணத்தில் தோல்வியை சந்தித்தவர்களுக்கு அடுத்த இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமையும். ஸ்ரீ ராஜ கணபதியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
12.01.2025 முதல் 18.01.2025 வரை
பொற்காலம் துவங்கப் போகும் வாரம். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு 9,10-ம் அதிபதியான சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார். மகாலஷ்மியின் கனிவுப் பார்வை உங்கள் மேல் பதியப் போகிறது. சனி பகவான் ஆதரவு கரம் நீட்டி லாபத்தில் திளைக்க செய்யப் போகிறார். விரும்பிய சொந்த தொழில் வாய்ப்பு தேடி வரும்.
புதிய தொழில் துவங்க, தொழில் கிளைகள் திறக்க, தொழிலை விரிவு செய்ய ஏற்ற நேரம். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அரசின் திட்டங்கள், மானியம், உதவி தொகை கிடைக்கும். வேலை இழந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம்.
தற்போது சுப விரயச் செலவுகளான திருமணம், வீடு கட்டுதல், வாகன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளுதல் புதிய முதலீடு செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம். சிறு பிரச்சனைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் பகை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். தலைமறைவாக வாழ்ந்தவர்கள், காணாமல் போனவர்கள், முதியோர் இல்லம் சென்றவர்கள் வீடு திரும்புவார்கள். பவுர்ணமியன்று அஷ்டலட்சுமிகளை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






