என் மலர்

  ரிஷபம் - சோபகிருது வருட பலன்

  ரிஷபம்

  சோபகிருது வருட பலன் 2023

  தொழில் வெற்றி!

  அழகு, இனிமை, ஆனந்தம் ஈர்ப்பு சக்தி கொண்ட ரிஷப ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டு வெற்றியை வழங்க நல் வாழ்த்துக்கள். பிறக்கப் போகும் இந்த சோப கிருது வருட தமிழ் புத்தாண்டில் அனைத்து வருட கிரகங்களும் ரிஷப ராசிக்கு சாதகமாக உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி ஏப்ரல் 22ல்நடக்கப் போகும் குருப்பெயர்ச்சியில் குருபகவான் ராசி க்கு 12-ம்மிடம் செல்கிறார். ஜனவரி17ல் நடந்தசனிப்பெயர்ச்சியில்சனிபகவான் தொழில்ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்.

  தற்போது 12, 6ம் மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு/கேதுக்கள் அக்டோபர் 30, 2023ல் 11, 5ம் மிடம் செல்கிறார்கள். மன ஆற்றலும் மன உறுதியும் அதிகரிக்கும். உடலும் மனமும் பொலிவு பெறும். தடைபட்ட மகிழ்ச்சியும் சந்தோசமும் இனி தொடரும். இளம் சிறார்கள் நன்றாக படிப்பார்கள். போட்டி பந்தயம் போன்ற வற்றில் ஆதாயம் உண்டு. வம்பு, வழக்கு, சண்டை, அவமானம் முடிவிற்கு வரும்.விரயச் செலவுகள் அதிகரிக்கும்.தொழில் முன்னேற்றம்உண்டாகும். தொழிலை மேம்படுத்த வங்கிகளின் மூலம் கடன் உதவி கிடைக்கும். சிலர் கூட்டுத் தொழிலில் இருந்து விடுபடுவார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

  விற்க முடியாமல் கிடந்த பூர்வீகச் சொத்துக்கள் விற்கும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட தொல்லைகள் சீராகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாக வந்து சேரும். வீடு, வேலை மாற்றம் செய்வீர்கள்.மாங்கல்ய தோஷம் விலகி திருமணம் நடைபெறும்.

  குடும்பம் பொருளாதார நிலை: விலகிய உறவுகள் அவர்களின் தவறுகளை உணர்ந்து மீண்டும் விரும்பி வருவார்கள். குடும்பத்தினர் மீது உங்களுக்கு அக்கறை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

  உங்களைத் துரத்திய துக்கம், துயரம், சங்கடங்கள் விலகும். குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். பணம் பல வழிகளில் பையை நிரப்பும். பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். தொழில் வளர்ச்சியும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும்.கொடுத்த கடன்கள் வசூலாகும். கடன் பிரச்சனையிலிருந்துநிவாரணம் உண்டாகும்.சிலர் குடும்ப உறவுகளுக்காக ஜாமீன் பொறுப்பு ஏற்கும் நிர்பந்தம் உண்டாகும். எதிர்காலத்தில் அது உங்களை தர்ம சங்கடத்தில் மாட்ட வைக்கும் என்பதால் கவனம் தேவை.பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளின் விசாரணை துரிதமாகும்.

  பெண்கள்: பெண்களுக்கு சிறு தொழில், சுய தொழில் செய்யும் ஆர்வம் உண்டாகும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்யும் யோகம் உள்ளது. சேமிப்பு, சிக்கனம் இவற்றில் கவனமாக இருப்பீர்கள்.

  கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். மாமியார், நாத்தனார் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

  கிருத்திகை 2,3,4: பரிபூரண வெற்றியும் மகிழ்ச்சியும் உண்டாகும் வருடம். மனதில் இருந்த இனம் புரியாத பயம் அகன்று தெளிவும், துணிவும் பிறக்கும்.புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். தொழில் ரீதியான முன்னேற்றம் இருக்கும். நிலையான வருமானம் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமானபிரச்சனைகள்நல்ல முடிவிற்கு வரும். வெளிநாட்டுப் பயணம், வேலையில் நிலவிய தடை, தாமதங்கள் விலகும்.

  எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். சுப விரயங்கள் அதிகரிக்கும். பாகப்பிரிவினை சுமூகமாகும். தந்தையின் அன்பும் ஆசியும் கிடைக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சங்கடத்தில் ஆழ்த்திய நோய் வைத்தியத்திற்கு கட்டுப்படும். தினமும் சிவ கவசம் படிக்கவும்.

  ரோகிணி: மாற்றங்கள் நிறைந்த வருடம். உங்கள் செயல்பாடுகளில் பிறரின் தலையீடு குறையும். குல தெய்வ தரிசனம் கிடைக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். தொழிலில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். கூலித் தொழிலாளிகளுக்கு சீரான வேலையும், வருமானமும் கிடைக்கும். தீராத கடனைத் தீர்க்கும் மார்க்கம் தென்படும். எதிரி தொல்லைகள் குறையும். நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை மாறி சாதாரண வைத்தியத்தில் குணமாகும்.சிலரின் சொத்து வாங்கும் முயற்சி சித்திக்கும்.வீடு, வாகனத்தை பராமரிக்கு செலவு அதிகரிக்கும். கல்வி சார்ந்த விசயங்களில் ஏற்பட்ட தடை அகலும். புதிய எதிர்பாலின நண்பர்கள் கிடைப்பார்கள். ஆண்களுக்கு மாமனாருடன் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். கை மறதியாக வைத்த நகை கிடைக்கும். தினமும் லலிதா சகஸ்ஹர நாமம் படிக்கவும்.

  மிருகசீரிஷம் 1 ,2: சகாயங்கள் மிகுந்த வருடம். தைரியமும், தெம்பும் அதிகரிக்கும்.துணிந்து சில முடிவுகளை எடுத்து முன்னேறுவீர்கள். பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்குபூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்புகள் உள்ளது. தொழில் உத்தியோக நிமித்தமாக அடிக்கடி பிரயாணம் செய்ய நேரும்.

  வாடகை வீட்டில்வாழ்ந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறுவார்கள். பணிநிரந்தரமாகும்.அரசு வேலை கிடைக்கும்.வழக்குகள் சாதகமாகும்.

  முறையான முன்னோர்கள் வழிபாட்டால் தடைபட்ட சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகளின் திருமணம், புத்திரபாக்கியம், உயர் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து விதமான சுபபலன்களும் கைகூடும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். தினமும் மகாலட்சுமி அஷ்டோத்திரம் படிக்கவும்.

  பரிகாரம்: இந்த தமிழ் புத்தாண்டில் ரிஷப ராசியினர் முழுக்கமுழுக்க தங்கத்தாலான வேலூர் மாவட்டம் "ஸ்ரீபுரம் ஸ்ரீ லட்சுமி நாராயணிதங்க கோயில் சென்று வழிபட பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ரிஷபம்

  சுபகிருது வருட பலன் - 2023

  நினைப்பதை சாதிக்கும் ஆர்வம் மிகுந்த ரிஷப ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டில்சொல்வாக்கு, செல்வாக்கு அதிகரிக்க நல்வாழ்த்துக்கள்.

  ராகு கேதுக்கள் ராசிக்கு 12, 6ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்கள். குரு பகவான் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் உலா வருகிறார். சனிபகவான் 9ம் இடத்தில் நிற்கிறார். வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவித்த நிலை மறையும்.உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். புதிய எண்ணங்கள்மற்றும் திட்டங்கள் தோன்றும். சேவை மனப்பான்மையை மிகும். ஆன்மீக தொண்டு நிறுவனங்கள், சங்கங்களில் இணைந்து சேவை செய்வீர்கள். வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும். சிலர் மதம் மாறுவார்கள் உங்கள் வாழ்வில் நடந்த கெட்ட சம்பவங்களின் தாக்கம் குறையும்.

  தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும்.உங்களின் புகழ்,அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும்.பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் அனைத்துவிதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளித்து விடுவீர்கள். கடந்த ஆண்டு ரிஷப ராசியினர் அனுபவித்த இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம்.

  குடும்பம்: தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவு செய்வீர்கள். சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள்வாங்கி மகழ்வீர்கள். வாடகை வீட்டு தொல்லை அகலும். இதுவரை விற்காமல் கிடந்த அசையாச் சொத்துக்கள் விற்று விடும். பல தலைமுறையாகவிற்காமல் கிடந்த குடும்ப சொத்து கூட விற்று விடும். பூர்வீக சொத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சட்ட ரீதியாக கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தாய், தந்தை வழி உறவுகளிடம் அறியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு குடும்பத்தில் இணைவீர்கள். பகைமை மறந்து உறவுகள் ஆறுதலாக இருப்பார்கள். அண்டை அயலார் சச்சரவு முற்றிலும் நீங்கும்.

  ஆரோக்கியம்: நாள்பட்ட வியாதிகள் மறையும்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.பயண அலைச்சலால் சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும்.நீண்ட நாட்களாக படுக்கையில் கிடந்தவர்கள் எழுந்து நடமாடுவார்கள். மரணப் படுக்கையில் இருப்பவர்களுக்கு கூட நோய் தாக்கம் குறையும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான சுகர், பிரஷர் போன்றவற்றிற்கு மாற்று மருத்துவம் நல்ல பலன் தரும். கை, கால் மூட்டு வலி குறையும்.. ஆயுள் தீர்க்கம். சிலருக்கு கண்களில் அறுவை சிகிச்சைகள் செய்ய நேரும்.

  பெண்கள்: தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் ஆதரவும் சொத்தும் கிடைக்கும். பொன் பொருள் சேரும். பூமி யோகம் உண்டு. வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு நம்பிக்கையை அதிகரிக்கும். சிலருக்கு வேலையில் மாற்றம் செய்ய நேரும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். குழந்தைகளின் கல்வி ஆர்வம் , முன்னேற்றம் மன நிம்மதி தரும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும்.

  மாணவர்கள்: உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால் இந்த குருப் பெயர்ச்சி ரிஷப ராசி மாணவர்களுக்கு நல்ல எதிர் காலத்தை உருவாக்கித்தரும். பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். 12 ம் இடத்திற்கு ராகு செல்வதால்உயர் கல்விக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகிட்டும். அல்லது விடுதியில் தங்கி படிப்பார்கள். நீங்கள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாட திட்டத்தில் சேர்ந்து படிப்பீர்கள்.

  உத்தியோகஸ்தர்கள்: வேலையில்லாமல் திணறிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு.

  முதலீட்டாளர்கள்: சனி மற்றும் குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால்இழுத்து மூடிவிட்டுச் செல்லும் நிலையில் இருந்த தொழில் கூட விருவிருப்பு அடையும். தொழிலுக்காக வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயற்ச்சிப்பீர்கள். நீண்ட காலமாக உங்களுக்கு வர வேண்டிய பணம் தாமதமாகிக் கொண்டு இருந்தால் இப்பொழுது வசூலாகும். தொழில்சிறப்பாகஇருந்தாலும் 12ம் இடமான விரைய ஸ்தானத்தில் ராகுஇருப்பதால்எவ்வளவு லாபம் இருந்தாலும் உபரி வருமானம் இருக்காது. கோட்சார குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிலருக்கு அதிக முதலீட்டில் தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் உதயமாகும். ராகு விரய ஸ்தானத்தை கடக்கும் வரை முதலீட்டாளர்கள் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.

  அரசியல்வாதிகள்: 7ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு உண்டு. பொது மக்களின் ஆதரவு. 5ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சியில் உங்களுக்கு தலைமைப் பொறுப்புகள் உண்டு. நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த பதவிகள் தேடி வரும். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் தன்னலமற்ற சேவை செய்வீர்கள்.

  கலைஞர்கள்:சுக்ரனின் வீடான ரிஷபத்தில் பிறந்த நீங்கள் கலைத் துறையில் உங்களுக்கென்று தனி இடம் பிடிப்பீர்கள். 5ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் மிகப் பெரிய விருதுகளும், பாராட்டும் கிடைக்கும். அற்புதமான நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

  விவசாயிகள்: நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கும். பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம்பாதுகாப்பான முறையில் விவசாயம் செய்வீர்கள். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு உபரி உற்பத்தியும், உபரி வருமானமும் கிடைக்கும்.

  ராகு/கேது: 21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார். ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ராகு/கேதுக்கள் 12, 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சிலர் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பார்த்துக் கொண்டு இருந்த உத்தியோகத்தை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்வார்கள். சிலருக்கு பார்த்த வேலைக்கு உடனே ஊதியம் வராமல் தடை தாமதமாகும். சிலருக்கு தகாத பெண்களின் நட்பு உருவாகும். கடன் தொல்லை அதிகரிக்கும். தாய்மானுடன் சிறிய மன பேதம் உண்டாகும். சிலருக்கு கண் திருஷ்டி, உடல் அலர்ஜி, செரிமானக் கோளாறு, காய்சல், தலைவலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மருத்துவ செலவு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் ஏதேனும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம். தொழில் எதிரிகள் உங்களை கண்டு விலகுவார்கள். சேமிப்புகள் கரையும்.

  குரு: 29.7.2022 முதல் 23.11. 2022 வரை கோட்சாரத்தில் ராசிக்கு 9ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் வெளியூர், வெளிநாட்டு பயணத்தில் தடை, தாமதம் ஏற்படும். தொழில் போட்டி அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளுடன் மனகசப்பு உண்டாகும். தந்தை குடும்பத்தை பிரிந்து தூர தேசம் செல்லலாம்.சில தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாகவோ, தொழில் நிமித்தம் காரணமாகவோபிரிந்து வாழலாம். தொழில் கூட்டாளிகளிடம்கருத்து வேறுபாடு அல்லதுபிரியும்நிலை ஏற்படும்.

  பரிகாரம்: முறையான பித்ருக்கள் வழிபாடு இன்னல்களை நீக்கும்.

  வரவும் செலவும்

  லாப ஸ்தான குருவால் பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். கடன், வட்டி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். தொட்டது துலங்கும். இது பொற்காலம் என்று சொல்லும் வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும். லாப குருவினால் கிடைக்கும் வருமானத்திற்கு விரய ஸ்தான ராகுசெலவுகளை இழுத்து விடுவார்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×