என் மலர்tooltip icon

    ரிஷபம்

    2025 மாசி மாத ராசிபலன்

    மற்றவர்களை சிந்திக்க வைக்கும் விதம் பேசும் ரிஷப ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்றுள்ளார். அவர், குருவோடு பரிவர்த்தனை யோகமும் பெற்றிருக்கிறார். எனவே இந்த மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

    மனக்கவலை மாறும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். சம்பள உயர்வு பற்றி மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிரபலங்களின் அறிமுகத்தால் பெருமை காண்பீர்கள்.

    சூரியன் - சனி சேர்க்கை

    இந்த மாதம் முழுவதும் தொழில் ஸ்தானத்தில் சூரியனும், சனியும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு அதிபதியான சூரியனும், 10-ம் இடத்திற்கு அதிபதியான சனியும் இணைவதால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். இடமாற்றத்தை விரும்புபவர்களுக்கு அது கைகூடும். வருங்காலம் பற்றிய பயம் அகலும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கும். தந்தை வழியில் ஏற்பட்ட விரயங்கள் அகலும்.

    'வாங்கிய இடத்தையோ, வீட்டையோ விற்று விட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதுபோன்ற இடத்தை மீண்டும் வாங்கும் யோகம் உண்டு. இருப்பினும் சூரியனும், சனியும் அடுத்தடுத்து இருக்கும் தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். உங்கள் ராசிக்கு சப்தம - விரயாதிபதியானவர் செவ்வாய். அவர் வலிமையடையும் இந்த நேரத்தில், கல்யாணம் போன்ற சுபகாரியங்களுக்காக விரயம் செய்வீர்கள்.

    வாழ்க்கைத் துணையின் வேலையில் எதிர்பார்த்த மாற்றம் உருவாகும். அவர்களின் மேற்படிப்பிற்காகவோ, வேலை சம்பந்தமாகவோ எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமல்லாமல், ஆடம்பரப் பொருட்களையும் வாங்கும் யோகம் உண்டு.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் புதன். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் வலிமை இழக்கும் போது, பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கலாம். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய நேரம் இது.

    வருமானப் பற்றாக்குறை ஏற்பட்டாலும், கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடிவரும். அதே நேரம் பூர்வீக சொத்துப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. கட்டிய வீட்டினை கடன் சுமையின் காரணமாக விற்கும் சூழ்நிலை உருவாகும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதத் தொடக்கத்திலேயே மகிழ்ச்சியான தகவல் உண்டு. கலைஞர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

    மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகம் பெறவேண்டும் என்ற எண்ணம் உருவாகும். பெண்கள், அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல முயல்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 13, 14, 26, 27, மார்ச்: 2, 3, 8, 9, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    ×