என் மலர்

  ரிஷபம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

  ரிஷபம்

  குருப்பெயர்ச்சி பலன்கள் - 2022

  அன்பான ரிஷப ராசியினரே ராசிக்கு 11ம் இடத்தில் குருபகவானும், 6ல் கேதுவும், 12ல் ராகுவும், 9, 10ம் இடத்தில் சனி பகவானும் சஞ்சரிக்கிறார்கள்.

  இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் இருந்து பதவி, அந்தஸ்து, கௌரவம் ஆகியவற்றைதந்து கொண்டுஇருந்த குரு பகவான் இனி 11ம்இடமான லாபஸ்தானத்திற்குபெயர்ச்சி ஆகி வந்து பெரும் லாபத்தை தர இருக்கிறார். குரு பகவான்உங்கள் ராசிக்கு 8, 11ம் அதிபதி.லாபாதிபதி லாப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவது மிகச் சிறப்பு. தொட்டது துலங்கும். ரிஷபத்திற்கு குரு அஷ்டமாதிபதி என்பதால் பெரியதாக நன்மை செய்வதில்லை. ஆனால் கோட்சாரத்தில் 11ம் இடத்திற்கு வரும் அனைத்து கிரகங்களும் நன்மையை மட்டுமே செய்யும்.

  பணம் இருந்தால் முகத்தில் தனி கலை தென்படும், என்பது உங்களைப் பார்த்து மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் அளவிற்கு வசீகரமான தோற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும். பற்றாக் குறை வருமானத்தில் சொற்ப்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தியவர்களுக்கு பணம் எனும் தனம்சமூக அங்கீராத்தை பெற்றுத் தரும். ராஜ மரியாதை கிடைக்கும். உங்கள் முயற்சியால் வெற்றியும், சாதனையும் படைப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடைபெறும். தாய், தந்தை மற்றும் பெற்ற மக்களால் செல்வம் சேரும்.

  பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து நல்ல பெயர் கிடைக்கும். கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே, தொழில் செய்து வருமானத்தை பெருக்குவார்கள்.

  வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு அதிக தொழில் முதலீடு செய்யக் கூடிய தொழில் பார்ட்னர்கள் கிடைப்பார்கள். உங்களின் 4ம் அதிபதி சூரியன் என்பதால் சிலர்அழகும், அந்தஸ்தும், ஆடம்பரமும் நிறைந்த அப்பார்மென்ட் வீடு வாங்கி குடியேறுவீர்கள். பழைய வாகனத்தை கொடுத்து புதிய 2 , 4 சக்கர வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ஆடம்பரத்தை, அந்தஸ்த்தைதக்க வைத்துக் கொள்ள அதிக செலவு செய்ய நேரும். அனாவசிய வைத்தியச் செலவு இருக்காது. லாப ஸ்தானத்தில் குரு பகவான் இருந்தாலும் விரய ஸ்தானத்தில் ராகு இருப்பதால் வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும்

  5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை 3ம் இடமான முயற்சி மற்றும் இளைய சகோதர ஸ்தானத்திற்கு உள்ளது. மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். இடப் பெயர்ச்சி செய்யும் வாய்ப்பு உள்ளது. சிலர் தொழில் அல்லது வேலைக்காகசிறு தூரப் பயணம் செய்வார்கள். சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கு சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்கு வந்து விடுவீர்கள். இதுவரை உலகுக்கு தெரியாமல் இருந்து வந்த உங்களுடையதிறமைகள் அனைவருக்கும்தெரியவரும்.

  தங்களின் செயல் திறனில்மாற்றம் ஏற்பட்டுலகுவாக பணியாற்றி நற்பெயர்பெறுவீர்கள். ஆபரணச் சேர்க்கை உருவாகும். வேலையாட்களால் உருவாகிய பிரச்சனை சீராகும். மனோதிடம்கூடும். 3ம் இடத்திற்கு அஷ்டமாதிபதி குரு மற்றும் பாதகாதிபதி சனியின்பார்வையும் இருப்பதால் கூட்டுத் தொழில் செய்யும் சகோதரர்களாக இருந்தால் உங்களின் சகோதர்உழைப்பை தராமல்லாபத்தை மட்டும் எடுத்து செல்வார். கணக்கில் முறைகேடு செய்யவும் வாய்ப்புள்ளது .நிர்வாக கணக்கில் குழப்பம்செய்து கூட்டுத் தொழில் பிரியும் வாய்ப்புள்ளது.

  7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு உள்ளது. 5ம் இடம் என்பது பதவி ஸ்தானம், புத்தி ஸ்தானம் , பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்தி கூர்மை, தெய்வ அனுகிரகம் பற்றி கூறும் இடம் . கோச்சாரத்தில் 5ம் இடத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் இதுவரை கருத்தரிக்காத பெண்களுக்கு பூர்வ புண்ணிய பலத்தால் கரு உருவாகும். கருத்தரிப்பில் சிரமம்உள்ளவர்களுக்கு வைத்தியம் பலன் தரும். பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், முன்னேற்றம் வெகு சிறப்பாக இருக்கும். எப்பொழுது வீட்டில் மேளச் சத்தம் கேட்கும் என்று எதிர்ப்பார்த்த பெற்றோர் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி ஆனந்தம் அடைவீர்கள்.

  கவுரவப் பதவிகள் தேடி வரும். பூர்வீகம்தொடர்பானபிரச்சனைகள் குறையும். குல, இஷ்ட,தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். குல தெய்வம் தொடர்பான வேண்டுதல்கள் பலிதமாகும். குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றஏற்ற காலம் இது.இதுவரைகுல தெய்வம்தெரியாமல்இருந்தவர்கள் முயற்சியின் பேரில் குல தெய்வத்தை கண்டறிய முடியும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். சாஸ்திர ஞானம் கிடைக்கும். விமானம் மூலம்ஆன்மீகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு வரும்.

  11ம் இடம் இரண்டாம் திருமணத்தைக் குறிக்குமிடம். 11ம் அதிபதி குரு 11ல் ஆட்சி பலம் பெற்று 5ம் இடத்தை 7ம் பார்வையாக பார்ப்பதால் இக்கால கட்டத்தில்திருமணம்ஆனவர்கள் கூட தவறான நட்பில்விழுந்துவாழ்கை கேள்விக்குறியாக்கி கொள்வார்கள். ஒருவனுக்குஒருத்தி என்பதே நம் மரபு என்பதை உணர்ந்து செயல்படாவிட்டால் வீட்டு விசயம் வீதி வரை வந்து அவமானப்படுத்தும். மேலும் சுக்ரனின் வீடான ரிஷபத்தில் பிறந்த கலைஞர்கள் கலைத் துறையில் தங்களுக்கென்று தனி இடம் பிடிப்பார்கள். 5ம் இடத்திற்கு குருப் பார்வையும் இருப்பதால் மிகப் பெரிய விருதுகளும், பாராட்டும் கிடைக்கும். அற்புதமான நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தயாரிப்பாளர்கள் சுய ஜாதக பரிசீலினைக்குப் பிறகு பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க வேண்டும்.

  9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 7ம் இடத்திற்கு இருப்பதால் திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம்நடத்துவார்கள். தம்பதியினர்தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோவெவ்வேறுஊர்களில்பிரிந்துவாழ்ந்து கொண்டிருந்தால்இப்பொழுதுஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம்.

  திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்துவாழும் கணவன், மனைவிமீண்டும் சேர்ந்து வாழ்வர். கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். களத்திரத்தின் மூலம் சில பொருள் வரவுகள் ஏற்படும். மனக்கசப்பு மாறும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.நண்பர்களுடன்விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

  குருவின் வக்ர பலன்:29.7.2022 முதல் 23.11.2022 வரை

  குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலம் தந்தை வழிச் சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சித்தப்பா, பெரியப்பாவின் மூலம் தீர்த்து வைக்கப்படும். முன்னோர்கள் வழி நரம்பு சம்பந்தமான நோய்க்கு உடனே சிகிச்சை எடுத்தல் அவசியம். சிலர் குடும்ப உறுப்பினர்களால்கடன் பட நேரும். தொழில் நெருக்கடி இருக்கும். தொழில் வாய்ப்புகள் கைநழுவிப் போகும்.

  வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள்.முதலாளி தொழிலாளி கருத்து வேறுபாடு மிகும் அல்லதுதொழிலாளிகள் மூலம் வழக்கை சந்திக்க நேரும். வேலை பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேறுபாடு நிலவும். சிலர் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை காரணமாக வேறு வேலை மாற நேரும் அல்லது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது . சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கும் நிலை இருக்கும்.தொழிலை தக்க வைக்க கடுமையானமுயற்சியையும் போராட்டத்தையும் அதிக உழைப்பையும் செலவிட வேண்டும்.

  பெண்கள்:பெண்களின் புத்தி சாதுர்யத்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். வீடு, வாகனம், அலங்கார ஆடம்பர பொருட்கள், உயர் ரக ஆடைகள் நகைகள் என வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். புகுந்த வீட்டாருடன் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். 12ல் ராகு இருப்பதால் பொருளின் தரம், பயன்பாடு, தேவை அறிந்து வாங்கி பயன்படுத்துவது சிறப்பு. தவறான பயன்படாத பொருள் விரயத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை.

  பரிகாரம்:சனிக்கிழமை இஷ்ட ,குலதெய்வம், பைரவரைவழிப்பட்டால் கவலை தீரும். தினமும் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட 12 மிட ராகுவினால் ஏற்படும் விரயம் மட்டுப்படும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×