என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்- 6 நவம்பர் 2025
எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தூரதேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 5 நவம்பர் 2025
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். சுபச்செலவு உண்டு. உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். சொத்துகளால் ஆதாயம் ஏற்படும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 4 நவம்பர் 2025
வீண்பழிகள் அகலும் நாள். வீடு மாற்றங்கள் நன்மை தரும். வங்கிகளில் வைப்புநிதி உயரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். உறவினர்கள் உதவி உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 3 நவம்பர் 2025
வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2025
பெற்றோர் வழியில் பிரியம் கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 1 நவம்பர் 2025
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். உறவில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 31 அக்டோபர் 2025
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்ற இயலாது. மறதியால் சில பணிகளை விட்டுவிடுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 30 அக்டோபர் 2025
திறமைகள் பளிச்சிடும் நாள். திட்டமிட்ட காரியமொன்றில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 29 அக்டோபர் 2025
ஆதாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 28 அக்டோபர் 2025
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வாகன வழியில் செலவுகள் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்- 27 அக்டோபர் 2025
நேசம் அதிகரிக்க ஈசனை வழிபட வேண்டிய நாள். பாசம்மிக்கவர்கள் பகையாகலாம். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசியில் கையை விரிக்கலாம். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்- 26 அக்டோபர் 2025
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம்.






