என் மலர்tooltip icon

    விருச்சகம்

    2026 புத்தாண்டு ராசிபலன்

    உயர்வான எண்ணம் கொண்ட விருச்சிக ராசியினரே.... எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் மிகுந்த விருச்சிக ராசியினருக்கு 2026 ம் ஆண்டு நல்ல வாய்ப்புகளை பெறக்கூடிய ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சில சங்கடங்கள் தோன்றினாலும் பிற்பகுதி நல்ல வாய்ப்புகளை வழங்கும்.உங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த எதிர்ப்புகள் அகலும்.எதையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். விரைந்து வேகமாக செயல்படுவீர்கள். தொட்டது துலங்கும்.பட்டது பூக்கும். புதிய மாற்றம் உண்டாகும். சம்பாதிக்கும் பணத்தில் உபரியாகும் லாபத்தை முறையாக சேமித்து வைத்துக் கொண்டால் கிரக சூழ்நிலை சாதகமற்று இருக்கும் காலங்களில் நிம்மதியாக இருக்க முடியும்.

    குருவின் சஞ்சார பலன்கள்:

    மே மாதம் 2026 வரை குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் நிற்பார். ஜூன் 2ம் தேதி முதல் பாக்கிய ஸ்தானத்தில் நின்று பலன் தருவார்.2026 ஆம் ஆண்டு விருச்சிக ராசியினருக்கு விட்டதை மீட்டு பிடிக்கும் காலமாகும். உங்களிடம் புதிய தெளிவு பிறக்கும் அறிவாற்றல் மேம்படும்.பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். அஷ்டம குரு காலத்தில் விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள்.அஷ்டம குருவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். பாக்கிய ஸ்தான குரு பகவான் இடமாற்றத்தை தந்து அதன் மூலம் நல்ல பலன்களை வழங்குவார். ஒருவர் வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் பிள்ளைகளின் வருமானத்தில் உயர்ந்து நிற்கும்.வரா கடன்கள் வசூலாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகி கடனை அடைக்க கூடிய சூழ்நிலைகள் உருவாகும். வீடு வாகன யோகம் என வளமான வாழ்க்கையை வாழ போகிறீர்கள். நாலு பேருக்கு உதவி செய்து சமூக மரியாதையை அதிகரிப்பீர்கள்.அரசு சார்ந்த துறை மூலம் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து மருமகன் மருமகள் வரும் நேரம் இது. சுய உழைப்பினால் வெற்றியை தக்க வைத்துக் கொள்வீர்கள்.வருமானம் உயர்வதால் வீட்டிலும் வெளியிலும் செல்வாக்கு உயரும்.பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.தேவையற்ற வார்த்தைகளை வாக்கு வாதங்களை குறைத்தால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.

    சனியின் சஞ்சார பலன்கள்:

    இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். உயர்வுகள் உண்டாகும் வருடமாக இது இருக்கும்.புதிய தொழில் எண்ணங்கள் வரும். அதை செயல்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.சில நேரங்களில் விரய செலவுகள் இருந்தாலும் அதை சமாளிக்க கூடிய அளவில் வருவாயும் இருக்கும். மாணவர்கள் விரும்பிய பாடத்திட்டத்தில் இணைந்து படிப்பீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும். சொந்த வீடு வாகனம் அழகு ஆடம்பரப் பொருட்கள் என வாழ்க்கை இன்பமயமாக மாறும்.எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். திருமணம் ஆன தம்பதிகள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக் கொடுத்து சென்றால் வாழ்க்கை இன்பமாகும். சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப திருமண முயற்சியில் ஈடுபடலாம். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு விவாகம் நடக்கும்.எதிர்பார்த்த வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் பணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சொந்தங்களையும் சுற்றி இருப்பவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ராகு கேதுவின் மையப்புள்ளியில் ராசியும் 7ம்மிடமும் இருப்பதால் சுய ஜாதக பரிசீலினைக்குப் பிறகு திருமணம் தொடர்பான முடிவு எடுப்பது நல்லது.

    ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்:

    ஆண்டின் துவக்கத்தில் ராகு பகவான் சுக ஸ்தானத்திலும் கேது பகவான் தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்கள். 5.12.2026 முதல் ராகு பகவான் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்திலும் கேது பகவான் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்கள். பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்பது பழமொழி. திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உபரி லாபத்தை அரசு நிதி நிறுவனங்களில் சேமிப்பது முக்கியம். அல்லது வீடு வாகனம் என சுப விரயமாக மாற்றுவது உங்கள் கையில் உள்ளது. மேலும் திருமணம் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையாக இருப்பது நல்லது. எந்த புதிய முயற்சிகளையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் இருந்தால் வருட கிரகங்களால் பாதிப்பு ஏற்படாது. சந்தோஷத்தில் கிடைக்கும் அனுபவத்தை விட வலியில் கிடைக்கும் அனுபவத்திற்கு பலம் அதிகம். கடந்த சில மாதங்களாக அனுபவ பாடத்தை சனி ராகு கேதுக்கள் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். கடவுள் கெட்டவர்களை சோதிக்க மாட்டார்.சோதனை காலங்களில் காப்பாற்ற மாட்டார். நல்லவர்களை அதிகம் சோதிப்பார். ஆனால் கைவிட மாட்டார் எனவே கவலை வேண்டாம்.

    விசாகம் 4:

    செல்வாக்கு அந்தஸ்து உயரும் வருடம். இந்த வருடம் முழுவதும் இதுவரை கடனால் ஏற்பட்ட பாதிப்புகள் சிறிது சிறிதாக குறைய துவங்கும். வட்டிக்கு வட்டி கட்டிய நிலையில் இருந்து மீள துவங்குவீர்கள். உங்களின் தனித்திறமையால் குடும்பத்தை உயர்த்துவீர்கள்.முன்னேற்ற பாதை தென்படும்.புதுப்பொலிவு உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடங்கள் அகலும். பூர்வீகச் சொத்துக்களில் நிலவிய சங்கடங்கள் விலகும். உங்கள் பங்குச் சொத்து முறையாக வந்து சேரும்.மனதில் நினைத்ததை செயல்படுத்தக் கூடிய வகையில் சொல்வாக்கு செல்வாக்கு உயரும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய வைத்தியம் கிடைக்கும்.மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும்.சிலருக்கு புதிய தொழில் துவங்கும் எண்ணம் உருவாகும். பார்க்கும் வேலையை மாற்றக்கூடாது.சந்தர்ப்பம் அமையும் போது காஞ்சி காமாட்சியை வழிபட நிலையான செல்வாக்கு உண்டாகும்.

    அனுஷம்:

    கோட்ச்சார கிரகங்கள் சாதகமாக இருப்பதால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நம்பிக்கை அதிகரிக்கும். சேமிப்பு, சிக்கனத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலம். வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சக ஊழியர்களுடன் நிலவியபிணக்குகள் மறையும். தொழில், வியாபாரத்தில் நிலவிய போட்டி, பொறமைகளை சமாளிப்பீர்கள்.விவசாயிகள் ஏற்றம் பெறுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்.வீடு, வாகன, சொத்து யோகம் உணடாகும். இந்த வருடம் முழுவதும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம், லாபம் உங்களை மகிழ்விக்கும். பிள்ளைகளுக்கு உத்தியோகம், திருமணம் சுப நிகழ்வு போன்ற நல்ல விசயங்கள் நடக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடு அகலும். சிலருக்கு இளைய சகோதரரால் தொழில் விரயம், முடக்கம், வில்லங்கம் ஏற்படலாம்.சுப மங்களச் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். அனாவசிய வைத்தியச் செலவு இருக்காது. புகுந்த வீட்டாருடன் நிலவிய கருத்து வேறுபாடு மறையும்.சாதகமும் பாதகமும் நிறைந்த காலம் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரை வழிபடவும்.

    கேட்டை:

    தடை, தாமதங்கள் விலகி நினைத் ததை நிறைவேற்றக் கூடிய சந்தர்ப்பம் கூடிவரும். பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும். பற்றாக் குறை வருமானத்தில் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தியவர்களுக்கு பணம் எனும் தனம் சமூக அந்தஸ்து பெற்றுத் தரும்.ராஜ மரியாதை கிடைக்கும். உங்கள் முயற்சியால் வெற்றியும்,சாதனையும் படைப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடைபெறும்.தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்ற மக்களால் பெருமை சேரும். கடன் பெற்றாவது வீடு, வாகன யோகம் கிடைக்கப் பெறுவீர்கள். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உற்சாகமான மன நிலை இருப்பதால் வேலையில் இருந்த விரக்தி தன்மை மாறும். சிலருக்கு ஆடம்பர வீடு, ஆடம்பர கார் வாங்கும் வாய்ப்பு உண்டு.கவுரவப் பதவிகள் தேடி வரும். தற்காலிக உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரமாகும். வாழ்கையிலும், தொழில், உத்தியோகத்திலும் முன்னேற்றமான நல்ல மாற்றம் உண்டாகும். பிரதோசத்தன்று பிரதோஷ காலத்தில ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபடவும்.

    பரிகாரம்: விருச்சிக ராசியினர் திருச்செந்தூர் முருகனை வழிபட நிலையான முன்னேற்றங்கள் உண்டாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×