என் மலர்
விருச்சகம்
வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை
6.7.2025 முதல் 12.7.2025 வரை
நீண்ட காலமாக தடைப்பட்ட பணிகள் துரிதமாக நடக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். இதுவரை நீங்கள் அனுபவித்த சங்கடங்கள் அகன்று நன்மைகளும், ஆதாயங்களும் உண்டாகப் போகிறது. பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். கடன் சுமை குறையும். ஜாமீன் வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளால் நன்மை ஏற்படும்.
தந்தை வழி ஆதாயம், தொழிலில் முன்னேற்றம், லாபம், மகிழ்ச்சி என்று எல்லா வகையிலும் சாதகம் உண்டாகப்போகிறது. உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் மறையும். செல்வாக்கு அந்தஸ்து உயரப்போகிறது. தடைபட்ட பிரார்த்தனைகளை நிறைவேற்றி முடிக்க உகந்த காலம். வீடு அல்லது வேலைமாற்றம் செய்யலாம்.
பிள்ளைகளின் திருமணம், உத்தியோகம், உயர்கல்வி போன்றவற்றால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி படிப்பது நல்லது. பவுர்ணமி அன்று வீரபத்திரரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406