என் மலர்tooltip icon

    விருச்சகம்

    வார ராசிபலன் 4.1.2026 முதல் 10.1.2026 வரை

    4.1.2026 முதல் 10.1.2026 வரை

    விருச்சிகம்

    ஏற்றமான பலன்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் குரு மற்றும் சனியின் பார்வையில் சூரியன் சுக்கிரன் புதனுடன் இணைந்துள்ளார். கடன் தொல்லை அகலும். போதிய தன வரவால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். சிலரின் இளைய சகோதரம் உதவிக்கரம் நீட்டுவார்கள். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். முக்கியமான தேவைகள் நிறைவேறும்.

    பார்த்துச் சென்ற வரனின் முடிவிற்காக காத்து இருப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். திருமண முயற்சியை ஒரு வாரம் ஒத்தி வைக்கலாம். வீட்டு வாடகை உயரும். சொத்தை அடமானம் வைத்து சில்லறைக் கடனை அடைப்பீர்கள். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் உண்டாகும். 4.1.2026 அன்று காலை 9.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வாக்கால் உறவுகளிடம் மன சங்கடம் உண்டாகும். சகோதர, சகோதரிகளிடம் புரிதல் குறையும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். நெருக்கமானவர்களிடம் இருந்து சற்று விலகி இருக்கவும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×