என் மலர்
விருச்சகம்
வார ராசிபலன் 28.12.2025 முதல் 3.1.2026 வரை
28.12.2025 முதல் 3.1.2026 வரை
விருச்சிகம்
விபரீத ராஜ யோகமான வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி குரு பகவான் 8,11ம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். லாட்டரி, பங்குச் சந்தை லாபம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் என எதிர்பாராத ராஜ யோகங்கள் ஏற்படலாம். விசுவாசமாக உழைப்பவர்களுக்கு மலைபோல் வந்த பிரச்சினைகள் பனி போல் விலகும். பெண்களுக்கு கணவராலும், ஆண்களுக்கு மனைவியாலும் அதிர்ஷ்டமும், யோகமும் உண்டாகும்.
சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும். உடன் பிறப்புகள், பங்காளிகள், சித்தப்பாவிடம் நிலவிய மனக்கசப்புகள் மறைந்து பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் நன்மை ஏற்படலாம். சிலர் நண்பர்களுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். அல்லது தொழிலை விரிவாக்கம் செய்யலாம்.
வீடு கட்டுதல், விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. 2.1.2026 அன்று காலை 9.26 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூறாமல், தர்க்கம் செய்யாமல் அமைதி காப்பது நல்லது. திருவாதிரை அன்று நடராஜருக்கு புனுகு சாற்றி வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






