என் மலர்
விருச்சகம்
வார ராசிபலன் 2.2.2025 முதல் 8.2.2025 வரை
2.2.2025 முதல் 8.2.2025 வரை
எதிர்பாராத நல்ல திருப்பங்கள் நடைபெறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் வக்ர கதியில் அஷ்டம ஸ்தானம் செல்வதால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகலாம்.நீண்ட நாளைய சில குழப்பங்களுக்கு முடிவு கிட்டும்.பங்குச்சந்தை இழப்புகள் குறையும்.கடனால் ஏற்பட்ட கவலை, கணவன் மனைவி பிரிவினை வழக்கு, பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும். நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும். ஆயுள் பலம் உண்டு.தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு பழைய சொத்தை விற்று புதிய சொத்து வாங்கும் எண்ணம் உதயமாகும்.
மனைவி மூலம் செல்வாக்கு உயரும்.போட்டித் தேர்வுகளில் வெற்றிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. திருமண தடைகள் நீங்கி வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். சிலருக்கு உயில் அல்லது முக்கிய ஆவணங்களை வைத்த இடம் மறந்து போகும். 8.2. 2025 அன்று காலை 6.21 -மணிக்கு சந்திராஷ்டமம் துவங்குகிறது. புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது பொறுமையும், நிதானமும் தேவை. கொள்கை பிடிப்போடு செயல்பட இயலாது. சனிக்கிழமை விரதம் இருந்து சனி பகவானை வழிபட தடைகள் தகறும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






