என் மலர்
விருச்சகம் - வார பலன்கள்
விருச்சகம்
வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை
23.3.2025 முதல் 29.3.2025 வரை
திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் நிறைந்த வாரம்.ராசிக்கு குரு பார்வை இருப்பதால் நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். அர்த்தாஷ்டமச் சனி முடிவதால் நம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். இன்னல்களும் இடைஞ்சல்களும் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கடன் பிரச்சிினைகள் தீரும். அநாவசிய செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பாக்கிகள் வந்து சேரும்.
தொழில் மேன்மை, வியாபார விருத்தி, புதிய கிளை அமைத்தல், புதிய தொழில் துவங்குதல் போன்ற நன்மைகள் உண்டாகும். உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் செயல்வடிவம் பெறும். சுப மாற்றத்தை தரும் இடப்பெயர்ச்சி உண்டாகும். மகன், மகளுக்கு விரும்பிய விதத்தில் வரன் அமையும். எதிரிகள் தொல்லை நீங்கும். இதுவரை தொல்லை கொடுத்து வந்த உடல் உபாதைகள் விலகி ஆரோக்கியம் மேம்படும்.அரசியலில் ஈடுபட்டோருக்கு விபரீத ராஜ யோகம் தரும் காலமாகும். அமாவாசையன்று ஜீவராசிகள் மற்றும் பறவைகளுக்கு உணவிட முன்னேற்றம் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை
16.3.2025 முதல் 22.3.2025 வரை
மகிழ்ச்சியான வாரம். விரைவில் அர்தாஷ்டம சனியின் பாதிப்பு விலகப் போகிறது. இன்னும் இரண்டு மாத காலத்திற்கு ராசிக்கு குருப் பார்வை உள்ளது. இழந்த நிம்மதி, சந்தோஷம் மீண்டும் குடிபுகும். அவப்பெயர்கள், சங்கடங்கள் விலகும். கடன் பிரச்சினையால் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தந்தை, மகன் கருத்து வேறுபாடு அகலும். காணாமல் போனவர்கள் வீடு திரும்புவார்கள். வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவார்கள். சிலருக்கு அரசு பணியில் அமர்கின்ற வாய்ப்பு உண்டாகும்.பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
இட மாற்றம் ஏற்படும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். வழக்குகள் சாதகமாகும். புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். உயர்ரக வாகன வச தி அமையும். கடன் தீர்க்க சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவார்கள். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். குழந்தை பேறு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது. புதிய எதிர்பாலின நட்பால் தொல்லைகள் உருவாகலாம். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவது வாழ்வாதாரத்தை உயர்த்தும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசிபலன் 9.3.2025 முதல் 15.3.2025 வரை
9.3.2025 முதல் 15.3.2025 வரை
புண்ணியபலன்கள் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நான்கு கிரக சேர்க்கை. 5-ம்மிடத்தில் நிற்கும் கிரகங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை பெறுகிறது. பொருளாதார நிலைமை மேம்படும். கொடுக்கும் வாக்குறுதி பலிக்கும். தோல்வி மனப்பான்மை விலகி சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பதவியில் நிலவிய அவப்பெயர்கள் விலகும். அரசியல்வாதிகளுக்கு பெருமை மிக்க உயர்பதவியில் அமரும் பாக்கிய முண்டு. தொழிலில் புகழ் மிக்க நிகழ்வு நடக்கும்.
பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடம் அகலும். விரைவில் அர்த்தாஷ்டமச் சனி முடியப்போகிறது. இழந்த இன்பங்கள் துளிர்க்கப்போகிறது.அனைத்து விதமான தடைகளும் விலகும். தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும். படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை அமையும். வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமாகும். முக்கிய ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்கவும். 9.3.2025 அன்று மாலை 5.46 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் தோன்றும். மாசி மகத்தன்று புனித நீராடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசிபலன் 02.03.2025 முதல் 08.03.2025 வரை
02.03.2025 முதல் 08.03.2025 வரை
பண நெருக்கடிகள் அகலும் வாரம். ராசிக்கு 4-ம்மிடம் முதல் 8-ம்மிடம் வரை கிரகங்கள் வரிசையாக இருப்பது கிரகமாலிகா யோகம். தொழிலில் முன்னேற்றமும் லாபமும் பெருகும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிலவிய நெருக்கடிகள் விலகும். கடன்கள் படிப்படியாக குறையும்.
சிலருக்கு தொழில், உத்தியோக ரீதியான வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த நெருக்கடிகள் குறையும். முதலீட்டாளர்களுக்கு அரசு வழியில் மானியங்கள், உதவிகள் கிடைக்கும்.
நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், மூலம் ஆதாயம் உண்டாகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு மனதில் நினைத்தது போன்ற சிறப்பான நல்ல வரன்கள் தேடி வரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். பூர்வீகத்தில் சொத்து வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
7.3.2025 அன்று காலை 11.45க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் முக்கியமான ஆவணங்கள், பொருட்களை கவனமாக பாதுகாக்கவும். பெண்களுக்கு மாமியார், நாத்தனார் வரவால் வேலைப்பளு அதிகரிக்கும். செவ்வாய் கிழமை பசுவிற்கு அகத்திக் கீரை வழங்கவும்
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசிபலன் 23.2.2025 முதல் 01.03.2025 வரை
23.2.2025 முதல் 01.03.2025 வரை
இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகமாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். வெகு சில வாரங்களில் அர்தாஷ்டமச் சனியின் தாக்கம் குறையப்போகிறது. மதி நுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.
எதிர்காலம் பற்றிய தடுமாற்றம் பய உணர்வு அகலும். புதிய திருப்புமுனை உண்டாகும். வியாபாரத் துறையினருக்கு முன்னேற்றம் கூடும். மறைமுகப் பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். கடனால் சுணங்கிய தொழிலை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்லும் மார்க்கம் தென்படும்.
பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் முதலாளிகளின் ஆதரவு கிடைக்கும். சொந்த வீடு கிரகப்பிரவேசத்திற்கு நாள் குறிக்கும் நேரம் வந்துவிட்டது. பெண்களுக்கு மாமியாரின் சில செயல்கள் வேதனை தரும் என்பதால் அனுசரித்து செல்லவும்.
நான்கு சக்ர வாகனம், வீடு வாங்கும் முயற்சி பலிதமாகும். குரு சாதகமாக இருப்பதால் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதும் இருப்பதை தக்க வைத்துக் கொள்வதும் புத்திசாலித்தனம். மகா சிவராத்திரியன்று கரும்புச்சாறு அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசிபலன் 16.2.2025 முதல் 22.2.2025 வரை
16.2.2025 முதல் 22.2.2025 வரை
விவேகத்துடன் செயல்பட்டு விரும்பிய இலக்கை அடைவீர்கள். ராசிக்கு சனி, குரு பார்வை.தந்தை வழி உறவுகளிடம் இருந்த சங்கடங்கள், பிரச்சனைகள் விலகி ஆதரவு உண்டாகும். தொழில், உத்தியோக ரீதியான வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். கடன், நோய், எதிரி தொல்லைகள் அகலும்.
கணவன், மனைவி அன்பாக இல்லறம் நடத்துவார்கள். புதிய வீடு வாங்குதல், புதிய வீடு கட்டி குடிபுகுதல், போன்ற பாக்கிய பலன்கள் இனிதே நடந்தேறும். குலதெய்வ கோவில் மற்றும் ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஆண் மகன் பிறக்கும். அர்தாஷ்டமச் சனியின் தாக்கத்தால் பிரிந்து வாழ்ந்த தம்பதிகளுக்கு சேர்ந்து வாழும் விருப்பம் அதிகரிக்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும்.
மன ரீதியாக, உடல் ரீதியாக அனுபவித்த வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். அரசு பணியாளார்கள் வீண் பழியில் இருந்து விடுபடுவார்கள். வீடு, மனை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். குரு பகவானை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசிபலன் 9.2.2025 முதல் 15.2.2025 வரை
9.2.2025 முதல் 15.2.2025 வரை
தன்னம்பிக்கை உயரும் வாரம். அர்தாஷ்டமச் சனியின் பாதிப்பு குறையத் துவங்கும்.குடும்பத்தில் நிலவிய பிணக்குகள் நீங்கும். மறைமுக வருமானம் பெருகும். பணத்தை திட்டமிட்டு செலவு செய்தால் பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். சிலர் தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். வேலையாட்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். கடந்த கால வம்பு வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும்.சிக்கல்கள் முழுமையாக குறையும். பெரிய முதலீடுகளை பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டமிடுவீர்கள்.
கடின உழைப்பை வெளிப்படுத்து வீர்கள். சுப நிகழ்ச்சிகளால் அலைச்சல் அதிகமாகும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர்.சிலருக்கு மறு திருமணம் நடக்கும். மாணவர்கள் திட்டமிட்டு படிக்க வேண்டும்.10.2.2025 அன்று காலை 11.56 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பங்குச்சந்தை மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த விசயங்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. தைப்பூசத்தன்று இளநீர் அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசிபலன் 2.2.2025 முதல் 8.2.2025 வரை
2.2.2025 முதல் 8.2.2025 வரை
எதிர்பாராத நல்ல திருப்பங்கள் நடைபெறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் வக்ர கதியில் அஷ்டம ஸ்தானம் செல்வதால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகலாம்.நீண்ட நாளைய சில குழப்பங்களுக்கு முடிவு கிட்டும்.பங்குச்சந்தை இழப்புகள் குறையும்.கடனால் ஏற்பட்ட கவலை, கணவன் மனைவி பிரிவினை வழக்கு, பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும். நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும். ஆயுள் பலம் உண்டு.தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு பழைய சொத்தை விற்று புதிய சொத்து வாங்கும் எண்ணம் உதயமாகும்.
மனைவி மூலம் செல்வாக்கு உயரும்.போட்டித் தேர்வுகளில் வெற்றிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. திருமண தடைகள் நீங்கி வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். சிலருக்கு உயில் அல்லது முக்கிய ஆவணங்களை வைத்த இடம் மறந்து போகும். 8.2. 2025 அன்று காலை 6.21 -மணிக்கு சந்திராஷ்டமம் துவங்குகிறது. புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது பொறுமையும், நிதானமும் தேவை. கொள்கை பிடிப்போடு செயல்பட இயலாது. சனிக்கிழமை விரதம் இருந்து சனி பகவானை வழிபட தடைகள் தகறும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசிபலன் 26.1.2025 முதல் 1.2.2025 வரை
26.1.2025 முதல் 1.2.2025 வரை
சுப காரியங்கள் கைகூடும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் வக்ரகதியில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உச்சம் பெற்ற 7, 12-ம் அதிபதி சுக்ரன் 2,5ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். இந்த வார கிரக நிலவரம் விருச்சிக ராசிக்கு சாதகமும் பாதகமும் கலந்து உள்ளது.கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. கொடுத்த வாக்கையும் நாணயத்தையும் காப்பாற்றுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்யும் எண்ணம் உருவாகும். விசா, பாஸ்போட், சார்ந்த பிரச்சனைகள அகலும்.
இடமாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் அவரவரின் வயதிற்கும், தேவைக்கும் ஏற்ற மாற்றம் உண்டாகும். உயர் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த வரன்கள் இப்பொழுது முடிவாகலாம். சிலருக்கு விருப்ப விவாகம் நடக்கும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். தம்பதிகள் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் இடமாறுதல் கிடைக்கும். தை அமாவாசையன்று காவல் தெய்வங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசிபலன் 19.1.2025 முதல் 25.1.2025 வரை
19.1.2025 முதல் 25.1.2025 வரை
உற்சாகம் பொங்கும் மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி செவ்வாய்க்கு அஷ்டமாதிபதி புதன் பார்வை உள்ளது.அர்தாஷ்டமச் சனியின் தாக்கம் குறைவதால் உங்கள் செயலில் ஆற்றலும், வேகமும் கூடும். குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் ஏற்படும். பொருளாதாரம் உயரும். கடன் படிப்படியாக குறையும்.பெயர், புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். ஆரோக்கியம், தொழில், கல்வி உத்தியோகம் போன்றவற்றில் நிலவிய தடை, பிரச்சனைகள் சீராகும் சிலருக்கு அசையாச் சொத்து, பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப விரயம் உண்டாகும். வாழ்க்கை துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு.
எதிரிகளின் பலம் குறையும்.புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும். விருப்ப விவாகத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் உருவாகும். பிரிந்த தம்பதிகள் அல்லது பிரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட அசவுகரியம் குறையும். பெண்களுக்கு தாய் வழிச் சீதனம் கிடைக்கும். வாராகி அம்மன் வழிபாடு இன்னல்களை நீக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
12.01.2025 முதல் 18.01.2025 வரை
வாழ்க்கைத் தரம் உயரும் காலம். நீச்ச பங்க ராஜ யோகம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் தொழில் ஸ்தான அதிபதி சூரியனின் பார்வையில் சஞ்சரிக்கிறார். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்தவர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம் வந்து விட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கை தரம் உயரும். தன வரவு சிறக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும்.
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். வீடு கட்டுதல், விரிவாக்கம் செய்தல், வாஸ்துப்படி வீட்டை திருத்தி அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் விலை உயர்ந்த அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்கு வார்கள்.
14.1.2025 அன்று காலை 4.19 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகலாம். நம்பியவர்கள், நெருக்கமானவர்கள் முதுகில் குத்தும் நேரம் என்பதால் உறவினர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. பவுர்ணமியன்று சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசிபலன் 5.1.2025 முதல் 11.1.2025 வரை
5.1.2025 முதல் 11.1.2025 வரை
தடைகள் விலகும் வாரம்.தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூரியன் புதன் சேர்க்கை. சுக ஸ்தானத்தில் சனி, சுக்ரன் சேர்க்கை என கிரக நிலவரம் சுபமாக உள்ளது.தொழில் முயற்சிகள் நிறைவேறும். கூட்டுத் தொழிலில் பலன் உண்டு. உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும்.வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும்.வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவனத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.
கடந்த காலத்தில் நடந்த கருத்து வேறுபாடு மற்றும் மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். மறுமணம் கைகூடும். பெண்களுக்கு தாய்வழி ஆதரவும், சீதனமும் கிடைக்கும்.சனிக்கிழமை முன்னோர்களை வழிபட அனைத்தும் நற்பலன்க ளும் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






