என் மலர்tooltip icon

    விருச்சகம் - வார பலன்கள்

    விருச்சகம்

    வார ராசிபலன் 08.06.2025 முதல் 14.06.2025 வரை

    08.06.2025 முதல் 14.06.2025 வரை

    வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும். ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். பிறரை வசீகரிக்கும் ஆற்றல் உண்டாகும். கடன், வறுமை, கஷ்ட ஜீவனம், பூர்வீகத்தில் வாழ முடியாத நிலை, குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை இன்மை, பிறரை அண்டி பிழைத்தல் போன்ற நிலை விலகும். திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம் உங்கள் புகழ் உயரும்.

    புதிய வாய்ப்புகள் கதவை தட்டும். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். இதுவரை குல தெய்வம் எதுவென்று தெரியாதவரகளுக்கு குலதெய்வ இருப்பிடம் தெரியும் வாய்ப்பு உள்ளது. வாடகை வருமானம் தரக் கூடிய அசையும், அசையாச் சொத்துக்கள் சேர்க்கை மிகுதியாக இருக்கும். தாய், தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு.

    தொழில் உளர்ச்சி கூடும். சிலர் அதிக முதலீடு செய்யும் புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் விரிவாக்கம் அல்லது குடும்ப சுப நிகழ்விற்காக கடன் பெறலாம். தொழிலுக்கு தேவையான திறமையான வேலையாட்கள் கிடைப்பார்கள். வெளிநாட்டில் வாழ்பவர்கள் பூர்வீகம் வந்து செல்லக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். அங்காரகன் வழிபாடு இழந்ததை மீட்டுத் தரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 01.06.2025 முதல் 07.06.2025 வரை

    01.06.2025 முதல் 07.06.2025 வரை

    பெரும்பான்மையான பலன்கள் சாதகமாக அமையும் வாரம். ராசிக்கு சூரியன் புதன் பார்வை இருப்பதால் எதிர் நீச்சல் போட்டு வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். புதிய அனுபவங்கள் கிட்டும். பல காலமாக சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்தவர்களுக்கு விசேஷமான சம்பள உயர்வு உண்டு. சிலர் உத்தி யோகத்தில் இருந்து விடுபட்டு புதிய தொழில் துவங்கலாம்.

    உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளுவால் அலுவலகத்தில் அதிக நேரம் செலவிட நேரும். மூத்த சகோதர, சகோதரி மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சொத்துக்கள் மூலம் வாடகை வருமானம் வந்து கொண்டே இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். கடன் சுமை குறையும். மருத்துவச் செலவுகள் நீங்கும்.

    பூமி, வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். கணவருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். திடீர் செலவுகள் ஏற்படலாம். அலைச்சல் மிகுந்த பயணத்தால் டென்ஷன் அதிகரிக்கும். கர்ப்பிணிகளுக்கு இந்த வாரத்தில் குழந்தை பிறக்கும். எதிர்பார்த்த வரன் தேடி வரும். ஸ்ரீ வீர லட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 25.05.2025 முதல் 31.05.2025 வரை

    25.05.2025 முதல் 31.05.2025 வரை

    செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும் நேரம். ராசிக்கு சூரியன் பார்வை. ஆன்ம பலம் பெருகும். மனம் , உடல் ரீதியான வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். திட்டங்கள், எண்ணங்கள் செயலாக்கம் பெறும். தந்தை மகன் முரண்பாடு முடிவிற்கு வரும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிய பெண்களுக்கு ஆண் மகன் பிறக்கும்.

    அஷ்டமச் சனியின் காலத்தில் பிரிந்து வாழ்ந்த தம்பதிகளுக்கு சேர்ந்து வாழும் விருப்பம் அதிகரிக்கும். தொழில் உத்தியோகத்தில் கவுரவமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். திருமண முயற்சிகள் சித்திக்கும்.

    கூடுதல் வருமானத்திற்கு ஆசைப்பட்டு புதிய நிதி நிறுவனங்களிடம் முதலீடு செய்ய வேண்டாம். விவாகரத்து வழக்கு சாதகமாகும். 28.5.2025 பகல் 1.36 மணி முதல் 30.5.2025 பகல் 3.42 மணி வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. பிறரை நம்பி இறங்கும் காரியங்கள் தோல்வியைத் தரும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். அமாவாசையன்று துவரை தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 18.05.2025 முதல் 24.05.2025 வரை

    18.05.2025 முதல் 24.05.2025 வரை

    திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு சூரியன் பார்வை. அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சாரம் செய்யும் போது தொழிலில் மிகப் பெரிய ஏற்ற இறக்கத்தை கொடுப்பார். சரக்கு ரெடியாக இருந்தால் ஆர்டர் கிடைக்காது. ஆர்டர் வந்தால் சரக்கு இருக்காது. சரக்கு போட்ட பணம் வசூலாகாது. முதலீட்டை காப்பதில் கவனம் தேவை.

    ராகு கேதுக்கள் 4, 10 ம் இடத்தை கடக்கும் வரை அமைதியாக இருந்தால் முதலீடு காப்பாற்றப்படும். கோட்சாரத்தில் நான்காம் இடத்தில் உள்ள ராகுவிற்கு செவ்வாயின் 8ம் பார்வை பதிவதால் எளிதில் சொத்து அமையாது அல்லது வில்லங்கமான வாஸ்து குறைபாடு உடைய சொத்துக்கள் அமையும்.

    விவசாயிகளுக்கு அரசின் மானியம் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படும். கோட்சார குருவின் பார்வை நான்காமிடத்திற்கு இருக்கும் இந்த குருப் பெயர்ச்சி காலத்தில் வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வர சொத்தால் ஏற்படும் மன உளைச்சல் தீரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை

    11.5.2025 முதல் 17.5.2025 வரை

    எதையும் தாங்கும் மனப்பக்குவம் உருவாகும் வாரம். ராசிக்கு தொழில் ஸ்தான அதிபதி சூரியனின் சம சப்தம பார்வை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே காணப்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும்.

    ஆன்ம பலம் பெருகும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம், அதிர்ஷ்டக்குறைபாடு இருந்த இடம் தெரியாது. மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். வெற்றி புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். செல்வச் செழிப்பில் மிதப்பீர்கள். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு செல்லலாம்.

    கடன் தொகையை சமாளிக்க தேவையான பொருள் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். வைத்தியத்தில் ஆரோக்கியம் சீராகும். தான, தர்மங்கள் செய்வீர்கள். சித்ரா பவுர்ணமியன்று சித்ர குப்தரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை

    4.5.2025 முதல் 10.5.2025 வரை

    தடைபட்ட பணிகள் சுறுசுறுப்பாக நடைபெறும் வாரம்.பாக்கிய ஸ்தானத்தில் ராசி அதிபதி செவ்வாய் இருக்கிறார். உங்களை களங்கப்படுத்திய வீண் பழியில் இருந்து விடுபடுவீர்கள். உற்றார் உறவினர்களின் உதவியால் நிதி நிலை உயரும். அலுவலக பணிகள் சுமூகமாகும். பணி நெருக்கடிகள் அகலும். 5ல் சனி சுக்ரன் சேர்க்கை இருப்பதால் பணவரவு பல மடங்காக அதிகரிக்கும். பங்குச் சந்தை, பங்கு பத்திர முதலீட்டில் ஆர்வம் அதிகரிக்கும். சொந்த வீடு அல்லது மனைகள் வாங்கும் யோகம் உள்ளது.

    பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் முறையான பாகப் பிரிவினை நடக்கும். தொழில் தொடர்பான நீண்ட நாள் பிரச்சினைகள் தீர்ந்து வளமான எதிர்காலம் அமையும். சிலருக்கு உழைக்காத அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். உங்களுடைய மாறுபட்ட சிந்தனை ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் குதூகலமாக அமையும். தந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் எலக்ட்ரிக் பொருட்கள் பழுதாகி வீண் செலவு அதிகரிக்கும். வழக்குகள் இழுபறியாகும். முருகன் வழிபாட்டால் மேன்மை பெற முடியும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை

    27.4.2025 முதல் 03.5.2025 வரை

    எதிர்பார்த்த இலக்கை அடையும் வாரம். ராசிக்கு குருப்பார்வை இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. முக்கிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளால் தளர்ந்த தொழில்கள் தலை தூக்கும். குடும்ப சுமை குறையும். எதிர்பார்த்த தன வரவுகள் இருக்கும்.

    அத்தியாவசிய தேவைக்கு தடுமாறிய நிலை மறையும். பெற்றோர்களின் ஆதரவால் குடும்ப சுமைகள் இலகுவாகும். சில மாணவர்கள் கல்வி அல்லது விளையாட்டு தொடர்பாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு விபரீத ராஜயோக அடிப்படையில் சகாய விலையில் பட்டா இல்லாத அல்லது வாரிசு இல்லா சொத்துக்கள் கிடைக்கலாம்.

    திருமணத் தடை அகலும். வசதியான வாழ்க்கைத் துணை கிடைப்பார். 1.5.2025 அன்று அதிகாலை 3.15 மணி முதல் 3.5.2025 அன்று காலை 6.37 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலர் பிள்ளைகளின் முன்னேற்ற செலவிற்கு கடன் பெறலாம். உடல் அசதி இருக்கும். சிலருக்கு முக்கிய முடிவுகளை எடுப்பதில் மன தடுமாற்றம் ஏற்படலாம். ஸ்ரீ கால பைரவ அஷ்டகம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை

    20.4.2025 முதல் 26.4.2025 வரை

    மாற்றங்கள் நிறைந்த வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் குடும்பத்தில் மதிப்பு மரியாதை உயரும். வதந்திகளால் ஏற்பட்ட அவமானம், சண்டை, சச்சரவுகள், மன உளைச்சல், தூக்கமின்மை போன்ற குறைபாடுகள் அகலும். நேரத்திற்கு சாப்பிட முடியும். கையில் பணம் தங்கும்.

    அர்தாஷ்டமச் சனியின் தாக்கத்தால் வேலையை விட்டு விடலாம் என்ற முடிவு எடுத்தவர்களுக்கு வேலையை விட வேண்டிய அவசியம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடல் உபாதைகள் அகலும். விவசாயம் செய்ய முடியாத தரிசு நிலங்கள் விற்பனையாகும்.

    தொழில் தடைகள் அகலும். சிலர் புதிய வேலைக்கு மாறலாம். வீடு கட்டும் பணி துரிதமாகும். அதற்கான கடன் தொகையும் கிடைக்கும். தாய் மற்றும் தந்தையின் உதவிகள் கிடைக்கும். பெண்கள் ஆன்லைனில் பொருள் வாங்கி ஏமாறுவார்கள். ஜாமீன் பொறுப்பு ஏற்றவர்களுக்கு கேடான காலம். சிலருக்கு கோவில் சொத்து குத்தகைக்கு கிடைக்கும். திருமண முயற்சி சில நாட்களில் கைகூடும். திருவேற்காடு கருமாரியம்மனை வணங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 13.4.2025 முதல் 19.4.2025 வரை

    13.4.2025 முதல் 19.4.2025 வரை

    நன்மையும், மேன்மையும் உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் நீச்சம் அடைவதால் ராசிக்கு குருப் பார்வை சற்றேக் குறைய இன்னும் 1 மாதத்திற்கு மட்டுமே உள்ளதால் நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதம் விலகும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.

    வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வசதி வாய்ப்புகள் பெருகும். கரைந்த சேமிப்புகள் மீண்டும் உயரும். பற்றாக்குறை பட்ஜெட் அகலும். அடமான நகைகள், நிலபுலன்களை மீட்கக் கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை கூடி வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். சிலர் கடன் பெற்று சொந்தத் தொழில் துவங்கலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த வரன் அமையும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும். பெண்களுக்கு மன நிம்மதியும், முன்னேற்றமும் உண்டாகும். ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை

    06.4.2025 முதல் 12.4.2025 வரை

    மிக மிக சாதகமான வாரம். பூர்வ புண்ணி யாதிபதி குருவின் பார்வை ராசியின் மீது விழுவதால் ராஜயோகம் உங்களை புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறது. பாராமுகமாக இருந்த உறவுகள் சுப நிகழ்வில் மீண்டும் இணைந்து அன்பு பொழிவார்கள். எதிர்பார்த்த தொகைகைக்கு வந்து சேரும். தாய் மாமன் வழி ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் சகோதரரின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். வீடு, வாகன முயற்சி ஜெயமாகும்.

    திருமணம் கை கூடும். வீண் அலைச்சல், துக்கம் விலகும். தொழில், வியாபாரத்தில் முன் நின்று போட்டிகளை சமாளிப்பீர்கள். நல்ல தசாபுத்தி நடைபெறும் பட்சத்தில் புதிய தொழில் தொடங்கலாம்.எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் போனஸ் மனதை மகிழ்விக்கும். பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளைக் குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம். மன அமைதி குறைவு உண்டாகலாம். உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரிகளை உருவாக்கலாம். காமதேனு வழிபாட்டால் உயர்வானதை அடைய முடியும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 30.3.2025 முதல் 5.4.2025 வரை

    30.3.2025 முதல் 5.4.2025 வரை

    ஏற்ற இறக்கமான வாரம்.அஷ்டம ஸ்தானத்தில் நிற்கும் ராசி அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தா னத்தில் நீசம் அடைகிறார். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதத்திற்கு பின்பு நிறைவேறும்.தந்தை வழி உறவுகள் இடத்தில் பொறுமை வேண்டும். சத்ருக்களால் தொல்லைகள் உண்டாகலாம். போட்டி, பொறாமை ஒரு புறம் இருந்தாலும் அவற்றை சமாளித்து தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். தொழில், வியாபார முன்னேற்றம் அல்லது வீடு, வாகனத்திற்காக கடன் பெறலாம்.

    வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகி அமைதி நிலவும்.சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். 3.4.2025 அன்று மாலை 6.21 மணி முதல் 5.4.2025 அன்று இரவு 11.25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக் கடியான சூழ்நிலைகள் உருவாகும்.வெளியூர் பயணம் மற்றும் புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும். தடாலடியான முடிவுகளை எடுக்க கூடாது. விநாயகர் வழிபாடு இன்பங்களை ஏற்படுத்தும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    30.3.2025 முதல் 05.4.2025 வரை

    ஏற்ற இறக்கமான வாரம். அஷ்டம ஸ்தானத்தில் நிற்கும் ராசி அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் நீச்சம் அடைகிறார். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதத்திற்கு பின்பு நிறைவேறும். தந்தை வழி உறவுகள் இடத்தில் பொறுமை வேண்டும். சத்ருக்களால் தொல்லைகள் உண்டாகலாம். போட்டி, பொறாமை ஒரு புறம் இருந்தாலும் அவற்றை சமாளித்து தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

    தொழில், வியாபார முன்னேற்றம் அல்லது வீடு, வாகனத்திற்காக கடன் பெறலாம். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகி அமைதி நிலவும். சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

    3.4.2025 அன்று மாலை 6.21 மணி முதல் 5.4.2025 அன்று இரவு 11.25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உருவாகும். வெளியூர் பயணம் மற்றும் புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும். தடாலடியான முடிவுகளை எடுக்க கூடாது. விநாயகர் வழிபாடு இன்பங்களை ஏற்படுத்தும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×